Daily Updates

தினம் ஓர் ஊர் – சோழபுரம் (Cholapuram) – 14/01/23

தினம் ஓர் ஊர் – சோழபுரம் (Cholapuram)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – தஞ்சாவூர்

மக்கள் தொகை – 6803

கல்வியறிவு – 89.7%

மக்களவைத் தொகுதி – மயிலாடுதுறை

சட்டமன்றத் தொகுதி – கும்பகோணம்

District Collector – Bro. Deepak Jacob, (I.A.S)

Additional Collector (Development) – Bro. H.S.Srikanth (I.A.S)

Deputy Inspector General of Police – Bro. T.Jayachandran (I.P.S)

Superintendent of Police – Bro. Ashish Rawat (I.P.S)

District Revenue Officer – Bro. T.Thiyagarajan

மக்களவை உறுப்பினர் – Bro. S.Ramalingam (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. G.Anbalagan (MLA)

மேயர் – Bro. K.Saravanan

துணை மேயர் – Bro. S.P.Tamizhagan

நகராட்சி ஆணையர் – Bro. R.Lakshmanan

Principal District Judge  – Sis. Jacintha Martin (Thanjavur)

Presiding Officer and

Additional District Judge – Bro. G.Sundarajan (Thanjavur)

Additional Chief Judicial Magistrate – Bro. K.Sivasakthivelkannan

Additional District Judge – Sis. J.Radhika

ஜெபிப்போம்

சோழபுரம் (Cholapuram) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். தஞ்சாவூரிலிருந்து 53 கிமீ தொலைவில் உள்ள சோழபுரம் பேரூராட்சிக்கு அருகில் திருவிடைமருதூர் 15 கிமீ; திருப்பனந்தாள் 7 கிமீ; தேவனஞ்சேரி 7 கிமீ; கும்பகோணம் 13 கிமீ தொலைவில் உள்ளது. சோழபுரம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி கும்பகோணம் சட்டமன்றத் தொகுதிக்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் Bro. G.Anbalagan அவர்களுக்காகவும், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் Bro. S.Ramalingam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய வல்லமையான கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

இந்த நகரம் 7.07 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 33 தெருக்களும் கொண்டுள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளுக்காகவும், வார்டு உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம். மேயர் Bro. K.Saravanan அவர்களுக்காகவும், துணை மேயர் Bro. S.P.Tamizhagan அவர்களுக்காகவும், நகராட்சி ஆணையர் Bro. R.Lakshmanan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற பணிகளில் தேவ சித்தம் நிறைவேறிட ஜெபிப்போம்.

சோழபுரம் நகரில் மொத்தம் 1,632 குடும்பங்கள் வசிக்கின்றன. சோழபுரத்தின் மொத்த மக்கள் தொகை 6,803, இதில் 3,195 ஆண்கள் மற்றும் 3,608 பெண்கள் உள்ளனர். சோழபுரம் நகரில் 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மக்கள் தொகை 757 ஆகும். இந்த பேரூராட்சியில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களில் கர்த்தருடைய ஆளுகை உண்டாயிருக்க ஜெபிப்போம்.

சோழபுரத்தின் கல்வியறிவு விகிதம் 89.7% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 94.27% மற்றும் பெண்களின் கல்வியறிவு விகிதம் 85.59% ஆகும். இந்த நகரில் அரசு உயர்நிலை பள்ளி, மார்னிங்ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளன. இப்பேரூராட்சியில் உள்ள பள்ளிகளுக்காகவும், மாணவர்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம்.

இந்த பேரூராட்சியில் உள்ள மக்களின் வருவாய் விவசாயம் சார்ந்து இருக்கிறது. விவசாயத்திற்கு “மண்ணியாறு” மற்றும் மோட்டார் (பம்புசெட்) போன்றவை நீர்ப்பாசனம் வழங்கப்படுகிறது. சோழபுரத்தில் நெல்,கோதுமை, பயிறு வகைகள், எள், நிலக்கடலை சவுக்கு மரம், பழங்கள், மிளகாய், வாழை மரம் மற்றும் கரும்பு பயிரிடப்படுகிறது. இதற்காக ஜெபிப்போம்.

சோழபுரம் டவுன் பஞ்சாயத்தில் மொத்த மக்கள் தொகையில், 2,072 பேர் முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 151 பேர் விவசாயிகள்  மற்றும் 586 பேர் விவசாயத் தொழிலாளர்கள். இந்த நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கின்ற தொழிலின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.