No products in the cart.

தினம் ஓர் ஊர் – அம்பாசமுத்திரம் (Ambasamudram) – 22/01/23
தினம் ஓர் ஊர் – அம்பாசமுத்திரம் (Ambasamudram)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருநெல்வேலி
மக்கள் தொகை – 428,031
கல்வியறிவு – 85.33%
மக்களவைத் தொகுதி – திருநெல்வேலி
சட்டமன்றத் தொகுதி – அம்பாசமுத்திரம்
District Collector – Bro. K. P. Karthikeyan (I.A.S)
Superintendent of Police – Bro. N.Silambarasan (I.P.S)
District Revenue Officer – Sis. M.Suganya
Joint Director / Project Director – Bro. S.Suresh
மக்களவை உறுப்பினர் – Bro. S.Gnanathiraviam (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Esakki Subaya (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. R.Rajeswaran
நகராட்சி தலைவர் – Bro. K.K.C. Prabhakara Pandian
நகராட்சி துணை தலைவர் – Bro. A.Sivasubramanian
Chief Judicial Magistrate – Bro. S. Manojkumar (Tirunelveli)
Principal Sub Judge – Bro. M. Amirtha Velu (Tirunelveli)
Principal District Judge – Sis. C.P.M. Chandra
Sub Judge – Bro. K. Senthil Kumar (Ambasamudram)
Additional District Munsif – Bro. P. Kumar (Ambasamudram)
Judicial Magistrate – Bro. A. Palkalaiselvan (Ambasamudram)
ஜெபிப்போம்
அம்பாசமுத்திரம் (Ambasamudram) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். அம்பாசமுத்திரத்திற்கு இளங்கோக்குடி வேளாக்குறிச்சி என்ற பெயர்கள் கி.பி. 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலம் வரை அதாவது திருவிதாங்கூர் மன்னன் உதயமார்த்தாண்டவர்மன் காலம் வரை இருந்து வந்தது. முள்ளிநாட்டைச் சேர்ந்த இளங்கோக்குடி என்பதே அம்பாசமுத்திரத்தின் பழம் பெயராகும். இந்த ஊரிலுள்ள முதன்மைக் கோயிலான மரகதவல்லி அம்மையின் பெயரால் இது அமைந்து அம்மை சமுத்திரம் என்றாகி இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அம்பாசமுத்திரம் நகராட்சிக்காக ஜெபிப்போம்.
அம்பாசமுத்திரம் வட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் கடையம், ஆழ்வார்குறிச்சி, சிங்கம்பட்டி, அம்பாசமுத்திரம் என 4 குறுவட்டங்களும், 54 வருவாய் கிராமங்களும் உள்ளன. இவ்வட்டத்தில் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கடையம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் ஜெபிப்போம்.
அம்பாசமுத்திரம் நகராட்சி திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் Bro. S.Gnanathiraviam அவர்களுக்காகவும், அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் Bro. Esakki Subaya அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்களுடைய பொறுப்புகளை உண்மையாக நிறைவேற்றிட ஜெபிப்போம்.
அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையர் Bro. R.Rajeswaran அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. K.K.C. Prabhakara Pandian அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. A.Sivasubramanian அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற பணிகளில் கர்த்தருடைய கரம் ஆளுகை செய்ய ஜெபிப்போம். அம்பாசமுத்திரம் நகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக ஜெபிப்போம்.
அம்பாசமுத்திரம் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 428,031 ஆகும். இவர்களில் ஆண்கள் 210,447 பேரும் மற்றும் பெண்கள் 217,584 உள்ளனர். கிராமப்புறங்களில் 42.7% பேர் வாழ்கின்றார்கள். இந்த நகரத்தில் குடும்பங்கள் 116,698 வசிக்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 80.41%, இசுலாமியர்கள் 8.72%, கிறித்தவர்கள் 10.68% மற்றும் பிறர் 0.18% ஆக உள்ளனர். இந்த வட்டத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.
இந்த நகரின் அருகாமையில் மணிமுத்தாறு அணை, கடனாநதி நதி அணை, TNAU இன் நெல் ஆராய்ச்சி நிலையம், பாபநாசம் அணை, காரையார் அணை, சிங்கம்பட்டி ஜமீன் அரண்மனை, சேர்வலர் அணை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் , அகஸ்தியர் நீர்வீழ்ச்சிகள் கீழ் அணைக்கட்டு., பாண தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம் ஆறு ஆகியவை நகரைச் சுற்றிலும் பிரபலமான பார்வையாளர்களைக் கவரும் இடங்களாகும். இதற்காக ஜெபிப்போம்.