Appam, Appam - Tamil

மார்ச் 02 – கிறிஸ்துவின் அன்பு!

“உமது நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது (உன். 1:2).

கர்த்தருடைய அன்பை எதற்கு ஒப்பிடலாம் என்று தியானித்த பக்தன்,பொன் செல்வங்களுக்கு ஒப்பிடலாமா அல்லது அரண்மனைகளுக்கும், அந்தஸ்துகளுக்கும் ஒப்பிடலாமா என்றெல்லாம்எண்ணியிருந்திருக்கக்கூடும். முடிவாக, அவருடைய நேசத்தைதிராட்சரசத்துக்கு ஒப்பிடுவதைப் பார்க்கிறோம்.

காரணம் என்ன? திராட்சப்பழம் பிழியப்படும்போது செந்நிறமாக அந்தசாறு வடிகிறது. இயேசு தன்னுடைய அன்பின் உச்சிதத்தை வெளிப்படுத்தவிரும்பியபோது திராட்சப்பழம் பிழியப்படுவதுபோல கல்வாரிசிலுவையிலே பிழியப்பட்டார். அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டுதன்னுடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் ஊற்றிக்கொடுத்தார். அந்தஅன்புக்கு இணையான அன்பு ஒன்றுமே இல்லை.

இயேசுகிறிஸ்துவினுடைய அன்பை தியானிக்கும்போது, அவர் நம்மோடுஇருக்கிற தெய்வமாய் அன்புகூர்ந்ததை உணருகிறோம். நமக்காகஎல்லாவற்றையும் சிருஷ்டித்த சிருஷ்டி கர்த்தராய் அவரைக் காண்கிறோம். தகப்பனைப்போல மனமிரங்குகிற அன்பைக் காண்கிறோம். தாய்தேற்றுவதுப்போல தேற்றுகிற அன்பைப் பார்க்கிறோம்.

இன்னும் அவர் ஆலோசனைக் கர்த்தராகவும், போதகராகவும், சகோதரனாகவும், சிநேகிதனாகவும், ஆத்தும நேசராகவும்அன்புகூருகிறார். அந்த எல்லா வகையான அன்பைப் பார்க்கிலும் கல்வாரிசிலுவையிலே அடிக்கப்பட்டு நொறுக்கப்பட்ட அன்பு ஒப்பிடவேமுடியாதபடி மிகப் பெரியதாயிருக்கிறது. ஆகவேதான் அவருடைய நேசம்திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது என்று வேதம் சொல்லுகிறது.

இயேசுகிறிஸ்து தமது ஊழியத்தின் ஆரம்ப நாட்களில் தண்ணீரைதிராட்சரசமாய் மாற்றினார். திருமண வீட்டில் ஏற்பட்ட குறைவைநிறைவாக்கி அற்புதம் செய்தார். அந்த திராட்சரசத்தைருசித்தவர்களெல்லாம் முந்தின திராட்சரசத்தைப் பார்க்கிலும் பிந்தினதிராட்சரசம் இனிமையாய் இருக்கிறதைக் கண்டார்கள். ஆம், அவருடையஅன்பு நம்முடைய குறைகளையெல்லாம் நிறைவாக்குகிறது.

அவரது ஊழியத்தின் கடைசி நாள் வந்தது. கெத்செமனே தோட்டத்துக்குச்செல்லுவதற்கு முன்பு தன் சீஷர்களோடு கடைசியாகபோஜனம்பண்ணினார். திராட்சரசத்தை கையில் எடுத்து ‘இதுஉங்களுக்காக சிந்தப்படுகிற என்னுடைய புது உடன்படிக்கையின்இரத்தமாய் இருக்கிறது’ என்றார். ஆம். ஊழியத்தின் ஆரம்பத்தில்தண்ணீரை திராட்சரசமாக்கினவர், முடிவிலே திராட்சரசத்தை தம்முடையஇரத்தம் என்று கூறினார்.

சீஷர்கள் அன்றைக்கு அந்த அர்த்தத்தின் ஆழத்தை புரிந்துகொள்ளாமல்இருந்திருக்கக்கூடும். ஆனால், மறுநாள் கல்வாரி சிலுவையிலே ஆணிகள்கடாவப்பட்டு, சவுக்கினால் அடிக்கப்பட்டு, முள்முடி சூட்டப்பட்டு, விலாவிலே குத்தப்பட்டு, தன் சரீரத்தைப் பிழியப்படஒப்புக்கொடுத்தபோதுதான் அவருடைய நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது என்பதை சீஷர்கள் அறிந்துகொண்டார்கள்.

தேவபிள்ளைகளே, உங்களுக்காக தன்னையே அர்ப்பணித்த அந்த தேவகுமாரனை நோக்கிப்பாருங்கள். அவருடைய சரீரத்தில் இருந்துசொட்டுச்சொட்டாய் வழிவதும், கிழிக்கப்பட்ட விலாவிலிருந்துவெளிவருவதும், கடாவப்பட்ட ஆணிகள் வழியாய் கசிந்துவருவதும்அவருடைய அன்பேயாகும்.

நினைவிற்கு:- “என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமேஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலேபிழைத்திருக்கிறேன்” (கலா. 2:20).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.