No products in the cart.
ஆகஸ்ட் 04 – தேவ சாயலின்படி….!
“நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக” (ஆதி. 1:26).
மனுஷனை தேவன் தம்முடைய சாயலாகவே சிருஷ்டிக்கும்படி சித்தங்கொண்டார். “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்” (ஆதி. 1:27). கர்த்தர் ஆவியாய் இருக்கிறார். ஆவியாய் இருக்கிற தேவன் மனுஷனுக்குள் தம்முடைய ஆவியை வைத்ததினால்தான் மனிதனால் தேவனோடு கூட, ஆவியிலே உறவாடி மகிழ முடிகிறது.
சற்று சிந்தித்துப்பாருங்கள்! உங்களை அறியாமலேயே உள்ளம் தேவனோடு ஐக்கியம்கொள்ள ஏங்குகிறது. ஒரு தவளையோடோ, எலியோடோ ஐக்கியம் வைத்துக் கொள்ள நீங்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. ஏனென்றால், மனிதன் சிருஷ்டிக்கப்பட்ட விதம் வேறு, மிருகங்களும், ஊரும் பிராணிகளும், மற்ற ஜீவ ஜந்துக்களும் சிருஷ்டிக்கப்பட்ட விதம் வேறு.
தவளைகள் தங்களுடைய இனத்தோடுகூட ஐக்கியம் வைத்துக்கொள்ளுகின்றன. எலிகள் தங்களுடைய இனத்தோடுகூட ஐக்கியம் வைத்துக்கொள்ளுகின்றன. ஆனால் நீங்களோ, தேவசாயலால் சிருஷ்டிக்கப்பட்டபடியினால், உங்களுக்குள்ளே தேவ ஆவியானவர் வாசம் பண்ணுகிறபடியினால் தேவனோடு ஐக்கியம் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
தாவீது, அந்த ஐக்கியத்தை ஏங்கி எதிர்பார்த்து, “மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது. நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?” (சங். 42:1,2) என்று சொல்லுவதைப் பாருங்கள்.
நீங்கள் தேவனோடுகூட உங்களுடைய சரீரத்தினாலோ, உங்களுடைய அறிவின் அடிப்படையிலோ ஐக்கியம்கொள்ள இயலாது. அதே நேரத்தில் நீங்கள் உங்களுடைய ஆவியினாலே அவரோடுகூட ஐக்கியம்கொள்ள முடியும். நீங்கள் ஜெபிக்கும்போது உங்களுடைய ஆவியானது தேவனோடுகூட இணைகிறது. ஆவியிலே அவரோடுகூட உறவாடுகிறீர்கள். இயேசு சொன்னார்: “தேவன் ஆவியாயிருக்கிறார். அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்” (யோவான் 4:24).
உலகத்தில் பாவம் பிரவேசித்து மனுஷனுடைய இருதயம் கறைப்பட்டபடியினாலே ஆவிக்குரிய ஐக்கியம் தடைபட்டது. ஆனாலும் கர்த்தர் மனுஷனோடு இன்னும் உறவாட விரும்பி பாவங்களுக்காக சிலுவையிலே இரத்தம் சிந்தியதோடல்லாமல், பரிசுத்த ஆவியை ஊற்றிக் கொடுக்கவும் செய்தார். அந்த பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வாசமாயிருக்கிறபடியினாலே கர்த்தரோடுகூட இன்னும் நெருங்கி உங்களால் ஜீவிக்க முடிகிறது.
தேவபிள்ளைகளே, விசுவாசத்தோடுகூட, “எங்கள் தேவன் ஆவியாய் இருக்கிறார். எங்களுக்குள்ளே ஆவியை அவர் வைத்திருக்கிறார். எங்கள் ஆவி கர்த்தரில் களிகூரும்படி பரிசுத்த ஆவியானவரை எங்களுக்குள் தந்திருக்கிறார். ஆகவே கர்த்தரோடு ஐக்கியங்கொள்ளுவோம்” என்று சொல்லி தேவனை ஸ்தோத்திரியுங்கள். தேவனோடுகூட உள்ள ஐக்கியத்தை என்றென்றும் காத்துக் கொள்ள முற்படுங்கள்.

நினைவிற்கு:- “கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்” (சங். 149:4).