No products in the cart.
Jan 6, 2021 – சந்தோஷத்தின் ஆசீர்வாதங்கள்!
“கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்” (சங். 37:4).
கர்த்தரிடத்தில் சந்தோஷமாய், மனமகிழ்ச்சியாயிருந்தால் நீங்கள் பெற்றுக் கொள்ளுகிற ஆசீர்வாதங்கள் எண்ணற்றவையாயிருக்கும். அதில் ஒரு முக்கியமான ஆசீர்வாதத்தை தாவீது ராஜா சுட்டிக் காண்பித்து, ‘அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்’ என்று குறிப்பிடுகிறார்.
உதாரணமாக, உங்கள் கணவனோ அல்லது உங்கள் பிள்ளைகளோ இரட்சிக்கப்பட வேண்டுமானால், முதலாவது அதற்காக ஜெபியுங்கள். கர்த்தர் நிச்சயமாக இரட்சிப்பார் என்கிற நம்பிக்கை உள்ளத்தில் வரும் வரையிலும் ஜெபித்துக் கொண்டேயிருங்கள். ஜெபித்தபின் மகிழ்ச்சியோடு கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். அவருடைய பொன் முகத்தை நோக்கிப் பார்த்து, ” என் அன்பு இரட்சகரே நீர் என் கணவனையும், பிள்ளைகளையும் இரட்சிப்பிற்குள் கொண்டு வந்து பரிசுத்தவான்களாய் மாற்றப் போகிறபடியினால் உமக்கு ஸ்தோத்திரம்” என்று முகமலர்ச்சியோடு, சொல்லி ஸ்தோத்திரியுங்கள். நிச்சயமாகவே கர்த்தர் அவர்களை இரட்சிப்பார்.
உங்களது மனமகிழ்ச்சி உங்கள் விசுவாசத்தைக் காண்பிக்கிறது. நீங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஏறெடுக்கும் துதியின் சத்தம் கர்த்தர் மேல் வைத்திருக்கிற அன்பை வெளிப்படுத்துகிறது. நீங்கள் உங்கள் பாரத்தையெல்லாம் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்து விட்டு அவருடைய மார்பில் இளைப்பாறுகிறீர்கள் என்பதை உங்களது மலர்ந்த முகமானது தெரிவிக்கிறது.
அநேகர் தங்களுடைய முறுமுறுப்பின் காரணமாக ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுவதில்லை. நீங்கள் ஒருநாளும் முறுமுறுப்போடு தேவ சந்நிதிக்கு செல்லாதேயுங்கள். சங்கீதக்காரன் சொல்லுகிறான், “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்” (சங். 37:4). ஆம், கர்த்தரிடத்தில் நீங்கள் பாரத்தை ஒப்புக்கொடுப்பதும், பின்பு மகிழ்ச்சியோடு அவரிடத்தில் துதித்து மகிழ்வதும் அற்புதத்தை நிச்சயமாகவே வரவழைக்கும்.
உலகப் பிரசித்தி பெற்ற பக்தனாகிய அகஸ்டின் தனது வாலிப வயதில் கர்த்தரை அறியாதவராக, அலைந்து திரிகிறவராக, நோக்கமில்லாதவராக காணப்பட்டார். அவர் தாயார் அவரது இரட்சிப்புக்காக பல ஆண்டுகள் விடாது ஜெபித்தார்கள். ஒரு நாள் மகன் ரோமாபுரிக்கு புறப்பட ஆயத்தமானபோது, தாயின் கவலைக்கு அளவேயில்லை. ‘என் மகன் ரோமாபுரி தேசத்திற்கு போகக்கூடாது ஆண்டவரே’ என்று கதறி ஜெபித்தார்கள். ஆனால் மகனோ அந்த தேசத்திற்கு போய்விட்டார். என்ன செய்வதென்று அறியாத தாய் கர்த்தரிடத்தில் பாரத்தை ஒப்புக்கொடுத்து ஸ்தோத்திரம் செய்தார்கள். கர்த்தர் அற்புதத்தைச் செய்தார்.
ரோமாபுரிக்குச் சென்ற அந்த மகன் அங்குள்ள ஒரு தேவ மனிதர் மூலம் கர்த்தருக்குள் வழிநடத்தப்பட்டார். பெரிய ஊழியராய் மாறினார். ரோமாபுரிக்குச் செல்லக்கூடாது என்ற ஜெபத்திற்கு பதிலளிக்காவிட்டாலும், தாயின் வாஞ்சையை தேவன் நிறைவேற்றினார். தேவபிள்ளைகளே, உங்களை கர்த்தருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து, அவரில் மனமகிழ்ச்சியாயிருங்கள்.
நினைவிற்கு:- “கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மை பாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக் கேட்டு மகிழுவார்கள்” (சங். 34:2).