No products in the cart.
தினம் ஓர் ஊர் – அயோத்தியாபட்டினம் (Ayothiapattinam)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – சேலம்
தாலுகா – வாழப்பாடி
பரப்பளவு – 10 சதுர கிலோமீட்டர்கள் (3.9 sq mi)
மக்கள் தொகை – 11,517
கல்வியறிவு – 78.97%
District Collector and District Magistrate – Dr. R. Brindha Devi, I.A.S.
Commissioner of Corporation – Bro. Ranjeet Singh, I.A.S.
Additional Collector – Bro. N.Lalitaditya Neelam, I.A.S.,
Commissioner of Police – Sis. B. Vijayakumari,I.P.S.,
Superintendent of Police – Bro. A.K. Arun Kabilan, IPS.,
District Revenue Officer and
Additional District Magistrate – Dr. P. Menaha
Salem Municipality Commissioner – Bro. Y.Surendiran
Salem Mayor – Bro. A. Ramachandran
Deputy Mayor – Sis. Saradha Devi
மக்களவைத் தொகுதி – சேலம்
மக்களவை உறுப்பினர் – Bro. Tm Selvaganapathi (MP)
Principal District Judge – Sis. S.Sumathi (Salem)
District Munsif-cum- Judicial Magistrate – Sis. S.Shanmathi (Vazhapadi)
ஜெபிப்போம்
அயோத்தியாபட்டினம் (Ayothiapattinam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி தாலுகாவில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த பேரூராட்சியில் உள்ள புகழ்பெற்ற கோதண்டராமசுவாமி கோயிலின் காரணமாக இந்த கிராமம் அயோத்தியாபட்டினம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது தென்னிந்தியாவின் அயோத்தி என்றும் அழைக்கப்படுகிறது.
அயோத்தியாப்பட்டினம் சேலம் நகருக்கு கிழக்கே 7 கி.மீ. தமிழ்நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் இருந்து வரும் மக்களுக்கு சேலம் நகரின் நுழைவாயிலாக இது செயல்படுகிறது. இது ஏற்காட்டில் இருந்து 35 கிமீ, கோயம்புத்தூரில் இருந்து 168 கிமீ, பெங்களூருவில் இருந்து 195 கிமீ மற்றும் சென்னையிலிருந்து 330 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
இப்பேரூராட்சி சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Tm Selvaganapathi அவர்களுக்காகவும், Salem Municipality Commissioner Bro. Y.Surendiran அவர்களுக்காகவும், Salem Mayor Bro. A. Ramachandran அவர்களுக்காகவும், Deputy Mayor Sis. Saradha Devi அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்யும்படி ஜெபிப்போம்.
அயோத்தியாப்பட்டினம் நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இப்பேரூராட்சியில் உள்ள 15 வார்டு கவுன்சிலர்களுக்காகவும், அவர்களுடைய பணிகளுக்காகவும் ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டிலும் உள்ள மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட தேவைகள் நிறைவேற்றப்பட ஜெபிப்போம்.
அயோத்தியாப்பட்டினம் டவுன் பஞ்சாயத்தில் 11,517 மக்கள் தொகை உள்ளது, இதில் 5,726 ஆண்கள் மற்றும் 5,791 பெண்கள் உள்ளனர். மேலும் இப்பேரூராட்சி 2,982 குடும்பங்கள் வசிக்கிறார்கள். அயோத்தியாப்பட்டினத்தில், ஆண்களின் கல்வியறிவு 85.59% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 72.45% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 98.45%, முஸ்லீம்கள் 0.56%, கிறிஸ்தவர்கள் 0.91% மற்றும் சீக்கியர் 0.03% உள்ளிட்டவர்கள் இருக்கிறார்கள்.
மொத்த மக்கள்தொகையில், 5,211 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 3,500 ஆண்கள் மற்றும் 1,711 பெண்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்களின் செய்கின்ற தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம்.
அயோத்தியாப்பட்டினம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள மக்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். அயோத்தியாப்பட்டினத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம். சத்தியத்தை அறியாத மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம்.