No products in the cart.
தினம் ஒரு நாட்டின் மாநிலம் – அமோரோனி மேனியா

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – அமோரோனி மேனியா
நாடு – மடகாஸ்கர்
கண்டம் – ஆப்பிரிக்கா
மொத்த பரப்பளவு – 16,141 km2
மக்கள் தொகை – 833,919
தலைநகரம் – அம்போசித்ரா
அதிகாரப்பூர்வ மொழி – Malagasy, French
தொழில் – விவசாயம்
ஜெபிப்போம்
அமோரோனி மேனியா (Amoron’i Mania) என்பது மத்திய மடகாஸ்கரின் வடக்கில் வக்கினங்கராத்ரா பிராந்தியத்தின் எல்லையில் உள்ள ஒரு பிராந்தியம். அமோரோனி மேனியா பிராந்தியம் நான்கு மாவட்டங்களாகவும், 53 கம்யூன்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
அமோரோனி மேனியாவின் முக்கிய பொருளாதாரம் விவசாயம் ஆகும். அமோரோனி மேனியாவின் வடகிழக்கில் அட்ஸினானானா, தென்கிழக்கில் ஃபிடோவினானி, தெற்கில் ஹாட் மாட்சியட்ரா, தென்மேற்கில் அட்சிமோ-ஆண்ட்ரெபானா மற்றும் மேற்கில் மெனாபே உள்ளது. முக்கிய ஈர்ப்புகளில் ஃபாண்ட்ரியானா-வோன்ட்ரோசோ காரிடார், மரோலாம்போ தேசிய பூங்கா, இட்ரெமோ ஆகியவை அடங்கும்.
இந்த பிராந்தியத்தின் மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.
