No products in the cart.
தினம் ஓர் ஊர் – பவானி (Bhavani) – 07/08/24
தினம் ஓர் ஊர் – பவானி (Bhavani)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – ஈரோடு
மக்கள் தொகை – 459,517
கல்வியறிவு – 77.12%
பரப்பளவு – 2.17 சதுர கிலோமீட்டர்கள் (0.84 sq mi)
District Collector – Bro. Raja Gopal Sunkara I.A.S.
Superintendent of Police – Bro. G. Jawahar, I.P.S.
District Revenue Officer – Bro. S. Santhakumar
Municipality Commissioner – Bro. R. Mohankumar
Chairman – Sis. Sindhuri
Vice – Chairman – Bro. C. Mani
Revenue Inspector – Bro. R. Vincent Raj
Town Planning Inspector – Sis. D.Vasantha
மக்களவைத் தொகுதி – திருப்பூர்
சட்டமன்றத் தொகுதி – பவானி
மக்களவை உறுப்பினர் – Bro. K Subbarayan (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Karuppanan.K.C (MLA)
Principal District and
Sessions Judge – Bro. B.Murugesan (Erode)
Principal District Munsif – Sis. S.Sapna (Bhavani)
Subordinate Judge – Sis. K.Muniraja (Bhavani)
ஜெபிப்போம்
பவானி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும். இது காவிரி ஆறும் பவானி ஆறும் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. இது ஈரோடு மாநகராட்சி எல்லையை ஒட்டி வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நகரமாகும். பவானி நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. பவானி கம்பளத் தொழிலுக்கு பெயர் பெற்றதால், “கம்பளம் நகரம்” என்றும் அழைக்கப்படுகிறது.
இது ஈரோடு நகர முனிசிபல் கார்ப்பரேஷன் வடக்கு சுற்றளவில் அமைந்துள்ளது மற்றும் கோயம்புத்தூரில் இருந்து 105 கிமீ (65 மைல்) மற்றும் திருப்பூர் மற்றும் சேலத்திலிருந்து 60 கிமீ (37 மைல்) தொலைவில் உள்ளது. நகரம் 2.17 சதுர கிலோமீட்டர் (0.84 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.
பவானி வட்டம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தில் கீழ்குறிச்சி, பவானி, கவுந்தப்பாடி என மூன்று உள்வட்டங்களும் 38 வருவாய் கிராமங்களும் உள்ளன. 2012 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதியன்று, பவானி வட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அந்தியூர் உள்வட்டம், அத்தாணி உள்வட்டம், அம்மாபேட்டை உள்வட்டம், பர்கூர் உள்வட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த கிராமங்களை இணைத்து அந்தியூர் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.
இந்த நகரமானது பவானி சட்டமன்றத் தொகுதிக்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இத்தொகுதியின் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சகோதரர் கே. சி. கருப்பண்ணன் அவர்களுக்காகவும், மக்களவைத் தொகுதி உறுப்பினர் சகோதரர் சுப்புராயன் அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
பவானி நகராட்சியின் Commissioner Bro. R. Mohankumar அவர்களுக்காகவும், Chairman Sis. Sindhuri அவர்களுக்காகவும், Vice – Chairman Bro. C. Mani அவர்களுக்காகவும், Revenue Inspector Bro. R. Vincent Raj அவர்களுக்காகவும், Town Planning Inspector Sis. D.Vasantha அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியில் உண்மையோடும், நேர்மையோடும் நடந்துகொள்ளும்படி ஜெபிப்போம்.
இந்நகரம் 459,517 மக்கள்தொகை கொண்டுள்ளது. இந்த மக்கள்தொகையில் 233,314 ஆண்களும், 226,203 பெண்களும் உள்ளார்கள். இவ்வட்ட மக்கள் தொகையில் 68.4% சதவீத பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் 132,152 குடும்பங்கள் இருக்கின்றார்கள். பவானி நகரத்தின் மக்கள் தொகையில் இந்துக்கள் 93.33% சதவீதமும், முஸ்லிம்கள் 4.24% சதவீதமும், கிறிஸ்துவர்கள் 2.35% சதவீதமும், சீக்கியர் 0.01% சதவீதமும் என பல மதத்தினரை சேர்ந்தவர்கள் வாழ்கின்றார்கள். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.
பவானி ஜமக்காளங்கள் மிகவும் புகழ்பெற்றவை. பவானி கம்பளத் தொழிலுக்கு பெயர் பெற்றதால், “கம்பள நகரம்” என்றும் அழைக்கப்படுகிறது; ஊரில் தயாரிக்கப்படும் போர்வைகள் மற்றும் தரைவிரிப்புகள் பவானி ஜமக்கலம் என்று அழைக்கப்படுகின்றன. பவானி ஜமக்கலம் என்பது பவானியில் தயாரிக்கப்படும் போர்வைகள் மற்றும் தரைவிரிப்புகளைக் குறிக்கிறது. இது 2005-06 இல் இந்திய அரசாங்கத்தால் புவியியல் குறியீடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பவானியில், ஜங்கமர்கள் என்று அழைக்கப்படும் நெசவாளர்களின் சமூகம் ஜமக்கலம் எனப்படும் வண்ண கரடுமுரடான நூல்களைப் பயன்படுத்தி ஒரு வகை போர்வையை நெய்கிறார்கள். பவானியில் தயாரிக்கப்படும் ஜமக்காளம், சுவீடன், ஜெர்மனி, இத்தாலி, ஐக்கிய இராச்சியம், அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.[இந்த தொழிலை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
பவானி நகராட்சி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. இங்கு பாரம்பரிய புடவைகள் மற்றும் பிற துணிகளின் உற்பத்திக்கும் பெயர் பெற்றது. இந்த நகரத்தில் உள்ள நெசவாளர் குடும்பங்களுக்காக ஜெபிப்போம். நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்காகவும் அவர்களின் கையின் பிரயாசத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் ஜெபிப்போம்.