bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
AppamAppam - Tamil

மே 10 – ஆவியானவரின் முக்கியத்துவம்!

“அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார் ” (கலா. 4:6).

பிதாவானவர் நமக்கு பரிசுத்த ஆவியைக் கொடுத்திருக்கிறார். பரிசுத்த ஆவியின் மூலமாய் உன்னதத்திற்குரிய சகல ஆசீர்வாதங்களையும் கொடுத்திருக்கிறார். ஆனால் அநேகர் பரிசுத்த ஆவியின் முக்கியத்துவத்தையும், பிரயோஜனத்தையும் அறிந்துகொள்ளுவதில்லை. இது எத்தனை பரிதாபமானது!

ஒரு முறை, தாவரவியல் நிபுணர் ஒருவர், மிக அருமையான மாம்பழ ரகம் ஒன்றைக் கண்டுபிடித்தார். அந்த ரகத்தைச் சேர்ந்த இரண்டு செடிகளை இரண்டு பேருக்கு ஆளுக்கு ஒன்றாக அன்போடு பரிசாய்த் தந்தார். ஒருவர் அந்த செடியை நட்டு, உரமிட்டு, தண்ணீர் பாய்ச்சி, கண்ணும் கருத்துமாய் கவனித்ததினால், அந்த மரம் நன்கு வளர்ந்து நல்ல மாம்பழங்களை ஆயிரக்கணக்கில் கொடுத்தது. ஆனால் அடுத்தவரோ, அந்த மரத்தின் விசேஷத்தை அறியாமல், ஏனோ தானோவென்று நட்டு வைத்திருந்தார். அதற்கு தண்ணீர் ஊற்றி, சரியாக பராமரிக்காததினால், நாளடைவில் அந்த செடி பட்டுப்போயிற்று. பட்டுப்போன செடியைப் பார்த்ததும் அதைக் கொடுத்த தாவரவியல் நிபுணருக்கு அதிக துக்கம் ஏற்பட்டது.

கர்த்தர் விலையேறப்பெற்ற பரிசுத்த ஆவியை உங்களுக்குத் தந்திருக்கிறார். ஆனால் இந்த பரிசுத்த ஆவியினால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். பரிசுத்த ஆவியானவரின் முழு பலனையும், நீங்கள் அனுபவிக்கிறீர்களா? அல்லது ஆவியானவரை ஏனோ தானோ என்று அசட்டைப் பண்ணி கிடைத்த வாய்ப்பை வீணடிக்கிறீர்களா?

இயேசுகிறிஸ்துவினுடைய வாழ்க்கையைக் கவனித்துப் பாருங்கள். அவர் பரிசுத்த ஆவியினால் நிரம்பியிருந்ததினால், பாவ சோதனைகளை மேற்கொண்டார். பிசாசுகளைத் துரத்தினார். ஆயிரமாயிரமான அற்புதங்களை நிகழ்த்தினார். இந்த ஆவியானவருடைய கிருபையினாலே, மனுஷருடைய இருதயங்களிலுள்ளவைகளை அறிந்துகொண்டார். வல்லமையாய்ப் பிரசங்கித்தார். இடைவிடாமல் ஊழியம் செய்தார்.

ஆதி அப்போஸ்தலர்களைப் பாருங்கள்! அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரம்பியிருந்ததினாலே தங்கள் ஊழியங்களில் மூவாயிரம், ஐயாயிரம் பேர் என்று ஆத்தும அறுவடையை பெரிய அளவில் செய்தார்கள். இயேசுவே இரட்சகர் என்பதை நிரூபித்தார்கள். அற்புதங்களினாலும், அடையாளங்களிலும் புறஜாதியாரை வேதவசனத்திற்கு கீழ்ப்படியப் பண்ணினார்கள். இன்று நீங்களும் அதே ஆவியானவரைப் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் ஆவியானவரை நீங்கள் எவ்விதமாய் செயல்படுத்துகிறீர்கள்? சிலர் தங்களோடுகூட ஆவியானவர் இருக்கிறார் என்கிறதையே மறந்து போனார்கள். தங்களுடைய சரீரத்தினாலும், தங்களுடைய ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்த மறந்துபோனார்கள் (1 கொரி. 6:20).

தேவபிள்ளைகளே, உங்களுக்குள்ளிருக்கும் ஆவியை அனல் மூட்டி எழுப்புங்கள். ஆவியின் வரங்களினால் நிரப்பப்படுங்கள். ஆவியின் இனிமையான கனிகள் உங்களில் காணப்படட்டும்.

நினைவிற்கு:- பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்” (அப். 1:8).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.