No products in the cart.
தினம் ஓர் ஊர் – வனவாசி (Vanavasi) – 05/09/24
தினம் ஓர் ஊர் – வனவாசி (Vanavasi)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – சேலம்
வட்டம் – மேட்டூர்
பரப்பளவு – 5.21 சகிமீ
மக்கள் தொகை – 7,130
கல்வியறிவு – 78.09 %
District Collector and District Magistrate – Dr. R. Brindha Devi, I.A.S.
Commissioner of Corporation – Bro. Ranjeet Singh, I.A.S.
Additional Collector – Bro. N.Lalitaditya Neelam, I.A.S.,
Commissioner of Police – Sis. B. Vijayakumari,I.P.S.,
Superintendent of Police – Bro. A.K. Arun Kabilan, IPS.,
District Revenue Officer and
Additional District Magistrate – Dr. P. Menaha
Mettur Municipality Commissioner – Sis. V. Nithiya
Mettur Municipality Chairman – Bro. S.M.H. Abdul Salam
மக்களவைத் தொகுதி – சேலம்
சட்டமன்றத் தொகுதி – எடப்பாடி
மக்களவை உறுப்பினர் – Bro. Tm Selvaganapathi (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Edappadi K. Palaniswami (MLA)
Principal District Judge – Sis. S.Sumathi (Salem)
District Munsif – Bro. R.Manivarman (Mettur)
Subordinate Judge – Sis. S.Priya (Mettur)
ஜெபிப்போம்
வனவாசி (Vanavasi) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் மேட்டூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். வனவாசி பேரூராட்சி, சேலத்திலிருந்து 38 கிமீ தொலைவில் உள்ளது. வனவாசி கைத்தறி பட்டுப் புடவைகளால் பிரபலமானது .
இப்பேரூராட்சியானது 5.21 சகிமீ பரப்பும், 12 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் 12 தெருக்களையும் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. Mettur Municipal Commissioner Sis. V. Nithiya அவர்களுக்காகவும், Municipal Chairman Bro. S.M.H. Abdul Salam அவர்களுக்காகவும், Municipal Vice – Chairman Bro. S.G. Kasiviswanathan அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மற்றும் சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர் Bro. Edappadi K. Palaniswami அவர்களுக்காகவும், சேலம் மக்களவை தொகுதி உறுப்பினர் Bro. Tm Selvaganapathi அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி 1,890 குடும்பங்களும், 7,130 மக்கள்தொகையும், கொண்டது. இதில் 3,619 ஆண்கள் மற்றும் 3,511 பெண்கள் உள்ளனர். மேலும் வனவாசியில் ஆண்களின் கல்வியறிவு 86.21% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 69.75% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள்தொகையில் இந்து 98.95%, முஸ்லிம் 0.63%, கிறிஸ்தவர் 0.39% மற்றும் சீக்கியர் 0.01% உள்ளனர்.
வனவாசியில் இரண்டு அரசு பள்ளிகள் உள்ளன. ஒன்று அரசு தொடக்கப் பள்ளி, மற்றொன்று அரசு மேல்நிலைப் பள்ளி. கூடுதலாக, சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் ஈஷா வித்யா மெட்ரிகுலேஷன் பள்ளி என இரண்டு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளன. மேலும் ஒரு அரசு கிளை நூலகமும் வனவாசியில் செயல்பட்டு வருகின்றது. இந்த நூலகம் ஒப்பற்ற பல நூல்களின் மூலம் மக்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுகிறது.
நெசவுத் தொழிலே வனவாசியில் பெரும்பான்மை மக்கள் மேற்கொள்ளும் முதன்மை தொழிலாக விளங்குகின்றது. வனவாசியின் முக்கிய தொழில்கள் பட்டு புடவை நெசவு மற்றும் விசைத்தறி துணிகள் ஆகும். இது தூய பட்டு புடவைகளை உற்பத்தி செய்யும் கைத்தறி பட்டு தொழில்களின் பாரம்பரிய மையமாகும். செயற்கை சேலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள விசைத்தறிகளும் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான மக்கள் கையால் செய்யப்பட்ட பட்டுப் புடவைகளைத் தயாரித்து, இந்தியாவிலும் பிற நாடுகளிலும் உள்ள பல்வேறு வெளி நிலையங்களுக்குப் புடவைகளை ஏற்றுமதி செய்கிறார்கள்.
வனவாசி பேரூராட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். வனவாசி பேரூராட்சியில் வாழும் மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை ஏற்படுத்தும்படி ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம். வனவாசி பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம். வனவாசி பேரூராட்சியில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.