bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
AppamAppam - Tamil

ஆகஸ்ட் 11 – அற்புதங்களினால் சந்தோஷம்!

“அநேகரிலிருந்த அசுத்த ஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டது. அநேகத் திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும் குணமாக்கப்பட்டார்கள். அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று” (அப். 8:7,8).

அந்தப் பட்டணத்தில், “மிகுந்த சந்தோஷம்” உண்டானதின் காரணம் என்ன? வியாதியஸ்தர்கள் குணமாக்கப்பட்டதும், அசுத்த ஆவிகள் புறப்பட்டு ஓடியதும், சப்பாணிகள் நடந்ததுமே அந்த பட்டணத்தின் மிகுந்த சந்தோஷத்திற்கு காரணமாகும். நீங்கள் பரிசுத்த ஆவியினால் உண்டாகிற சந்தோஷத்தினால் நின்றுவிடக் கூடாது. பரிசுத்த ஆவியின் மூலமாக ஆவியின் வரங்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஆவியின் வரங்கள் தேவனுடைய வல்லமையை உங்களுக்குள் கொண்டு வருகிறது. அதிகாரத்தையும் ஆளுகையையும் பெற்றுக் கொள்ளுகிறீர்கள்.

இன்று அநேகர் சந்தோஷமில்லாமல் இருப்பதின் காரணம் என்ன? அவர்களுடைய சரீரத்தின் வியாதிகளாலும், பெலவீனங்களாலும், குடும்பத்துக்கும் கர்த்தருக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய முடியாமலிருக்கிறார்கள். அவர்களது பெரும்பாலான நேரம் படுக்கையிலேயே வீணாகிறது. அவர்களுக்கு வாழ்க்கையில் சந்தோஷமே இருப்பதில்லை.

கர்த்தராகிய இயேசு இந்த உலகத்தில் வந்தபோது, அவர் செய்த அற்புதங்கள் எண்ணற்றவை. வேதம் சொல்லுகிறது, “நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித் திரிந்தார்” (அப். 10:38).

தேவபிள்ளைகளே, இயேசு உங்கள் வாழ்க்கையில் வருவாரானால், நிச்சயமாகவே உங்களிலுள்ள வியாதிகளும், பெலவீனங்களும் நீங்கிப்போகும். சத்துருவினுடைய போராட்டங்கள் விலகிப்போகும். சாத்தான் திருடவும், கொல்லவும், அழிக்கவுமே வருகிறான். ஆனால், கர்த்தரோ உங்களுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அந்த ஜீவன் பரிபூரணப்படவும் உதவி செய்கிறார். உங்களுடைய வியாதிகளுக்காக தன் சரீரத்தில் தழும்புகளை ஏற்றுக் கொண்டார். இது எத்தனை பெரிய சந்தோஷம்!

ஒரு முறை, ஒரு சுவிசேஷ கூட்டத்திற்கு ஆஸ்துமா நோயினால், மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு சகோதரி வந்தார்கள். அவர்கள் கூட்டத்தின் கடைசி நாள் ஜெபிப்பதற்காக முன் வந்தார்கள். அந்த போதகர் அவர்கள் தலையின்மேல் கைவைத்து மனதுருகி ஜெபித்த போது, அந்த நோய் அவர்களை விட்டு நிரந்தரமாய் விலகிப் போனது. கர்த்தர் சுகம் கொடுத்தது கொடுத்ததுதான்.

கர்த்தர் இந்த அற்புதத்தை செய்ததினால், அவர்களுக்கும் சந்தோஷம், அந்த ஊழியருக்கும் சந்தோஷம். அந்த சகோதரியின் குடும்பம் முழுவதிலும் பெரிய சந்தோஷம். ஆகவேதான் பட்டணம் முழுவதிலும் மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று என்று வேதம் சொல்லுகிறது. தேவபிள்ளைகளே, உங்கள் மூலமாய் உங்கள் பட்டணத்தில் பெரிய சந்தோஷத்தை உண்டாக்க கர்த்தர் விரும்புகிறார்.

நினைவிற்கு:- “கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்” (ரோமர் 8:11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.