Daily Updates

தினம் ஓர் ஊர் – சாத்தான்குளம் – 16/07/23

தினம் ஓர் ஊர் –  சாத்தான்குளம்

மாநிலம் –  தமிழ்நாடு

மாவட்டம் –  தூத்துக்குடி

மக்கள் தொகை –  65,694

கல்வியறிவு –  80.09 %

மக்களவைத் தொகுதி –  தூத்துக்குடி

சட்டமன்றத் தொகுதி –  திருவைகுண்டம்

மாவட்ட ஆட்சியர் –  Bro. K.Senthil Raj (I.A.S)

Additional Collector  –  Bro. Thakare Shubham Dnyandeorao (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர்  –  Bro. L.Balaji Saravanan (I.P.S)

காவல்துறை கண்காணிப்பாளர்  –  Bro. Godwin Jegadeshkumar (Sattankulam)

District Revenue Inspectors  –  Bro. K.V.Ganesan, Bro. M.Veerakumar

Executive Engineer  –  Bro. Ruban Suresh Ponnaiah

மக்களவை உறுப்பினர் –  Sis. Kanimozhi Karunanidhi (MP)

சட்டமன்ற உறுப்பினர் –  Bro. Oorvasi S.Amirtharaj (MLA)

மாவட்ட ஆணையர் –  Bro. C.Dineshkumar

மாவட்ட துணை ஆணையர் –  Bro. T.Kumar, Bro. O.Rajaram

மேயர் –  Bro. P.Jegan

துணை மேயர் –  Sis. S.Jenitta

Principal District Judge –  Bro. M.Selvam

Judicial Magistrate  –  Sis. C.Kalaiyarasi Reena

 

ஜெபிப்போம்

சாத்தான்குளம் (Sathankulam), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். சாத்தான்குளம் 15 வார்டுகளை கொண்ட தேர்வு தர நகர பஞ்சாயத்து ஆகும். சாத்தான்குளம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய தாலுகாக்களில் ஒன்றாகும். சாத்தான்குளம் தாலுகா 1983 இல் உருவாக்கப்பட்டது. சாத்தான்குளம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

தூத்துக்குடியிலிருந்து 70 கிமீ தொலைவில் சாத்தான்குளம் உள்ளது. இதனருகே உள்ள ஊர்கள்: கிழக்கில் 4 கிமீ தொலைவில் முதலூர், வடக்கில் 9 கிமீ தொலைவில் நாசரெத், மேற்கே 9 கிமீ தொலைவில் ஈத்தாமொழி, தெற்கே 10 கிமீ தொலைவில் தட்டார்மடம், 17 கிமீ தொலைவில் உடன்குடி, 25 கிமீ தொலைவில் திருச்செந்தூர் உள்ளது. சாத்தான்குளம் தாலுகாவை சுற்றியுள்ள ஊர்களுக்காக ஜெபிப்போம்.

சாத்தான்குளம் ஊரின் பழைய பெயர் மரிக்கொழுந்த நல்லூர். இங்கு சாத்தான் சாம்பவர் என்கின்ற ஜமீன் இங்கு ஆட்சி புரிந்தார். இவர் ஆட்சி புரிந்த காலத்தில் தண்ணீர் பஞ்சம் வந்துவிட்டது. ஆகையால் சாத்தான் சாம்பவர் தனது சகோதரர்கள் சகோதரிகள் பெயர்களில் குளங்களை வெட்டினார். ஆகையால் மரிக்கொழுந்த நல்லூர் என்கின்ற பெயரை மாற்றி சாத்தான்குளம் என்கின்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். சாத்தான்குளம் வட்டத்தின் கீழ் 25 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவ்வட்டத்தில் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருபத்திநாலு ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த தாலுகாவில் உள்ள வருவாய் கிராமங்களுக்காக, கிராம மக்களுக்காக ஜெபிப்போம். சாத்தான்குளத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களுக்காக, ஊராட்சி மன்ற தலைவருக்காக, ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளுக்காக ஜெபிப்போம்.

சாத்தான்குளம் 5.25 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 83 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Oorvasi S.Amirtharaj அவர்களுக்காகவும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Sis. Kanimozhi Karunanidhi அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

இந்த பேரூராட்சியில் மொத்தம் 65,694 மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 65.16% இந்துக்கள், 32.01% கிறிஸ்தவர்கள் மற்றும் 2.83% முஸ்லிம்கள் உள்ளனர். தங்க நகைத்தொழில் மற்றும் கட்டிட தொழிலை செய்யும் ஆசாரி இனத்தவரும், பல்தொழில் செய்யும் நாடார் இனத்தவரும், கூலி, வியாபாரம் மற்றும் பற்பல தொழில்களை மேற்கொள்ளும் பறையர் இனத்தவரும் இம்மண்ணில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஏனைய சாதி, மதத்தினரும் இவ்வூரில் வசிக்கின்றனர்.இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும் அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.

சாத்தான்குளம் தாலுகாவில் முக்கிய விவசாயம் நெல். நிலக்கடலை சாகுபடியும் சாத்தான்குளம் மற்றும் அருகிலுள்ள இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. நிலக்கடலை பிண்ணாக்கு உரமாகவும், கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது. பனை மரங்கள் பெரும்பாலும் சாத்தான்குளம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் வளர்க்கப்படுகின்றன. சில இடங்களில் கரும்பும் பயிரிடப்பட்டுள்ளது. பனை வெல்லம் பனை சாற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது; பனை வெல்லம் உற்பத்தி ஒரு காலத்தில் சாத்தான்குளம் மக்களின் முக்கிய தொழிலாக இருந்தது. இதற்காக ஜெபிப்போம். விவசாயிகளுக்காக, விவசாய குடும்பங்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் செய்கின்ற தொழிலை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.