bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
AppamAppam - Tamil

பெப்ருவரி 02 – தைலம்!

“இஸ்ரவேல் புத்திரரோடே நீ பேசிச் சொல்ல வேண்டியதாவது: உங்கள் தலைமுறை தோறும் இது எனக்குரிய பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்க வேண்டும்” (யாத். 30:31).

மோசேயின் காலத்தில் ‘ஆசரிப்பு கூடாரத்தையும், அதின் சகல பணிமூட்டுக்களையும் பரிசுத்த அபிஷேக தைலஎண்ணெயினால் அபிஷேகம் பண்ணவேண்டும்’ என்று கர்த்தர் சொன்னார். மீட்பின் கிரியைகளுடைய எல்லா அம்சங்களிலும் பரிசுத்த ஆவியானவர் ஈடுபட்டிருக்கிறார் என்கிற சத்தியத்தை இது நிழலாட்டமாய் வெளிப்படுத்துகிறது. பரிசுத்த அபிஷேகத்தைலம் என்பது, ஏதோ சாதாரணமான ஒருஎண்ணெய் அல்ல. அது விசேஷமாகசெய்யப்பட்டது. அதை எப்படித் தயாரிக்க வேண்டும் என்பதை கர்த்தர் மோசேக்கு திட்டமும் தெளிவுமாய் சொல்லியிருந்தார்.

வேதம் சொல்லுகிறது, “மேன்மைனசுகந்தவர்க்கங்களாகிய சுத்தமான வெள்ளைப் போளத்தில் பரிசுத்தஸ்தலத்தின் சேக்கலின்படி ஐந்நூறுசேக்கல் இடையையும், சுகந்தகருவாப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும், இலவங்கப்பட்டையில் ஐந்நூறு சேக்கல் இடையையும், ஒலிவஎண்ணெயில்ஒருகுடம்எண்ணெயையும்எடுத்து, அதனால், பரிமளதைலக்காரன்செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளதைலமாகிய சுத்தமான அபிஷேகதைலத்தை உண்டுபண்ணுவாயாக; அது பரிசுத்த அபிஷேகதைலமாயிருக்கக்கடவது (யாத். 30:23-25).

முதலாவது, வெள்ளைப்போளம் என்பது, ஒரு மரத்தைக் கூரிய கத்தியினால் கிழிக்கும் போது வடியும் பிசினாகும். இது நருங்குண்டதும் நொறுங்குண்டதுமான இருதயங்களிலிருந்து புறப்படும் கண்ணீரின் ஜெபத்துக்கு ஒப்பானது. இரண்டாவது, சுகந்தகருவாப்பட்டை என்பது, வாசனை வீசக்கூடியது. நீங்கள் தேவனுடைய நற்கந்தங்களைப் போல இருக்கிறீர்கள். கிறிஸ்துவினுடைய வாசனையை நீங்கள் எப்போதும் வெளிப்படுத்த வேண்டும் என்பதை இது உங்களுக்கு உணர்த்துகிறது.

மூன்றாவதாக, வசம்புகாணப்படுகிறது. அதைவாய் பேசாத குழந்தையினுடைய நாக்கிலே தடவுவார்கள். அப்பொழுது அது நன்றாகப்பேச ஆரம்பிக்கும். இது நீங்கள் அந்நிய பாஷையிலே பேச வேண்டிய தன் அவசியத்தை வெளிப்படுத்துகிறது. நான்காவதாக, அந்த அபிஷேகதைலத்திலே, இலவங்கப்பட்டை சேர்க்கப்பட வேண்டும். இந்த பட்டைஇலவங்கமரத்திலிருந்து உரிக்கப்பட்டதாகும். குறுகிய எண்ணங்கள் மாற்றப்படு வது மற்றும் அவைமு ற்றிலுமாகத்தோலுரிக்கப்படுவதன்அவசியத்தைஇதுவெளிப்படுத்துகிறது.

இந்தநான்குவகையானசுகந்தவர்க்கங்களோடுஒலிவஎண்ணெயும்சேர்க்கப்படும்போது, அதுபரிசுத்தமானஅபிஷேகத்தைலமாகமாறுகிறது. அந்தத்தைலமானது, கர்த்தருடையஊழியக்காரருக்குஇருக்கவேண்டியகுணாதிசயங்களைக்காண்பிக்கிறது.

தேவபிள்ளைகளே, நீங்கள் பரிசுத்த ஆவியினால் ஆட்கொள்ளப்படுவதும், பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தமடைவதும் மிக மிக அவசியம்.

நினைவிற்கு:- “உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்” (யோசுவா 3:5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.