No products in the cart.

தினம் ஓர் ஊர் – மார்க்கையன்கோட்டை (Markayankottai) – 23/10/23
தினம் ஓர் ஊர் – மார்க்கையன்கோட்டை (Markayankottai)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தேனி
மக்கள் தொகை – 6,135
கல்வியறிவு – 76%
மக்களவைத் தொகுதி – தேனி
சட்டமன்றத் தொகுதி – போடிநாயக்கனூர்
மாவட்ட ஆட்சியர் – Sis. R.V.Shajeevana (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Dongare Pravin Umesh (I.P.S)
District Revenue Officer – Sis. Jeyabharathi
District Forest Officer – Bro. S.Kowtham
மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. O.Panneerselvam (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. M.Ganesan
நகராட்சி தலைவர் – Sis. B.Renupriya
நகராட்சி துணை தலைவர் – Bro. M.Selvam
Principal District Judge – Sis. K. Arivoli
Judicial Magistrate – Bro. A.Ramanathan (Uthamapalayam)
Subordinate Judge – Bro. M.Shivaji Chellaih (Uthamapalayam)
District Munsif – Bro. A.Saravanasenthilkumar (Uthamapalayam)
ஜெபிப்போம்
மார்க்கையன்கோட்டை (Markayankottai) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் அமைந்துள்ளது. இது தேனி – கம்பம் செல்லும் சாலையில் 22 கி.மீ. தொலைவில் உள்ளது. மார்க்கையன்கோட்டை பேரூராட்சி முல்லைப் பெரியாற்றின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. மார்க்கையன்கோட்டை பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியானது போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் Bro. O.Panneerselvam அவர்களுக்காகவும், தேனி மக்களவைத் உறுப்பினர் Bro. P. Ravindhranath அவர்களுக்காகவும் ஜெபிப்போம். தேவ கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
மார்க்கையன்கோட்டை பேரூராட்சியானது 5.8 ச.கி.மீ. பரப்பும், 12 வார்டுகளும், 48 தெருக்களும் கொண்டது. நகராட்சி ஆணையர் Bro. M.Ganesan அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. B.Renupriya அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. M.Selvam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற பணிகளில் தேவசித்தம் நிறைவேறிட ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளுக்காகவும், வார்டு உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம்.
மார்க்கையன்கோட்டையின் மொத்த மக்கள் தொகை 6,135 ஆகும். இதில் 3,094 ஆண்கள் மற்றும் 3,041 பெண்கள் ஆவர். இந்த நகரில் மொத்தம் 1,788 குடும்பங்கள் வசிக்கின்றார்கள். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காக ஜெபிப்போம். அவர்களுடைய இரட்சிப்பிற்காகவும், தேவைகளுக்காக ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தருடைய ஆளுகை உண்டாயிருக்க ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம்.
மார்க்கையன்கோட்டையின் கல்வியறிவு விகிதம் 73.3% ஆகும். இதில் ஆண்கள் 81.35% ஆகவும், பெண்கள் 65.27% கல்வியறிவும் பெற்றுள்ளார்கள். இந்த பேரூராட்சியில் படிக்கின்ற பிள்ளைகளுக்காக ஜெபிப்போம். கர்த்தர் அவர்களுக்கு ஞானத்தை கொடுக்கும்படி ஜெபிப்போம். ஆசிரியர்களுக்காக ஜெபிப்போம். அவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
இந்த பேரூராட்சி முல்லைப் பெரியாற்றின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி பசுமையாக இருப்பதால், இங்கு விளைவிக்கப்படும் நெல், தென்னை மற்றும் வாழை போன்றவைகள் வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த நகரத்தில் உள்ள விவசாயிகளுக்காக அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற தொழில் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம். மேலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்களின் கையின் பிரயாசங்களுக்காக ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு அவர்களை வழிநடத்திட ஜெபிப்போம்.
மார்க்கையன்கோட்டை பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் கர்த்தருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள சிறுபிள்ளைகளுக்காக, வாலிப பிள்ளைகளுக்காக ஜெபிப்போம். இவர்களுடைய எதிர்காலத்தை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.