No products in the cart.

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – டாமியெட்டா (Damietta)
தினம் ஒரு நாட்டின் மாநிலம் – டாமியெட்டா (Damietta)
நாடு (Country) – எகிப்து (Egypt)
கண்டம் (Continent) – ஆப்பிரிக்கா (Africa)
மக்கள் – Damiettan
மக்கள் தொகை – 1,610,586
அலுவலக மொழி – Egyptian Arabic
அரசாங்கம் – சர்வாதிகார ஆட்சியின் கீழ் அரசு
ஒற்றையாட்சி அரை ஜனாதிபதி குடியரசு
President – Abdel Fattah el-Sisi
Prime Minister – Mostafa Madbouly
Governor – Ayman el-Shahaby
மொத்த பரப்பளவு – 1,029 km2 (397 sq mi)
தேசிய பறவை – Steppe Eagle
தேசிய மலர் – Egyptian Lotus
தேசிய மரம் – Doum palm
தேசிய விளையாட்டு – Football
நாணயம் – Egyptian Pound
ஜெபிப்போம்
டாமியெட்டா (Damietta) என்பது எகிப்தின் வடகிழக்கில் டெல்டா பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய ஆளுநரகமாகும். இந்த ஆளுநரகத்தை எகிப்து ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர் நிர்வகிப்பார். இதன் தலைநகரம் டாமியெட்டா நகரம். வரலாற்று ரீதியாக, இந்த ஆளுநரகம் 5வது மற்றும் 7வது சிலுவைப் போர்களின் போது ஃபராஸ்கூர் போர் மற்றும் டாமியெட்டா நகர முற்றுகைக்கு நன்கு அறியப்பட்டதாகும்.
அம்ர் இப்னு அல்-ஆஸ் மசூதி, அல்-பஹ்ர் மசூதி, அல்-மைனி மசூதி, அல்-மத்புலி மசூதி மற்றும் அல்-ரத்வானியா மசூதி ஆகியவை டாமியெட்டாவில் உள்ள எகிப்தின் பண்டைய அரபு ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட மிகச்சிறந்த மசூதிகளாகும். மேலும் தால் எல்-பிராச்சியா, தால் எல் டீர் மண்டலம், விர்ஜின் தேவாலயம், தபியாட் ஒராபி, அல்-லெசன் மண்டலம் ஆகியவை இந்த ஆளுநரகத்தின் முக்கிய இடங்களாகும்.
டாமியெட்டா ஆளுநரகம் கொய்யா மரங்கள் மற்றும் பனை மரங்களுக்கு பிரபலமானது. இது கிரீஸ் மற்றும் சீனா உட்பட பல நாடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மில்லியன்கணக்கான பனை மரங்களை ஏற்றுமதி செய்கிறது. மேலும், கோதுமை, சோளம், பருத்தி, அரிசி, உருளைக்கிழங்கு, எலுமிச்சை, திராட்சை மற்றும் தக்காளிகளையும் உற்பத்தி செய்கிறது. உலர் இனிப்புத் தொழில், மத்தி பேக்கிங், டோமியாட்டி சீஸ் மற்றும் பிற பால் பொருட்கள் ஆகியவற்றிற்கும் பிரபலமானது.
டாமியெட்டா ஆளுநரகத்தின் President, Prime Minister, Governor ஆகியோருக்காக ஜெபிப்போம். இந்த ஆளுநரக மக்களின் இரட்சிப்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். இந்த ஆளுநரகத்திலுள்ள அனைத்து திருச்சபைகளிலும் பரிசுத்த ஆவியானவரின் அக்கினி ஊற்றப்பட்டு எழுப்புதல் ஏற்பட ஜெபிப்போம்.