Daily Updates

தினம் ஓர் ஊர் – குன்னத்தூர் (Kunnathur) – 27/09/24

தினம் ஓர் ஊர் – குன்னத்தூர் (Kunnathur)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – திருப்பூர்

மக்கள் தொகை – 8,774

பரப்பளவு  – 7.12 சதுர கிலோமீட்டர்கள் (2.75 sq mi)

கல்வியறிவு – 72%

District Collector  – Bro. T Christuraj , I.A.S

District Revenue Officer  – Bro. K Karthikeyan

Commissioner of Police  – Sis. Lakshmi IPS

Superintendent of Police  – Bro. Abhishek Gupta IPS

Municipal Commissioner – Bro. Pavankumar G. Giriyappanavar (Tiruppur)

Mayor – Bro. N.Dineshkumar (Tiruppur)

Deputy Mayor – Bro.R. Balasubramaniam (Tiruppur)

மக்களவைத் தொகுதி – திருப்பூர்

சட்டமன்றத் தொகுதி – பெருந்துறை

மக்களவை உறுப்பினர் – Bro. K Subbarayan (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Jayakumar (MLA)

Principal District and Sessions Judge – Bro. N.Gunasekaran (Tiruppur)

ஜெபிப்போம்

குன்னத்தூர் (Kunnathur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த ஊர் கருப்பட்டிக்கு பெயர்பெற்றது.

இப்பேரூராட்சியானது 7.12 சகிமீ பரப்பளவில் அமைந்துள்ளது, குன்னத்தூர் பேரூராட்சியிலிருந்து திருப்பூர் 22. கிமீ; பெருந்துறை 20 கிமீ; கோபிச்செட்டிப்பாளையம் 24 கிமீ., தொலைவில் உள்ளது.

குன்னத்தூர் பேரூராட்சி பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் Bro. Jayakumar அவர்களுக்காகவும், திருப்பூர் மக்களவை உறுப்பினர் Bro. K Subbarayan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

இந்த நகரம் 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 32 தெருக்களையும் கொண்டுள்ளது. இப்பேரூராட்சி 2,588 வீடுகளும், 8,774 மக்கள்தொகையும் கொண்டது. குன்னத்தூரில் சராசரி கல்வியறிவு 72% உள்ளது. இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும்.

குன்னத்தூர் பொதுவாக ஆத்தி குன்னத்தூர் (“ஆத்தி” என்பது “பழங்காலத்தை” குறிக்கிறது) அல்லது கொங்கு நாடு பகுதியில் உள்ள ஏர்-டெக் நகரம் அல்லது போர்வெல் நகரம் என்று அழைக்கப்படுகிறது. குன்னத்தூரில் 12 ஆம் நூற்றாண்டில் சேர வம்சத்தால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க லட்சுமி நாராயணன் கோவில் உள்ளது. இங்கு கோயில்களில் உள்ள அணைத்து சிற்பங்களும் ஒரே கல்லினால் ஆனவை. இது குன்னத்தூருக்கு மேலும் பெருமை யாகும்.

இப்பேரூராட்சியில் அரசு தொடக்கப் பள்ளி 8-ஆம் வகுப்பு வரையும், அரசு மகளிர் மேல்நிலை பள்ளி 6 முதல் 12 வரை பெண்களுக்காக மட்டும், கருப்பண்ண நாடார் பள்ளி 6 முதல் 10 வரை இருபாலருக்கும், சரஸ்வதி கல்வி நிலையம் (தமிழ்,ஆங்கில வழி கல்வியகம்), கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி போன்ற கல்விக்கூடங்கள் அமைந்துள்ளன.

குன்னத்தூர் நகரத்திற்காக ஜெபிப்போம். இப்பகுதியில் உள்ள மக்களுக்காகவும் அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். குன்னத்தூர் நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.