Appam, Appam - Tamil

மே 20 – ஆறாம் நாள்

“பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று” (ஆதி.1:24).

ஆறாம்நாளிலே கர்த்தர் மிருகங்களைச் சிருஷ்டித்தார். அதே ஆறாம்நாளிலே மனிதனையும் சிருஷ்டித்தார். ஆறாம்நாள் உருவாக்கப்பட்ட மனிதனுக்கு ஆறறிவைக் கொடுத்தார். மனிதனோடு ஐக்கியம்கொள்ளும்படி ஒவ்வொருநாளும் அவனைத் தேடி வந்தார். மனுஷன் நித்தமும் அவருடைய மடியிலே செல்லப்பிள்ளையாய் இருந்தான்.

கர்த்தர் மனிதனைத் தெரிந்துகொண்டபடியால் சாத்தான் மிருகத்தைத் தெரிந்துகொண்டான். மிருகத்தின் வழியாக மனிதனை வஞ்சிக்க எண்ணினான். மனிதனுக்குள் எப்படியாவது மிருக சுபாவங்களைக் கொண்டுவரவேண்டும் என்பதுதான் சாத்தானுடைய நோக்கம். மனிதனை பாவத்தில் வீழ்த்திய சாத்தான், மனிதனுக்குரிய எண்ணாகிய 6-ஐ சுதந்தரித்துக்கொண்டு உலகத்தின் அதிபதியானான்.

அந்திக்கிறிஸ்துவுடைய எண் அறுநூற்றறுபத்தாறு என்பதாகும். இதிலே ஆறு என்னும் எண் மூன்று இருக்கிறதைக் காணலாம். ஒரு ஆறு, வலுசர்ப்பமாகிய சாத்தானைக் குறிக்கிறது. அடுத்த ஆறு, மிருகமாகிய அந்திக்கிறிஸ்துவைக் குறிக்கிறது. மூன்றாம் ஆறு, கள்ளத்தீர்க்கதரிசியைக் குறிக்கிறது. இவை ஒரு பக்கம் பிதாவோடும், குமாரனோடும், பரிசுத்த ஆவியானவரோடும் யுத்தம்பண்ணுகிறது. மறுபக்கத்தில் மனுஷருடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தில் மிருக சுபாவங்களைக் கொண்டுவருகிறது.

“என்னைக் கோபப்படுத்தாதே; நான் மிருகமாகிவிடுவேன்” என்று சிலர் சொல்லுவதுண்டு. மிருகத்தனமாய்க் குடித்து, வெறித்து, மனைவியையும் பிள்ளைகளையும் அடித்து நொறுக்குவார்கள். இன்றைக்கும் வெளிநாடுகளில் ஹிப்பிகளைப்போல குளிக்காமலும், பல் விளக்காமலும் மிருகங்களைப்போல வாழும் மனிதரைக் காணலாம்.

மட்டுமல்ல, மனிதனோ பல மிருகங்களைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்டு பாம்புகளையும், குரங்குகளையும், யானைகளையும், எலிகளையும் ஆராதித்துவருகிறதைப் பார்க்கிறோம். கர்த்தருடைய வருகையில் தேவனை ஆராதித்து அவரைப் பின்பற்றுகிறவர்கள், தேவ சாயலாய் மாறி, மறுரூபமாக்கப்பட்டு, தேவனோடுகூட எடுத்துக்கொள்ளப்படுவார்கள். மற்றக்கூட்டத்தாரோ மிருகங்களைப்போல மாறி அந்திக்கிறிஸ்து ஆட்சிக்குள் செல்லுவார்கள்.

ஆனால், ஆண்டவரோ மனிதன் தனது பாவத்தினால் எதைஎதையெல்லாம் இழந்தானோ, அதை மீண்டும் அவனுக்குத் தந்து அவனைத் தேவசாயலாய் மாற்றவேண்டுமென்று ஆவல் கொண்டிருக்கிறார். மகிமையின்மேல் மகிமையடையவேண்டும், அவனை மறுரூபப்படுத்தவேண்டும் என்பதுதான் கர்த்தர் பூமியிலே மனிதனை சிருஷ்டித்ததின் நோக்கம்.

ஆறாம்நாள் உருவாக்கப்பட்ட மனிதனுக்காக கர்த்தர் பூமியிலே ஆறாயிரம் ஆண்டுகளைக் கொடுத்திருக்கிறார். அந்த மனிதனுக்காக ஆறுமணி நேரம் கல்வாரிச் சிலுவையிலே தொங்கி இரத்தம் சிந்தியிருக்கிறார். மனிதனைக்குறித்து தேவனுக்கு மேன்மையான திட்டங்களும் எதிர்பார்ப்புகளும் உண்டு.

நினைவிற்கு:- “பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம்-, இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்” (1 யோவா. 3:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.