Daily Updates

தினம் ஓர் ஊர் – பள்ளிபாளையம் (Pallipalayam) – 16/07/24

தினம் ஓர் ஊர் – பள்ளிபாளையம் (Pallipalayam)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – நாமக்கல்

பரப்பளவு – 4.70 சதுர கிலோமீட்டர்கள் (1.81 sq mi)

மக்கள் தொகை – 40,140

கல்வியறிவு – 66.47%

District Collector – Sis. S. Uma, IAS

Superintendent of Police – Bro. S.Rajesh Kannan, I.P.S

District Revenue Officer – Bro. R.Suman

Project Director – Bro. S.Vadivel

District Forest Officer  – Bro. S.Kalanithi, I.F.S.,

மக்களவைத் தொகுதி – ஈரோடு

சட்டமன்றத் தொகுதி – குமாரபாளையம்

மக்களவை உறுப்பினர் – Bro. K. E. Prakash (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. P. Thangamani (MLA)

Municipal Commissioner  – Sis. M.Thamarai (Pallipalayam)

Municipal Chairman – Bro. M.Selvaraj (Pallipalayam)

Municipal Vice – Chairman  – Bro. Balamurugan (Pallipalayam)

Revenue Inspector – Bro. V.Purusothaman (Pallipalayam)

Town Planning Inspector – Bro. M.Kasilingam (Pallipalayam)

Municipal Engineerr – Sis. A.V.Renuka (Pallipalayam)

Principal District Judge – Bro. R.Gurumurthy (Namakkal)

ஜெபிப்போம்

பள்ளிபாளையம் (Pallipalayam), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். அக்டோபர் 7, 2004ல் இது பேரூராட்சியிலிருந்து மூன்றாம் நிலை நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டது. தற்போது இரண்டாம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. “பள்ளிபாளையம் சிக்கன்” என்று பெயரிடப்பட்ட கோழி வகை தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் பிரபலமானது.

இது காவிரி ஆற்றின் கரையோரமாக அமைந்துள்ளது. ஆற்றுக்கு எதிர்புறம் (மேற்குப் பகுதியில்) ஈரோடு நகரம் உள்ளது. காவிரியின் கரையோரமாக இருந்தபோதிலும் இது பாறைகள் கூடிய இடமாகும். இது ஈரோடு மாநகராட்சி எல்லையை ஒட்டி அமைந்துள்ள நகரமாகும். இந்நகரம், ஈரோட்டிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், குமாரபாளையத்திலிருந்து தென்கிழக்கே 13 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

பள்ளிபாளையம் நகரம் 21 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. Municipal Commissioner Sis. M.Thamarai அவர்களுக்காகவும், Municipal Chairman Bro. M.Selvaraj அவர்களுக்காகவும், Municipal Vice – Chairman Bro. Balamurugan அவர்களுக்காகவும், Revenue Inspector Bro. V.Purusothaman அவர்களுக்காகவும், Town Planning Inspector Bro. M.Kasilingam அவர்களுக்காகவும், Municipal Engineerr Sis. A.V.Renuka அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.

இந்த நகரம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் Bro. P. Thangamani அவர்களுக்காகவும், ஈரோடு மக்களவை உறுப்பினர் Bro. Prakash அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை உண்மையாகவும், தேவ பயத்தோடும் செய்ய ஜெபிப்போம்.

பள்ளிபாளையம் நகராட்சியில் 40,140 மக்கள்தொகை உள்ளது, இதில் 20,200 ஆண்கள் மற்றும் 19,940 பெண்கள் உள்ளனர். நகரத்தின் சராசரி கல்வியறிவு 66.47% ஆகும். நகரத்தில் மொத்தம் 11,210 குடும்பங்கள் இருக்கிறார்கள். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 95.07%, முஸ்லீம்கள் 3.81%, கிறிஸ்தவர்கள் 0.99% மற்றும் மற்றவர்கள் 0.01% பேரும் உள்ளனர்.

இந்த நகரத்தில் விசைத்தறி கூடங்கள் அதிகளவில் உள்ளன. துணி உற்பத்தி மற்றும் நூல் உற்பத்தி போன்ற ஜவுளி சார்ந்த தொழில்கள் இந்த நகரத்தின் முக்கிய பொருளாதார நடவடிக்கையாகும். நூல் சாயமிடப்பட்ட துணிகள், கிரீஜ் துணிகள், அச்சிடப்பட்ட துணிகள், கைத்தறி துணிகள், ஷீட்டிங் துணிகள், வோயில் துணிகள், பாப்ளின் துணிகள், ஆர்கானிக் காட்டன் நெய்த துணி மற்றும் கேன்வாஸ் துணி போன்ற துணிகள் இந்த நகரத்தில் ஆட்டோ லூம்கள் மற்றும் விசைத்தறி தொழிற்சாலையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இந்த பகுதியில் உள்ள நூற்பு ஆலைகளில் 100% விஸ்கோஸ் மற்றும் பாலியஸ்டர் விஸ்கோஸ் நூல் தயாரிக்கப்படுகிறது. நன்கு அறியப்பட்ட ஜவுளி மையமான ஈரோடுக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

மொத்த மக்கள்தொகையில், 21,194 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 13,290 ஆண்கள் மற்றும் 7,904 பெண்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கின்ற தொழில்கள் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம்.

பள்ளிபாளையம் நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காகவும், மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் அலுவலங்களுக்காக ஜெபிப்போம். பள்ளிபாளையத்தில் உள்ள மக்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் தேவனுடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம். பள்ளிபாளையம் நகராட்சியின் வளர்ச்சிக்காக ஜெபிப்போம். பள்ளிபாளையம் பகுதியில் எழுப்புதல் உண்டாக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.