situs toto musimtogel toto slot musimtogel link musimtogel daftar musimtogel masuk musimtogel login musimtogel toto
Uncategorized

நவம்பர் 3 – உம்முடைய ராஜ்யம் வருவதாக!

“உம்முடைய ராஜ்யம் வருவதாக (மத். 6:10). 

கர்த்தருடைய ராஜ்யத்தை ஆவலோடு எதிர்பார்த்து, “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று சொல்லி ஜெபிக்க கடமைப்பட்டிருக்கிறோம். ஆம், நம் ஆண்டவருக்கென்று ஒரு ராஜ்யம் உண்டு. அதிலே அவர் இராஜாதி இராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தராகவும் அரசாளுகிறார்.

இயேசு பிலாத்துவுக்கு முன்பாக நின்றபொழுது, பிலாத்து இயேசுவைப் பார்த்து “நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு, நீர் சொல்லுகிறபடிதான் என்றார்” (மத். 27:11). ஆனால் என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல” என்று தெளிவாய் பதிலளித்தார்.

ஆம், அவருடைய இராஜ்யம் ஆன்மீக இராஜ்யம். அந்த இராஜ்யத்தைக் கொண்டுவரவே இயேசு இந்த பூலோகத்திற்கு வந்தார். “தேவனுடைய ராஜ்யம்” என்று சொல்லும்பொழுது அதிலே மூன்று பகுதிகள் உண்டு.

முதலாவது, அது நமக்குள்ளே ஸ்தாபிக்கப்படுகிற ஆவிக்குரிய இராஜ்யம், தேவனுடைய இராஜ்யம் நமக்குள் வந்திருக்கிறதே (மத். 12:28) என்று இயேசு சொன்னார். ஆம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தேவனுடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். அவருடைய இராஜ்யம் நமக்குள்ளே ஸ்தாபிக்கப்படும்போது, எந்த அசுத்த ஆவியும், சாத்தானும் நம்மில் ஆளுகை செய்ய முடியாது. நம்முடைய வாழ்க்கையின் ஆளுகையை கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுப்போமாக!

ஒரு மனிதன் தன்னுடைய பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு சிலுவையண்டை வரும்பொழுது, அவன் பொல்லாத பிசாசின் கரங்களிலிருந்தும், இருளின் ஆதிக்கத்திலிருந்தும், விடுதலையாகி ஆவிக்குரிய இராஜ்யத்திலே தேவனோடுகூட, அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடுகூட இருக்கிற புதிய இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கிறான்.

இரண்டாவதாக, தேவனுடைய இராஜ்யம் என்பது எழுத்தின்படியான இராஜ்யம். அவர் இந்த பூமியிலே அரசாளப்போகிற ஆயிர வருட அரசாட்சி. அந்த இராஜ்யம் பூரணமான சமாதானமும், சந்தோஷமும் நிறைந்ததாயிருக்கும். அங்கே லஞ்சம், லாவண்யம், அநீதி, கொள்ளைகள், கொலைகள் இருப்பதில்லை.

இயேசுகிறிஸ்து திரும்ப வரும்பொழுது அந்த இராஜ்யத்தை பூமியிலே ஸ்தாபிப்பார். வேதம் சொல்லுகிறது, “அவருடைய ராஜ்யத்திற்கு முடிவிராது” (லூக். 1:31,33). “ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான். அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின. அவர்சதா காலங்களிலும் ராஜ்யபாரம்பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின” (வெளி. 11:15). “கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும் பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்” (1 தெச. 4:16).

மூன்றாவதாக, தேவனுடைய இராஜ்யம் என்று அழைக்கப்படுவது பரலோக இராஜ்யத்தைக் குறிக்கிறது. அந்த நித்திய ஒளிமயமான தேசத்தைக் குறிக்கிறது. அங்கே ஆயிரம் பதினாயிரமான தேவ தூதர்கள் கர்த்தரை இரவும் பகலும் துதித்து ஆராதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தேவபிள்ளைகளே, எவருடைய பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் மாத்திரமே பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும்.

நினைவிற்கு:- “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன் (சங். 23:6).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.