No products in the cart.

தினம் ஓர் ஊர் – இளையாங்குடி (Ilayangudi) – 04/02/25
தினம் ஓர் ஊர் – இளையாங்குடி (Ilayangudi)
மாவட்டம் – சிவகங்கை
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 1,09,267
கல்வியறிவு – 88.94
மக்களவைத் தொகுதி – சிவகங்கை
சட்டமன்றத் தொகுதி – மானாமதுரை
மக்களவை உறுப்பினர் – Bro. Karti P.Chidambaram (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Sis. A.Tamilarasi (MLA)
மாவட்ட ஆட்சியர் – Sis. Asha Ajith (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. S.Selvaraj (I.P.S)
District Revenue Officer – Bro. Shanmugavelu
நகராட்சி ஆணையர் – Sis. S.Pandeeswari
நகராட்சி தலைவர் – Bro. CM.Durai Ananth
நகராட்சி துணை தலைவர் – Bro. M.Karkannan
Principal District and Sessions Judge – Sis .K.Arivoli (Sivagangai)
District Munsif cum Judicial Magistrate – Bro. M.Hari Ramakrishnan (Ilayangudi)
ஜெபிப்போம்
இளையங்குடி என்பது தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது சுற்றியுள்ள தாலுகாக்களின் அரசாங்கத்தின் மையமாகும். இந்த நகரத்தில் தமிழ் ரவுடர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தமிழ் முஸ்லிம் சமூகம் பாரம்பரியமாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது. பஜார் (கடை தெரு) மத்திய வணிக மாவட்டமாகும்.
இளையாங்குடி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் இளையான்குடி, சாலைகிராமம், சூராணம், தாயமங்கலம், திருவுடையார்புரம் என 5 உள்வட்டங்களும், 52 வருவாய் கிராமங்களும் உள்ளன. இவ்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காக ஜெபிப்போம்.
இளையங்குடி முதன்முதலில் கிமு 3 ஆம் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிமு 1 ஆம் நூற்றாண்டில், ஜைன மதத்தைப் பின்பற்றுபவர்கள் தமிழ்நாட்டை அடைந்தனர். கிபி 15 ஆம் நூற்றாண்டில், முஸ்லீம்களின் பெரிய மக்கள்தொகை அருகிலுள்ள பகுதிகளிலிருந்து இளையங்குடிக்கு இடம்பெயர்ந்தனர்.
இந்த நகரமானது 21.64 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 144 தெருக்களும் கொண்டுள்ளது. நகராட்சி ஆணையர் Sis. S.Pandeeswari அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. CM.Durai Ananth அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. M.Karkannan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
இளையங்குடி நகரம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மானாமதுரை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Sis. A.Tamilarasi அவர்களுக்காகவும், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Karti P.Chidambaram அவர்களுக்காகவும் ஜெபிப்போம். ஆவியானவரின் பாதுகாப்பு கரம் இவர்களோடு இருக்கும்படி ஜெபிப்போம்.
இளையாங்குடியில் 1,09,267 மக்கள் உள்ளனர். இதில் 53,988 ஆண்களும், 55,279 பெண்களும் இருக்கிறார்கள். இவ்வட்ட மக்கள்தொகையில் 77.3% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் 28,395 குடும்பங்கள் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 69.94%, இசுலாமியர்கள் 17.56%, கிறித்தவர்கள் 12.37%% & பிறர் 0.03% ஆகவுள்ளனர். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.
இந்த இளையான்குடி நகரத்தில் உணவு சம்பந்தப்பட்ட வியாபாரங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இந்த வியாபாரம் எந்த தடை இல்லாமல் நடக்கவும், வியாபாரிகளுடைய பொருளாதாரம் மேம்படவும் ஜெபிப்போம்.
இளையான்குடி நகரத்திற்காக ஜெபிப்போம். இளையான்குடி நகரத்தில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்களின் இரட்சிப்பிற்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். இளையான்குடியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கிற தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இளையான்குடி நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.