SLOT GACOR HARI INI BANDAR TOTO bandar togel bo togel situs toto musimtogel toto slot
AppamAppam - Tamil

ஜூன் 14 – அற்புதங்களை செய்கிறவர்!

“பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?” (யாத். 15:11).

அற்புதங்களைச் செய்வதில், கர்த்தருக்கு நிகரானவர்கள் ஒருவருமில்லை. கர்த்தர் செய்கிற அற்புதங்கள் நிரந்தரமானவை, மேன்மையானவை, மிகுந்த ஆசீர்வாதமானவை. அவர் நிச்சயமாகவே உங்களுடைய வாழ்க்கையிலும் அற்புதங்களைச் செய்வார்.

அற்புதங்களை செய்கிற அசுத்த ஆவிகளுமுண்டு. வேதத்தில் அநேக இடங்களில் இது குறித்து நாம் வாசிக்கிறோம். எகிப்திலுள்ள மந்திரவாதிகள் மோசேக்கு முன்பாக அற்புதம் செய்யவில்லையா? ‘கடைசி நாட்களில் அந்திக் கிறிஸ்துவும் எழும்பி தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக பெரிய அற்புதங்களையும், அடையாளங்களையும் காண்பிப்பான்’ என்று வேதம் சொல்லுகிறது. ஆனால் இவைகள் ஒன்றும் கர்த்தருக்கு முன்பாக நிற்க இயலாது. ஆகவேதான் மோசே “கர்த்தாவே, அற்புதங்களை செய்கிற உமக்கு ஒப்பானவன் யார்?” என்று கேட்டார். உங்களுக்கு வேண்டிய எல்லா அற்புதங்களையும் கர்த்தர் உங்களுக்கு நிகழ்த்தித் தர ஆவலுள்ளவராயிருக்கிறார்.

தண்ணீரை திராட்சரசமாக்கி, அற்புதத்தை செய்தார். மீனின் வாயிலிருந்து வெள்ளிக் காசை எடுத்து அற்புதத்தை செய்தார். ஐந்து அப்பத்தையும், இரண்டு மீனையும் கொண்டு ஐயாயிரம் பேரை போஷித்து அற்புதம் செய்தார். மரித்தோரை உயிரோடு எழுப்பி அற்புதங்களைச் செய்தார். வேதம் சொல்லுகிறது, “அவர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்” (யோபு 9:10).

நீங்கள் கர்த்தரிடத்திலிருந்து அற்புதங்களை எதிர்பார்க்க வேண்டுமென்றால், உங்களுடைய வாழ்க்கையில் விசுவாசம் மிகவும் அவசியம். விசுவாசிக்கிற இடங்களில்தான் அற்புதங்கள் நிகழும். நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று இயேசு சொன்னாரே.

விசுவாசம் கேள்வியினால் வரும். கேள்வி தேவனுடைய வசனத்தினால் வரும். எவ்வளவுக்கெவ்வளவு கர்த்தர் செய்த அற்புதங்களையெல்லாம் தியானிக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்களுடைய உள்ளத்தில் எனக்கும் அதை செய்வார் என்ற விசுவாசம் பொங்கி வரும். ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும் கர்த்தர் செய்த அற்புதங்களையெல்லாம் வாசித்துப் பாருங்கள். “அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்” (சங். 105:2).

அற்புதங்களுக்காக கர்த்தரை விசுவாசிக்கிறதுடன், வாய் திறந்து அவரிடத்தில் கேட்கவும் வேண்டும். ‘அதிசயங்களை செய்கிற தேவனே என் வாழ்க்கையிலும் ஒரு அற்புதத்தை செய்யும்’ என்று மன்றாடுங்கள். எசேக்கியா கர்த்தரை நோக்கி ஜெபம் பண்ணினான். அவர் அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார் (2 நாளா.32:24). சிவந்த சமுத்திரத்தின் கரையிலே ஜனங்கள் தேவனை நோக்கி கூப்பிட்டார்கள். கர்த்தர் அற்புதமாய் சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து அற்புதம் செய்தார். தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்கள் ஜெபத்தைக்கேட்டு நிச்சயமாய்  அற்புதங்களைச் செய்வார். அவர் கர்த்தர், அவர் மாறாதவர் (மல். 3:6).

நினைவிற்கு:- “அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப் பண்ணினீர்” (சங். 77:14).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.