Daily Updates

தினம் ஓர் ஊர் – புலியூர் (Puliyur) – 29/06/24

தினம் ஓர் ஊர் – புலியூர் (Puliyur)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – கரூர்

மக்கள் தொகை – 12,720

கல்வியறிவு – 80.92 %

மக்களவைத் தொகுதி – கரூர்

சட்டமன்றத் தொகுதி – கிருஷ்ணராயபுரம்

District Collector – Bro. M. Thangavel, I.A.S

Superintendent of Police – Bro. Prabhakar

District Revenue Officer – Bro. M. Kannan

Project Director – Sis. Sreelekha Thamilchelvan

மக்களவை உறுப்பினர் – Sis. Jothimani (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Sis. K. Sivagama Sundari (MLA)

Mayor – Sis. Kavitha Ganesan

Corporation Commissioner – Bro. N. Ravichandran

Deputy Mayor – Bro. Dharani Saravanan

District Judge  – Bro. R. Shanmuga Sundaram

Chief Judicial Magistrate (Karur) – Bro. C.Sornakumar

Principal District Munsif Judge (Karur) – Sis. T.P.Sridevi

ஜெபிப்போம்

புலியூர் (Puliyur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், கரூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். புலியூர் பேரூராட்சியில் அமராவதி ஆறு பாய்கிறது. கரூர் – திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்த புலியூர் பேரூராட்சி, கரூரிலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இப்பேரூராட்சியானது 9.68 சகிமீ பரப்பும், 73 தெருக்களும் கொண்டுள்ளது. புலியூர் நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களுக்காகவும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளுக்காக ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் Sis. K. Sivagama Sundari அவர்களுக்காகவும், கரூர் மக்களவை உறுப்பினர் Sis. Jothimani அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

புலியூர் பேரூராட்சியில் 12,720 மக்கள் வாழ்கின்றனர். இதில் 6,337 ஆண்கள் மற்றும் 6,383 பெண்கள் உள்ளனர்.  இந்த நகரத்தில் மொத்தம் 3,416 குடும்பங்கள் வசிக்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 97.29%, முஸ்லீம்கள் 0.79%, கிறிஸ்தவர்கள் 1.88% மற்றும் பிற மதங்களை சார்ந்தவர்கள் 0.04% பேர் உள்ளார்கள்.

புலியூரில் சராசரி கல்வியறிவு 69% உள்ளது, இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாக உள்ளது: ஆண்களின் கல்வியறிவு 79% மற்றும் பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இப்பேரூராட்சியில் உள்ள பள்ளிகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

செட்டிநாடு சிமென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் புலியூரில் 1961 இல் நிறுவப்பட்ட ஒரு சிமென்ட் ஆலையைக் கொண்டுள்ளது, பெரும்பாலான மக்கள் நிறுவனத்தின் நகரத்தைச் சேர்ந்தவர்கள். மொத்த மக்கள்தொகையில், 5,582 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 3,667 ஆண்கள் மற்றும் 1,915 பெண்கள்.

புலியூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத மக்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கின்ற தொழிலின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத மக்கள் மத்தியில் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.