Daily Updates

தினம் ஓர் ஊர் – வேப்பத்தூர் (Veppathur) – 15/01/24

தினம் ஓர் ஊர் – வேப்பத்தூர் (Veppathur)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – தஞ்சாவூர்

மக்கள் தொகை – 7,949

கல்வியறிவு – 83.9%

மக்களவைத் தொகுதி – மயிலாடுதுறை

சட்டமன்றத் தொகுதி – திருவிடைமருதூர்

District Collector – Bro. Deepak Jacob, (I.A.S)

Additional Collector (Development) – Bro. H.S.Srikanth (I.A.S)

Deputy Inspector General of Police – Bro. T.Jayachandran (I.P.S)

Superintendent of Police – Bro. Ashish Rawat (I.P.S)

District Revenue Officer – Bro. T.Thiyagarajan

மக்களவை உறுப்பினர் – Bro. S.Ramalingam (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Govai.Chezhian

Mayor – Bro. Sun. Ramanathan

Commissioner & Special Officer – Sis. R. Maheshwari

Vice Mayor – Sis. Anjugam Boopathy

Principal District Judge  – Sis. Jacintha Martin (Thanjavur)

Presiding Officer and

Additional District Judge – Bro. G.Sundarajan (Thanjavur)

District Munsif cum Judicial Magistrate – Bro. N.Sivapalani

ஜெபிப்போம்

வேப்பத்தூர் (Veppathur) தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும். வேப்பத்தூர் முதலில் நிம்மாபுரம் என்று அழைக்கப்பட்டது (சமஸ்கிருதத்தில் “வேம்பு கிராமம்” என்று பொருள்). இது திருவிடைமருதூரில் இருந்து சுமார் 5 கிமீ தொலைவிலும் கும்பகோணத்தில் இருந்து சுமார் 9 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. வேப்பத்தூர் பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் Bro. Govai.Chezhian அவர்களுக்காகவும், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் Bro. S.Ramalingam அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

வேப்பத்தூர் பேரூராட்சி 15.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 51 தெருக்களும் கொண்டுள்ளது. இந்த நகரத்தின் Mayor Bro. Sun. Ramanathan அவர்களுக்காகவும், Commissioner & Special Officer Sis. R. Maheshwari அவர்களுக்காகவும், Vice Mayor Sis. Anjugam Boopathy அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள வார்டுகளுக்காகவும், வார்டு கவுன்சிலர்களுக்காகவும் ஜெபிப்போம்.

வேப்பத்தூர் நகரில் மொத்தம் 7,949 மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் ஆண்கள் 3,990 மற்றும் பெண்கள் 3,959 உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 1,950 குடும்பங்கள் வசிக்கின்றன. மொத்த மக்கள் தொகையில் இந்துகள் 87.31%  பேரும், முஸ்லீம் 0.21% பேரும், கிறிஸ்தவர்கள் 12.47% பேரும், சீக்கியர் 0.01% உள்ளனர். இப்பேரூராட்சியில் வாழும் மக்களுக்காக ஜெபிப்போம்.

வேப்பத்தூரின் கல்வியறிவு விகிதம் 83.9% ஆகும். தஞ்சாவூர் மாவட்டத்தின் 82.6% கல்வியறிவு விகிதத்துடன் ஒப்பிடுகையில் வேப்பத்தூர் அதிக கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. வேப்பத்தூரில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 90.39% மற்றும் பெண்களின் கல்வியறிவு விகிதம் 77.36% ஆகும்.

இந்த நகரத்தின் பொருளாதாரம் முக்கியமாக விவசாயம் சார்ந்தது. பேரூராட்சியை சுற்றியுள்ள வயல்களில் அரிசி, கரும்பு, பருத்தி மற்றும் பச்சைப்பயறு பயிரிடப்படுகிறது. வேப்பத்தூர் டவுன் பஞ்சாயத்தில் மொத்த மக்கள் தொகையில், 3,413 பேர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 357 பேர் விவசாயிகள் மற்றும் 1,915 பேர் விவசாயத் தொழிலாளர்கள் ஆவார்கள். இவர்களுக்காக ஜெபிப்போம்.

வேப்பத்தூர் பேரூராட்சியில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத மக்கள் மத்தியில் கர்த்தருடைய வார்த்தை விதைக்கப்படவும், அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம். வேப்பத்தூர் பேரூராட்சியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.