No products in the cart.

தினம் ஓர் ஊர் – பி.என்.பட்டி (P.N.Patti) – 12/09/24
தினம் ஓர் ஊர் – பி.என்.பட்டி (P.N.Patti)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – சேலம்
வட்டம் – மேட்டூர்
பரப்பளவு – 39.36 சதுர கிலோமீட்டர்கள் (15.20 sq mi)
மக்கள் தொகை – 25,133
கல்வியறிவு – 76.42%
District Collector and District Magistrate – Dr. R. Brindha Devi, I.A.S.
Commissioner of Corporation – Bro. Ranjeet Singh, I.A.S.
Additional Collector – Bro. N.Lalitaditya Neelam, I.A.S.,
Commissioner of Police – Sis. B. Vijayakumari,I.P.S.,
Superintendent of Police – Bro. A.K. Arun Kabilan, IPS.,
District Revenue Officer and
Additional District Magistrate – Dr. P. Menaha
Mettur Municipal Commissioner – Sis. V. Nithiya
Mettur Municipal Chairman – Bro. S.M.H. Abdul Salam
Mettur Municipal Vice – Chairman – Bro. S.G. Kasiviswanathan
மக்களவைத் தொகுதி – தருமபுரி
சட்டமன்றத் தொகுதி – மேட்டூர்
மக்களவை உறுப்பினர் – Bro. A. Mani (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. S. Sadhasivam (MLA)
Principal District Judge – Sis. S.Sumathi (Salem)
District Munsif – Bro. R.Manivarman (Mettur)
Subordinate Judge – Sis. S.Priya (Mettur)
ஜெபிப்போம்
பி.என்.பட்டி (P.N.Patti) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் மேட்டூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். சேலம் மாவட்டம், பி.என்.பட்டி தேர்வுநிலை பேரூராட்சி ஒரு முக்கிய நகரமாகும். மாவட்ட தலைநகரத்திலிருந்து 48கி.மீ. துரத்தில் இப்பேரூராட்சி அமைந்துள்ளது. சேலம் – மேட்டூர் நெடுஞ்சாலையில் இப்பேரூராட்சி அமைந்துள்ளது.
பி. என். பட்டி தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாகவும், மின்சாரம் உற்பத்தி செய்யும் மேட்டூர் அனல்மின்நிலையம் இப்பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது. மேலும் பி.என்.பட்டி பேரூராட்சியின் எல்லையை ஒட்டி மேட்டூர் அணை அமைந்துள்ளது. இப்பேரூராட்சிக்கு மேற்கில் மேட்டூர் 8 கிமீ., தொலைவிலும்; கிழக்கில் சேலம் 48 கிமீ தொலைவிலும் உள்ளது.
பி.என்.பட்டி நகரம் 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. Mettur Municipal Commissioner Sis. V. Nithiya அவர்களுக்காகவும், Mettur Municipal Chairman Bro. S.M.H. Abdul Salam அவர்களுக்காகவும், Mettur Municipal Vice – Chairman Bro. S.G. Kasiviswanathan அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் Bro. S. Sadhasivam அவர்களுக்காகவும், தர்மபுரி மக்களவை உறுப்பினர் Bro. A. Mani அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
பி.என்.பட்டி நகரமானது 39.36 கிமீ பரப்பும், 58 தெருக்களையும் கொண்டுள்ளது. இப்பேரூராட்சி 6,901 வீடுகளும், 25,133 மக்கள்தொகையும், கொண்டது. இதில் 12,843 ஆண்கள் மற்றும் 12,290 பெண்கள் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்து 96.88%, முஸ்லிம் 1.36%, கிறிஸ்தவர் 1.66% மற்றும் சீக்கியர் 0.01% உள்ளனர். பி.என்.பட்டியில் ஆண்களின் கல்வியறிவு 83.76% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 68.80% ஆகவும் உள்ளது.
பி.என்.பட்டி பேரூராட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். பி.என்.பட்டி நகரத்தில் வாழும் மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவர ஜெபிப்போம். இயேசுகிறிஸ்துவை பற்றி அறியாத மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம். இப்பேரூராட்சியின் முக்கிய தொழிலான விவசாய தொழிலுக்காக ஜெபிப்போம். விவசாயிகளுக்காகவும், விவசாய குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.