Daily Updates

தினம் ஓர் ஊர் – வாழப்பாடி (Vazhapadi) – 18/08/24

தினம் ஓர் ஊர்                                          –           வாழப்பாடி (Vazhapadi)

மாநிலம்                                                       –           தமிழ்நாடு

மாவட்டம்                                                    –           சேலம்

பரப்பளவு                                                    –           8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)

மக்கள் தொகை                                        –           80,752

கல்வியறிவு                                                –           73.09%

District Collector and District Magistrate     –           Dr. R. Brindha Devi, I.A.S.

Commissioner of Corporation                                   –           Bro.  Ranjeet Singh, I.A.S.

Additional Collector                                      –           Bro. N.Lalitaditya Neelam, I.A.S.,

Commissioner of Police                                             –           Sis. B. Vijayakumari,I.P.S.,

Superintendent of Police                              –           Bro. A.K. Arun Kabilan, IPS.,

District Revenue Officer and

Additional District Magistrate                                   –           Dr. P. Menaha

Salem Municipality Commissioner               –           Bro. Y.Surendiran

Salem Mayor                                                  –           Bro. A. Ramachandran

Deputy Mayor                                                            –           Sis. Saradha Devi

மக்களவைத் தொகுதி                             –           கள்ளக்குறிச்சி

சட்டமன்றத் தொகுதி                              –           ஏற்காடு

மக்களவை உறுப்பினர்                          –           Bro. Malaiyarasan (MP)

சட்டமன்ற உறுப்பினர்                           –           Sis. G. Chitra (MLA)

Principal District Judge                                  –           Sis. S.Sumathi (Salem)

District Munsif-cum- Judicial Magistrate     –           Sis. S.Shanmathi (Vazhapadi)

 

ஜெபிப்போம்

வாழப்பாடி (Vazhapadi) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சி ஆகும். வாழப்பாடி பேரூராட்சிக்கு மேற்கில் சேலம் 34 கிமீ; கிழக்கில் ஆத்துர் 25 கிமீ; தெற்கில் இராசிபுரம் 40 கிமீ தொலைவில் உள்ளது.

வாழப்பாடி 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 87 தெருக்களையும் கொண்டுள்ளது. இந்த வட்டம் என்பது சேலம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களில் ஒன்றாகும். வாழப்பாடி வட்டம் 64 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது. வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

வாழப்பாடி பேரூராட்சி ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் Sis. G. Chitra அவர்களுக்காகவும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Malaiyarasan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்யும்படி ஜெபிப்போம்.

இந்த தாலுகாவில் மொத்த மக்கள் தொகை 80,752 இருக்கிறார்கள். இதில் 40,852 ஆண்கள் மற்றும் 39,900 பெண்கள் உள்ளனர். கல்வியறிவு பெற்றவர்கள் 28,610 பேரில் 50,808 பேர் ஆண்கள் மற்றும் 22,198 பேர் பெண்கள். மக்கள்தொகையில் இந்துக்கள் 97.25% சதவீதமும், இசுலாமியர்கள் 1.04% சதவீதமும், கிறித்தவர்கள் 1.64% சதவீதமும், மற்றும் பிறர் 0.07% மதத்தினர் வாழ்கின்றார்கள். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களில் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.

வாழப்பாடியில் மொத்தத் 45,783 தொழிலாளர்கள் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களில் 25,726 ஆண்கள் மற்றும் 20,057 பெண்கள் இருக்கிறார்கள். இந்த பகுதியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். அவர்களின் கையின் பிரயாசத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.

இந்த தாலுக்காவில் மொத்தம் 15,646 விவசாயிகள் விவசாயத்தை நம்பி உள்ளனர், அவர்களில் 8,673 பேர் ஆண்கள் மற்றும் 6,973 பேர் பெண்களால் பயிரிடப்படுகிறார்கள். வாழப்பாடியில் 17,669 பேர் விவசாய நிலத்தில் கூலி வேலை செய்கிறார்கள், ஆண்கள் 8,610 பேர், பெண்கள் 9,059 பேர். விவசாய தொழிலை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். விவசாயிகளுக்காக, விவசாய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.

வாழப்பாடி பேரூராட்சிக்காகவும், பேரூராட்சியின் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும் அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம். வாழப்பாடி மக்கள் மத்தியில் கர்த்தர் எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.