situs toto musimtogel toto slot musimtogel link musimtogel daftar musimtogel masuk musimtogel login musimtogel toto
AppamAppam - Tamil

ஜூலை 27 – மோசேயின் உண்மை!

“சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான்” (எபி. 3:5).

மோசேயைக் குறித்து வேதம் கொடுக்கிற அருமையான சாட்சியை வாசித்துப் பாருங்கள். மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவர், எதிலும் உண்மையுள்ளவர்! கர்த்தருக்கு முன்பாகவும், மனுஷருக்கு முன்பாகவும் உண்மையாய் நடந்து கொண்டார்!

“மோசே” என்ற வார்த்தைக்கு, “ஜலத்திலிருந்து எடுக்கப்பட்டவர்” என்பது அர்த்தமாகும். மோசேயின் பிறப்பின்போது, பிறந்த அநேகம் பிள்ளைகள் நைல் நதியின் ஜலத்திற்குள் மூழ்கி மரிக்க வேண்டியதாயிற்று. ஆனால் கர்த்தரோ மோசேயின் மேல் அன்புகொண்டு ஜலத்திலிருந்து தூக்கியெடுத்து, பார்வோனுடைய வீட்டில் வளரும்படி செய்தார். மோசே அந்த அன்பை மறந்துவிடாமல், நன்றியுடனிருந்தார்.

வேதம் சொல்லுகிறது, “மோசே தான் பெரியவனான போது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்” (எபி. 11:24-26).

வேதம் முழுவதையும் நீங்கள் வாசித்துப் பார்த்தால், “கர்த்தர் ஒரு மனுஷனை உயர்த்தும் இரகசியம் என்ன?” என்பதை அறிந்து கொள்ளலாம். கொஞ்சத்தில் உண்மையாய் இருக்கும்போது, கர்த்தர் அநேகத்தின்மேல் அதிகாரியாய் வைப்பார். அநேகத்தின் மேல் அதிகாரியாய் வைக்கும்போது அதிலும் உண்மையுள்ளவனாயிருந்தால் இன்னும் பொறுப்புக்களையும், உத்தரவாதங்களையும் தந்து உயர்த்துவார்.

மோசேயின் உண்மைத் தன்மையைப் பார்த்த ஆண்டவர், முழு இஸ்ரவேல் ஜனங்களையும் எகிப்திலிருந்து கானானை நோக்கி வழி நடத்தும் பொறுப்பை அவரிடம் கொடுத்தார். மோசேயின் மூலமாய் இஸ்ரவேலருக்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். மோசேயின் மூலமாய் பலத்த அற்புதங்களை எகிப்திலும் வனாந்தரத்திலும் செய்தார். மோசேயினுடைய வாழ்க்கையைப் பார்த்தால் கர்த்தர் எத்தனையோ முறை மோசேயைக்குறித்து நல்ல சாட்சிக் கொடுக்கிறதைக் காணலாம்.

மட்டுமல்ல, கர்த்தர் சொன்னார், “உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன். என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன். நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான் என்றார்” (எண். 12:6,7,8).

தேவபிள்ளைகளே, மோசேயைப்போல நீங்களும் உண்மையுள்ளவர்களாய் இருப்பீர்களென்றால், கர்த்தர் உங்களோடுகூடவும் முகமுகமாகப் பேசுவார்.

நினைவிற்கு:- “அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்” (வெளி. 17:14).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.