Daily Updates

தினம் ஓர் ஊர் – ஹைவேவிஸ் (Highwavys) – 26/10/23

தினம் ஓர் ஊர் – ஹைவேவிஸ் (Highwavys)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – தேனி

மக்கள் தொகை – 4,882

கல்வியறிவு – 62.72 %

மக்களவைத் தொகுதி – தேனி

சட்டமன்றத் தொகுதி – ஆண்டிப்பட்டி

மாவட்ட ஆட்சியர் – Sis. R.V.Shajeevana (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Dongare Pravin Umesh (I.P.S)

District Revenue Officer – Sis. Jeyabharathi

District Forest Officer – Bro. S.Kowtham

மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. A.Maharajan (MLA)

நகராட்சி ஆணையர் – Bro. M.Ganesan

நகராட்சி தலைவர் –  Sis. B.Renupriya

நகராட்சி துணை தலைவர் – Bro. M.Selvam

Principal District Judge  – Sis. K. Arivoli

Judicial Magistrate  – Bro. A.Ramanathan (Uthamapalayam)

Subordinate Judge  – Bro. M.Shivaji Chellaih (Uthamapalayam)

District Munsif  – Bro. A.Saravanasenthilkumar (Uthamapalayam)

ஜெபிப்போம்

ஹைவேவிஸ் (Highwavys) தமிழ்நாடு மாநிலத்தில் தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும். மேகங்கள் தொட்டுச் செல்லும் மேகமலை பகுதியை ஹைவேவிஸ் மலைப்பகுதியாக அழைக்கப்படுகிறார்கள். இப்பேரூராட்சியானது தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்தது. இவை கடல் மட்டத்திலிருந்து 1500 மீ உயரத்தில் அமைந்துள்ளது.  ஹைவேவிஸ் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

இப்பகுதியானது தேயிலை தோட்டங்களை கொண்ட அழகிய மலைக்கிராமங்கள் ஆகும். மேலும் இப்பகுதியானது மலை மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியாக உள்ளது. ஹைவேவிஸ் இப்பேரூராட்சிக்குட்பட்ட கிராமங்கள் மேகமலை, மணலாறு, அப்பர்மணலாறு, வெண்ணியாறு, மகராஜன்மெட்டு, இரவங்கலாறு ஆகும். இப்பேரூராட்சியில் உள்ள கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் ஜெபிப்போம்.

இப்பகுதியில் தேயிலை, காப்பி, மிளகு உள்ளிட்ட பணப்பயிர்கள் விவசாயம் செய்யப்படுகின்றன. இப்பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இதன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தென்பழநியில் இருந்து ஹைவேவிஸ் கிராமத்துக்கு 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. இந்த பேரூராட்சியில் உள்ள தோட்ட தொழிலாளர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியானது ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் Bro. A.Maharajan அவர்களுக்காகவும், தேனி மக்களவைத் உறுப்பினர் Bro. P. Ravindhranath அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை உண்மையாகவும், தேவ பயத்தோடு செய்யவும் ஜெபிப்போம்.

ஹைவேவிஸ் பேரூராட்சியானது 46.82 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 15 தெருக்களும் கொண்டது.  இந்த நகரத்தில் உள்ள ஒவ்வொரு வார்டுகளுக்காகவும், வார்டு உறுப்பினர்களுக்காகவும் மக்களுக்காகவும் ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை கொண்டு செயல்பட ஜெபிப்போம்.

இந்த நகரத்தில் மொத்தம் 4,882 மக்கள் இருக்கிறார்கள். இங்குள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், தேவைகளுக்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தருடைய வல்லமையான கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். குடும்பத்தின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். குடும்பங்களில் இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.