bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
AppamAppam - Tamil

ஏப்ரல் 25 – நீடிய சாந்தமுள்ளது!

“அன்பு நீடிய சாந்தமும், தயவுமுள்ளது” (1 கொரி. 13:4).

அன்பின் பதினைந்து இனிய சுபாவங்களை அப். பவுல் வரிசைப்படுத்தி குறிப்பிடுகிறார். அவை அழகிய தோட்டத்தில் நறுமணமுள்ள பதினைந்து மலர்களாக வாசனையைப் பரிமளிக்கின்றன. அன்புதான் ஒரு மனிதனுக்கு இனிமையான சுபாவங்களைத் தந்து நற்கந்தமாய் வாசனை வீசச் செய்கிறது. அன்பின் குணாதிசயங்கள் அளவற்றவை.

அவற்றில், “அன்பு நீடிய சாந்தமுள்ளது” என்னும் குணாதிசயமே முதன்மையானது. அன்பு இருந்தால் எவ்வளவு கொடுமைகளையும், தீங்குகளையும் பொறுமையாய் சகிக்க முடியும். அன்பிருக்கும்போதுதான், ஒரு கன்னத்தில் அறைகிறவர்களுக்கு மறு கன்னத்தைக் காண்பிக்க முடியும். அன்பு பழிக்குப்பழி வாங்குவதில்லை. பொறுமையாய் சகிக்கும். பொறுமையாய் சகிப்பது, கோழைத்தனமல்ல; அது பெருந்தன்மையான தெய்வீக குணம்.

குடும்ப உறுப்பினர்களின் இடையே நிலவும் அன்பே, அக்குடும்பத்தின் ஒற்றுமைக்கும், சந்தோஷத்திற்கும் அடிப்படையாக அமைகிறது. அன்புடன் காத்திருக்கும் பல சம்பவங்களை நாம் நமது அன்றாட வாழ்க்கையில் காண்கிறோம். திருமணத்திற்காக காத்திருக்கும் பிள்ளைகள், கணவன் மனம்திரும்பிவரக் காத்திருக்கும் மனைவி, வெளிதேசம் சென்றிருக்கும் தந்தை திரும்புவதற்காக காத்திருக்கும் பிள்ளைகள் என பல உதாரணங்கள் உண்டு.

ஆபிரகாம் லிங்கனுக்கு அரசியலில் ஒரு பெரிய விரோதி இருந்தான். அவன் பெயர் ஸ்டான்டன். புகழ் பெற்ற லிங்கனை அவன் வாய் கூசாமல், மிகவும் தாக்கி பேசவும், எழுதவும் செய்தான். ஆனால் ஆபிரகாம் லிங்கனோ ஒரு வார்த்தையையும் அவனுக்கு விரோதமா பேசவில்லை.

யுத்தகாலம் வந்தது. ஆபிரகாம் லிங்கன் தன்னை எதிர்த்த ஸ்டான்டனையே யுத்த மந்திரியாக நியமித்து, அவனுக்கிருந்த திறமைகளை மெச்சிப்பேசினார். அந்த அன்பின் செயல் ஸ்டான்டனை உடைத்தது. தேசத்திற்காகவும் லிங்கனுக்காகவும் முழுபெலத்தோடு உழைத்தான். லிங்கனின் மரணத்தில் அவன் மிகவும் தேம்பி அழுது, “உலகத்தோற்ற முதலிலிருந்து, லிங்கனைப்போல அருமையான, அன்பான ஆட்சியாளர் இருந்ததில்லை” என்று சாட்சி கொடுத்தான். ஆம், அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது.

யாக்கோபு ராகேலின் மேல் அளவில்லாத அன்பு வைத்தபடியால் அவளுக்காக எந்த தியாகமும், அடிமை வேலையும் செய்ய ஆயத்தமாயிருந்தான். பதினான்கு ஆண்டுகள் பொறுமையாய் தன் மாமனாரைச் சேவித்தான். வேதம் சொல்லுகிறது: “இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக ஊழியஞ் செய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்” (ஓசியா 12:12). கர்த்தரும்கூட உங்கள்மேல் அன்பு வைத்து, உங்கள் மனம் திரும்புதலுக்காக நீடிய பொறுமையுடன் காத்திருக்கிறார். உங்களுக்காக ஜீவனைக் கொடுத்தவர், உங்கள்மேல் கரிசனையில்லாமல் இருப்பாரோ? உங்களுக்காக இரத்தம் சிந்தினவர் உங்கள்மேல் அன்பு செலுத்தாமலிருப்பாரோ? தேவபிள்ளைகளே, இயேசுவின் சாந்தக்குணத்தையும், அன்பையும் நீங்கள் சுதந்தரித்துக் கொள்ளுவீர்களா?

நினைவிற்கு:- “ஒருவரும் கெட்டுப்போகாமல், எல்லோரும் மனம் திரும்ப வேண்டு மென்று விரும்பி நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்” (2 பேதுரு 3:9).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.