No products in the cart.

தினம் ஓர் ஊர் – களியக்காவிளை (Kaliyakkavilai) – 08/09/23
தினம் ஓர் ஊர் – களியக்காவிளை (Kaliyakkavilai)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
மக்கள் தொகை – 15625
கல்வியறிவு – 77%
மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதி – விளவங்கோடு
மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)
துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)
District Revenue Officer – Bro. J.Balasubramaniam
District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)
Joint Director / Project Director – Bro. P.Babu
மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Sis. S.Vijayadharani (MLA)
மாநகராட்சி ஆணையாளர் – Bro. Anand Mohan
தாசில்தார் (Vilavancode) – Bro. ஆபிரகாம் டென்னி
Principal District Court – Bro. P.Ramachandran (Kanyakumari)
ஜெபிப்போம்
களியக்காவிளை (Kaliyakkavilai), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேலும் இது ஒரு தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள பேரூராட்சியாகும். களியக்காவிளை அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு பகுதி ஆகும். பேருந்து நிலையம், சந்தை போன்றவை இதன் அடையாளங்கள் ஆகும். களியக்காவிளை பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சி பணிகளுக்காக ஜெபிப்போம்.
தமிழகத்தைச் சார்ந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆரம்பமாக களியக்காவிளை காணப்படுகிறது. கேரள- தமிழக எல்லையைச் சார்ந்த அழகான பகுதி ஆகும். இங்கு குமரி மாவட்டம் துவக்கம் கொள்கிறது. கேரள எல்லையான பாறச்சாலையிலிருந்து 2 கிமீ அருகாமையில் களியக்காவிளை அமைந்து இருக்கிறது. களியக்காவிளை பகுதியானது கேரளாவின் திருவனந்தபுரம், மற்றும் தமிழகத்தின் நாகர்கோவில் பகுதிகளுக்கு நடுவில் அமைந்து காணப்படுகிறது. களியக்காவிளையிலிருந்து 7 கிமீ தொலைவில் மார்த்தாண்டம் உள்ளது. மார்த்தாண்டத்தில் முக்கிய ரயில் நிலையம் அமைந்து இருக்கிறது. பாறசாலைக்கு அடுத்தபடியாக எல்லா ரயில்களும் நிறுத்தி செல்லும் ரயில் நிலையம் மார்த்தாண்டம் ஆகும்.
இந்த பேரூராட்சி விளவன்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். விளவன்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Sis. S.Vijayadharani அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய ஆளுகையின் கரத்திற்குள்ளாக இவர்களை ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.
களியக்காவிளை பேரூராட்சி 3.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 25 தெருக்களும், 3892 வீடுகளும் கொண்டுள்ளது. களியக்காவிளைக்கு அருகாமையில் பனங்காலை, மேக்கோடு, மஞ்ஞவிளை, கைதக்குழி, PPM ஜங்சன், கோழிவிளை போன்ற பகுதிகள் காணப்படுகின்றன. களியக்காவிளை பேரூராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களுக்காக ஜெபிப்போம். அவர்களுடைய பணிகளுக்காக ஜெபிப்போம்.
களியக்காவிளையில் 15625 மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகையில் ஆண்கள் 49% மற்றும் பெண்கள் 51%. களியக்காவிளையில் சராசரி கல்வியறிவு 77% உள்ளது. இதில் ஆண்கள் 81% மற்றும் பெண்கள் 74% பேரும் கல்வியறிவு பெற்றுள்ளார்கள். இப்பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம். குடும்பத்தின் தேவைகளுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.
களியக்காவிளை பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலையும், அற்புதங்களையும் செய்ய ஜெபிப்போம். வாலிப பிள்ளைகள் மற்றும் சிறுபிள்ளைகளை கர்த்தர் வல்லமையாய் எடுத்து பயன்படுத்தும்படி ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் சுவிசேஷம் அறியாத மக்கள் மத்தியில் ஆண்டவருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம். இந்த பேரூராட்சியை கர்த்தருடைய பாதுகாப்பு கரத்திற்குள் ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.