bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

மே 23 – தேவனோடு ஐக்கியம்

“எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும், அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது” (1 யோவா. 1:3).

தேவன் மனுஷனை தம்முடைய சாயலாக சிருஷ்டிக்கச் சித்தங்கொண்டார். தேவன் மனுஷனை தம்முடைய சாயலாகவே சிருஷ்டித்தார் (ஆதி. 1:27). தேவன் ஆவியாயிருக்கிறார். ஆவியாயிருக்கிற தேவன் மனுஷனுக்குள் தம்முடைய ஆவியை வைத்ததினால், நாம் தேவனோடுகூட நமது ஆவியிலே உறவாடி மகிழ முடிகிறது.

சற்று சிந்தித்துப்பாருங்கள். நம்மை அறியாமலேயே நம்முடைய உள்ளம் தேவனோடு ஐக்கியம்கொள்ள ஏங்குகிறது. ஒரு மிருகத்தோடு ஐக்கியம்கொள்ள ஒருபோதும் நாம் விரும்புவதில்லை. ஏனென்றால், நாம் சிருஷ்டிக்கப்பட்டவிதம் வேறு. மிருகங்கள், ஊரும் பிராணிகள், மற்ற ஜீவ ஜந்துக்கள் சிருஷ்டிக்கப்பட்டவிதம் வேறு. ஒவ்வொரு மிருக இனமும், அதனதன் இனத்தோடு மட்டுமே ஐக்கியம் கொள்ளுகின்றன. ஆனால் நாமோ, தேவசாயலால் சிருஷ்டிக்கப்பட்டபடியினால், நமக்குள்ளே தேவ ஆவியானவர் வாசம்பண்ணுகிறபடியினால், தேவனோடு ஐக்கியம்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம்.

தாவீது அந்த ஐக்கியத்தை ஏங்கி எதிர்பார்த்தார், “மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது. நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?” (சங். 42:1,2) என்று சொல்லுகிறார்.

ஆம், உள்ளம் ஏங்குகிறது. ஆவி ஏங்குகிறது. தேவனோடுகூட நம்முடைய சரீரத்தினால் ஐக்கியம்கொள்ளுவது கூடாதகாரியம். நம்முடைய அறிவின்படியும் ஐக்கியம்கொள்ள இயலாது. அதே நேரத்தில் நாம் நம்முடைய ஆவியினாலே அவரோடுகூட ஐக்கியம் கொள்ளமுடியும். நாம் ஜெபிக்கும்போது நம்முடைய ஆவியானது தேவனோடுகூட இணைகிறது. நம்முடைய ஆவியிலே அவரோடுகூட உறவாடுகிறோம்.

இயேசு சொன்னார்: “தேவன் ஆவியாயிருக்கிறார். அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்” (யோவா. 4:24).

உலகத்தில் பாவம் பிரவேசித்து மனுஷனுடைய இருதயம் கறைப்பட்டபடியினாலே ஆவிக்குரிய ஐக்கியம் தடைப்பட்டது. ஆனாலும் கர்த்தர் மனுஷனோடு இன்னும் உறவாட விரும்பி பாவங்களுக்காக சிலுவையிலே இரத்தம் சிந்தியதுடன் பரிசுத்த ஆவியையும் ஊற்றிக்கொடுத்தார். அந்தப் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசமாயிருக்கிறபடியினாலே, நாம் கர்த்தரோடுகூட இன்னும் நெருங்கி ஜீவிக்க முடிகிறது.

வேதம் சொல்லுகிறது, “நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாயிருப்போம். அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (1 யோவா. 1:6,7).

தேவபிள்ளைகளே, விசுவாசத்தோடுகூட, “எங்கள் தேவன் ஆவியாய் இருக்கிறார். எங்களுக்குள்ளே ஆவியை அவர் வைத்திருக்கிறார். எங்கள் ஆவி கர்த்தரில் களிகூரும்படி பரிசுத்த ஆவியானவரை எங்களுக்குள் தந்திருக்கிறார். ஆகவே கர்த்தரோடு ஐக்கியங்கொள்ளுவோம்” என்று சொல்லி தேவனை ஸ்தோத்திரியுங்கள். தேவனோடுகூட உள்ள ஐக்கியத்தை என்றென்றும் காத்துக்கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்” (சங். 149:4).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.