No products in the cart.

தினம் ஓர் ஊர் – பி. மீனாட்சிபுரம் ((B.Meenakshipuram) – 27/10/23
தினம் ஓர் ஊர் – பி. மீனாட்சிபுரம் ((B.Meenakshipuram)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தேனி
மக்கள் தொகை – 7,846
கல்வியறிவு – 66.6%
மக்களவைத் தொகுதி – தேனி
சட்டமன்றத் தொகுதி – போடிநாயக்கனூர்
மாவட்ட ஆட்சியர் – Sis. R.V.Shajeevana (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Dongare Pravin Umesh (I.P.S)
District Revenue Officer – Sis. Jeyabharathi
District Forest Officer – Bro. S.Kowtham
மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. O.Panneerselvam (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. G.Rajalakshmi
நகராட்சி தலைவர் – Sis. Raja Rajeswari Sankar
நகராட்சி துணை தலைவர் – Sis. A.Krishnaveni
Principal District Judge – Sis. K. Arivoli
District Munsif – Sis. M.M.J.Ummul Faritha (Bodinayakanur)
Judicial Magistrate – Sis. G.K.Velumayil (Bodinayakanur)
ஜெபிப்போம்
பி.மீனாட்சிபுரம் (B.Meenakshipuram,) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டத்தில், தேனி – போடிநாயக்கனூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பேரூராட்சியாகும். போ.மீனாட்சிபுரம் பேரூராட்சி ஒரு வயலும் வயல் சார்ந்த நகரமாகும். பால்வளம் மற்றும் மீன்வளம் நிறைந்த பேரூராட்சி ஆகும். பி.மீனாட்சிபுரம் பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியானது போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் Bro. O.Panneerselvam அவர்களுக்காகவும், தேனி மக்களவைத் உறுப்பினர் Bro. P. Ravindhranath அவர்களுக்காகவும் ஜெபிப்போம். தேவ கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம். இந்த தொகுதி மக்களுக்காக இவர்கள் எடுக்கும் முயற்சிகளை கர்த்தர் நிறைவேற்றி கொடுக்கும்படி ஜெபிப்போம்.
மாவட்ட ஆட்சியர் Sis. R.V.Shajeevana அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. Dongare Pravin Umesh அவர்களுக்காகவும், District Revenue Officer Sis. Jeyabharathi அவர்களுக்காகவும், District Forest Officer Bro. S.Kowtham அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களை வழிநடத்திட ஜெபிப்போம்.
பி.மீனாட்சிபுரம் பேரூராட்சியானது 12 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இந்த பேரூராட்சியின் நகராட்சி ஆணையர் Sis. G.Rajalakshmi அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. Raja Rajeswari Sankar அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Sis. A.Krishnaveni அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் பணியினை பொறுப்போடும், உண்மையோடும் செய்ய கர்த்தர் கிருபை கொடுக்கும்படி ஜெபிப்போம்.
பி. மீனாட்சிபுரத்தின் மொத்த மக்கள் தொகை 7,846 ஆகும். இதில் 3,954 ஆண்கள் மற்றும் 3,892 பெண்கள் ஆவர். இந்த நகரில் மொத்தம் 2,185 குடும்பங்கள் வசிக்கின்றன. பி. மீனாட்சிபுரத்தின் கல்வியறிவு விகிதம் 66.6% ஆகும். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களில் தெய்வீக சமாதானம் உண்டாக ஜெபிப்போம். குடும்பத்தில் இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.
இந்த பேரூராட்சியில் வாழும் மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 99.41% பேரும், முஸ்லிம் 0.43% பேரும், கிறிஸ்துவர் 0.1% பேரும், சீக்கியர் 0.03% பேரும், பிற மதங்களை பின்பற்றுகிறவர்கள் 0.03% பேரும் இருக்கிறார்கள். இந்த நகரத்தில் பெரும்பான்மையாய் வாழும் இந்து மக்கள் மத்தியில் தேவ அன்பு வெளிப்பட ஜெபிப்போம். இங்கு வாழும் சிறிய எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்களுக்காக ஜெபிப்போம்.
பி.மீனாட்சிபுரம் டவுன் பஞ்சாயத்தில் மொத்த மக்கள் தொகையில் 4,154 பேர் முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இப்பேரூராட்சியில் பருத்தி, நெல் மற்றும் பணப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இந்த நகரத்தில் தேவன் கொடுத்துள்ள இயற்கை வளங்களுக்காக ஜெபிப்போம். விவசாயிகளுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய வல்லமையான கரம் இவர்களை பாதுகாக்கும்படி ஜெபிப்போம்.