No products in the cart.
தினம் ஓர் ஊர் – பெத்தநாயக்கன்பாளையம் – 21/08/24
தினம் ஓர் ஊர் – பெத்தநாயக்கன்பாளையம்
(Pethanaickenpalayam)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – சேலம்
பரப்பளவு – 12.90 கிமீ
*மக்கள் தொகை – 29467
கல்வியறிவு – 67.75%
District Collector and District Magistrate – Dr. R. Brindha Devi, I.A.S.
Commissioner of Corporation – Bro. Ranjeet Singh, I.A.S.
Additional Collector – Bro. N.Lalitaditya Neelam, I.A.S.,
Commissioner of Police – Sis. B. Vijayakumari,I.P.S.,
Superintendent of Police – Bro. A.K. Arun Kabilan, IPS.,
District Revenue Officer and
Additional District Magistrate – Dr. P. Menaha
Salem Municipality Commissioner – Bro. Y.Surendiran
Salem Mayor – Bro. A. Ramachandran
Deputy Mayor – Sis. Saradha Devi
மக்களவைத் தொகுதி – கள்ளக்குறிச்சி
சட்டமன்றத் தொகுதி – ஆத்தூர்
மக்களவை உறுப்பினர் – Bro. Malaiyarasan (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. A. P. Jayasankaran (MLA)
Principal District Judge – Sis. S.Sumathi (Salem)
ஜெபிப்போம்
பெத்தநாயக்கன்பாளையம் (Pethanaickenpalayam), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். பெத்தநாயக்கன்பாளையம் (பெத்தநாயக்கன்பாளையம் என்றும் உச்சரிக்கப்படுகிறது அல்லது பிஎன் பாளையம் என சுருக்கி அழைக்கப்படுகின்றது) இந்த நகரம் ஆத்தூர் தாலுக்காவில் இருந்து 2011-க்குப் பின்னர் புதிதாக நிறுவப்பட்டது.
பெத்தநாயக்கன்பாளையம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் Bro. A. P. Jayasankaran அவர்களுக்காகவும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Malaiyarasan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களோடுகூட இருந்து செய்கிற காரியங்களையெல்லாம் நிறைவேற்றி தரும்படி ஜெபிப்போம்.
பெத்தநாயக்கன்பாளையம் 12.90 கிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நகரத்தில் 35 தெருக்கள், 4,611 வீடுகள், 497 தெரு விளக்குகள் உள்ளன. 15 வார்டு உறுப்பினர்களுக்காகவும், அவர்களுடைய பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.
சேலம் மாவட்டத்தில் அமைந்த பெத்தநாயக்கன்பாளையம் 13 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் 47 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது. இங்கு கிராமங்களில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் அடிப்படை தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.
பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி பாக்கு மற்றும் வெற்றிலை விவசாயத்திற்கு சிறப்பு பெற்றது. பெத்தநாயக்கன்பாளையத்தில் பாயும் வசிஷ்டா ஆறு வேளாண்மைக்கு பயன்படுகிறது. பெத்தநாயக்கன்பாளையம் மக்கள்தொகையில் 83.26% சதவீதம் பேர் முக்கிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
இந்த நகரத்தில் மக்கள்தொகை 17,678 ஆக உள்ளது. இங்கு மொத்தம் 4,611 குடும்பங்கள் வசிக்கின்றனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 98.08%, முஸ்லிம்கள் 1.68%, கிறிஸ்தவர்கள் 0.18% உள்ளனர். பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள மக்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்படவும், குடும்பங்களில் காணப்படுகின்ற பொருளாதார நெருக்கடிகள் மாறவும் ஜெபிப்போம்.
பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலையும், அற்புதங்களையும் செய்யும்படி ஜெபிப்போம். ஆண்டவருடைய வார்த்தை அறிவிக்கப்படவும் அதன் மூலம் கர்த்தருடைய நாமம் மகிமைப்பட ஜெபிப்போம்.