situs toto musimtogel toto slot musimtogel link musimtogel daftar musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

செப்டம்பர் 02 – துதிக்கும் தேவதூதர்கள்!

“அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்” (சங். 148:2).

தூதர்கள் எப்போதும் கர்த்தரைத் துதிக்கிறார்கள். அவருடைய கட்டளைகளையெல்லாம் நிறைவேற்றுகிறார்கள். மட்டுமல்ல, அவ்வப்போது தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கும் வந்து உதவி செய்கிறார்கள். கர்த்தருடைய குடும்பத்தில் நாம் இருப்பது எத்தனை பாக்கியமானது!

ஒரு முறை ஜுலியா என்ற சகோதரி ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள ஸாம்பியா என்ற தேசத்திற்கு ஊழியத்தினிமித்தம் செல்ல வேண்டியதிருந்தது. அப்போது அந்த சகோதரிக்கு பத்தொன்பது வயது மட்டுமே ஆகியிருந்தது.

அந்த புதிய தேசத்தில், நீக்ரோ மக்களின் வித்தியாசமான பழக்கவழக்கங்களோடு அவளால் ஒத்துப்போக முடியவில்லை. தாங்க முடியாத வெயில் அவளுடைய சரீரத்தை வாட்டினது. ஊழியத்தை மேற்கொள்வதற்கான வசதிகள் அவள் தங்கியிருந்த வீட்டிலே செய்யப்படவில்லை. வீட்டு நினைவும், தனிமை உணர்ச்சியும், அவளை வாட்டி வதைத்தன.

இரவு அவள் படுக்கைக்கு செல்லுகிறதற்கு முன்பு உள்ளம் உடைந்தவளாய் பல மணிநேரம் தொடர்ந்து அழுதாள். தாங்கமுடியாத துக்கத்துடனிருந்த அவள் கர்த்தரிடம் கண்ணீரோடு முறையிட்டுவிட்டு அப்படியே தூங்கிவிட்டாள்.

நடு இரவில் திடீரென்று அவளுடைய அறை முழுவதும் பிரகாசத்தினால் நிறைந்திருப்பதை உணர்ந்து, அவள் தன் கண்களைக் திறந்தபோது, அங்கே ஒரு அழகான அருமையான தேவதூதன் பாசத்தோடு செட்டைகளை விரித்து தன்னைக் காத்துக்கொண்டு நிற்கிறதைக் கண்டாள்.

அந்த தூதனுடைய முகம் மிகவும் பிரகாசமானதாகவும், சொல்லிமுடியாத அழகு நிறைந்ததாகவும் இருந்தது. வெளிச்சத்தை வஸ்திரமாக உடுத்தியிருப்பதுபோல் காட்சியளித்தான். அவள் அந்த தேவதூதனை நோக்கிப்பார்த்தாள்.

அந்த தூதனுடைய தலைமயிர் சுருள் சுருளாகவும், அருமையான வெண்மை நிறம் உடையதாகவும் இருந்தது. கண்கள் களங்கமில்லாத பாசத்தோடு விளங்கினது. அந்த தேவதூதன் நின்ற காட்சியை அவள் பார்த்த உடனேயே ஒரு தெய்வீக சமாதானம் அவளுடைய இருதயத்தை நிரப்பிற்று.

உங்களுடைய மனக்கண்கள் திறக்கப்பட்டு, உங்களுக்காக கர்த்தர் நியமித்திருக்கிற தேவதூதர்களையெல்லாம் காண்பது எத்தனை பாக்கியமான ஒரு காரியம்! தாய் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்று சொன்ன ஆண்டவர் உங்களுக்காக தம்முடைய தூதர்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார்.

வேதத்தை திரும்பத் திரும்ப வாசித்துப்பாருங்கள். கர்த்தருடைய தேவதூதர்கள் அநேக பரிசுத்தவான்களுக்கு பணிவிடை செய்யும்படி பூமியிலே இறங்கி வந்தார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய துயர நேரங்களிலும், தேவைகளின் நேரங்களிலும் கர்த்தர் தம்முடைய தூதர்களை உங்களுக்காக அனுப்புவார். அவர்கள் கர்த்தருடைய செய்திகளை உங்களுக்கு துரிதமாய் கொண்டுவருவார்கள். வேதம் சொல்லுகிறது, “தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்” (நீதி. 25:25). அதுபோல தேவதூதர்கள் கொண்டு வருகிற நற்செய்தி உங்களுடைய ஆத்துமாவை முழுவதுமாக குளிரப்பண்ணும்.

நினைவிற்கு:- “கர்த்தர் என்னோடே பேசின தூதனுக்கு நல்ல வார்த்தைகளையும், ஆறுதலான வார்த்தைகளையும் பிரதியுத்திரமாகச் சொன்னார்” (சக. 1:13).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.