Daily Updates

தினம் ஓர் ஊர் – காளப்பநாயக்கன்பட்டி (Kalappanaickenpatti) – 21/07/24

தினம் ஓர் ஊர் – காளப்பநாயக்கன்பட்டி (Kalappanaickenpatti)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – நாமக்கல்

பரப்பளவு – 6.8 சதுர கிலோமீட்டர்கள் (2.6 sq mi)

மக்கள் தொகை – 10,831

கல்வியறிவு – 73.38%

District Collector – Sis. S. Uma, IAS

Superintendent of Police – Bro. S.Rajesh Kannan, I.P.S

District Revenue Officer – Bro. R.Suman

Project Director – Bro. S.Vadivel

District Forest Officer  – Bro. S.Kalanithi, I.F.S.,

மக்களவைத் தொகுதி – நாமக்கல்

சட்டமன்றத் தொகுதி – சேந்தமங்கலம்

மக்களவை உறுப்பினர் – Bro. Madheshwaran (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. K. Ponnusamy (MLA)

Municipal Commissioner  – Bro. K.Sennukrishnan (Namakkal)

Municipal Chairman – Bro. D.Kalanithi (Namakkal)

Municipal Engineer – Bro. A.Shanmugam (Namakkal)

Town Planning Officer – Bro. B.Rajkumar (Namakkal)

Sanitary Officer – Bro. N.Thirumoorthy (Namakkal)

Principal District Judge – Bro. R.Gurumurthy (Namakkal)

Judicial Magistrate  – Sis. G.K. Velumayil (Sendamangalam)

ஜெபிப்போம்

காளப்பநாயக்கன்பட்டி (Kalappanaickenpatti) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சிக்கு தெற்கே 20 கிமீ தொலைவில் நாமக்கல்; வடக்கே 18 கிமீ தொலைவில் இராசிபுரம், கிழக்கில் 45 கிமீ தொலைவில் கொல்லிமலை; மேற்கில் 10 கிமீ தொலைவில் புத்தன்துறை உள்ளது.

காளப்பநாயக்கன் பட்டி, நாயக்கர் ஆட்சி காலத்தில் சேந்தமங்கலம் பகுதியை ஆட்சி செய்த ராமச்சந்திர நாயக்கர் என்பவரின் ஆட்சி எல்லைக்கு உட்பட்டது. இவ்வூர் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ளது. 700 வருடம் முன்பு இங்கு குடியமர்ந்த நாயக்கர் சமுதாய மக்கள் இப்பகுதிக்கு வந்து தங்களை குடியமர்த்திகொண்டனர். இவர்கள் இங்குள்ள காடுகளை அழித்து ஊர் அமைத்து வந்தனர் என்றும், அதன் பின்னர் திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் வளஞ்சியர் என்ற கவரா நாயக்கர் சமுதாய மக்களும் குடியமர்ந்தனர் என்று சொல்லபடுகின்றது.

நாயக்கர் இனத்தில் தோன்றிய ஒரு இளைஞர், கொல்லிமலையில் வாழ்ந்த ஒரு பழங்குடி பெண்ணை காதலித்து வந்ததாகவும், இக்காதல் இங்குள்ள நாயக்கர் மக்களுக்கு தெரிந்து அந்த இளைஞர் மற்றும் பழங்குடி பெண்ணையும் கொன்று விட்டதாகவும், அப்பழங்குடி பெண் கொடுத்த சாபத்தால் நாயக்கர் மக்கள் பலர் இறந்ததாகவும், இதனை போக்க அவரை வழிபட்டும், இவ்வூருக்கு காளப்ப நாயக்கர் பட்டி என்று இவருடைய பெயரிலேயே ஊர் அமைந்து விட்டது என்று கூறுகிறார்கள்.

காளப்பநாயக்கன்பட்டி நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. Municipal Commissioner – Bro. K.Sennukrishnan அவர்களுக்காகவும், Municipal Chairman – Bro. D.Kalanithi அவர்களுக்காகவும், Municipal Engineer – Bro. A.Shanmugam அவர்களுக்காகவும், Town Planning Officer – Bro. B.Rajkumar அவர்களுக்காகவும், Sanitary Officer – Bro. N.Thirumoorthy அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.

இந்த நகரம் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் Bro. K. Ponnusamy அவர்களுக்காகவும், நாமக்கல் மக்களவை உறுப்பினர் Bro. Madheshwaran அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை உண்மையாகவும், தேவ பயத்தோடும் செய்ய ஜெபிப்போம்.

காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்சாயத்தில் 10,831 மக்கள்தொகை உள்ளது, இதில் 5,444 ஆண்கள் மற்றும் 5,387 பெண்கள் உள்ளனர். இப்பேரூராட்சியில் 3,164 குடும்பங்கள் வாழ்கின்றனர். இந்து 98.78%, முஸ்லிம் 1.10%, கிறிஸ்தவர் 0.10%, சீக்கியர் 0.01%, ஜெயின் 0.01% உள்ளனர். இங்குள்ள வளஞ்சியர் என்ற நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பொருளாதார நிலையில் நன்கு வளர்ந்துள்ளனர்.

காளப்பநாயக்கன்பட்டியில் ஆண்களின் கல்வியறிவு 81.48% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 65.29% ஆகவும் உள்ளது. காளப்பநாயக்கன்பட்டியில் ஆண், பெண் இருபாலருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியும், மேலும் சில மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் உள்ளன.

இந்த கிராமத்தின் முக்கிய வருமானம் கோழிப்பண்ணைகள் உட்பட விவசாயம் மற்றும் லாரி போக்குவரத்து போன்ற அதனுடன் தொடர்புடைய சேவைகள். இவ்வூர் இயற்கை அழகுடன் உள்ளது, கருமலை, கொல்லிமலை போன்ற மலைகளில் இருந்துவரும் நீரினால் விவசாயம் செழிப்புடன் அமைகிறது. மொத்த மக்கள் தொகையில், 5,588 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 3,369 ஆண்கள் மற்றும் 2,219 பெண்கள். மக்கள்தொகை கணக்கெடுப்பில், தொழிலாளி வணிகம், வேலை, சேவை, மற்றும் விவசாயி மற்றும் தொழிலாளர் உள்ளனர்.

காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். குடும்பங்களில் இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். விவசாயிகளுக்காகவும், விவசாய குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம். தொழில்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.