situs toto musimtogel toto slot musimtogel link musimtogel daftar musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

மே 14 – நாங்கள் மன்றாடினோம்!

“கர்த்தரை நோக்கி நாங்கள் மன்றாடினோம்; அவர்எங்களுக்குச் செவிகொடுத்து, ஒரு தூதனை அனுப்பி, எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார் (எண். 20:16).

உங்கள் ஜெபத்தோடுகூட விண்ணப்பத்தையும், துதிஸ்தோத்திரத்தையும், மன்றாட்டையும்சேர்த்துக்கொள்ளுங்கள். மன்றாட்டின் ஜெபம் மகாவல்லமையுள்ளது. அது சாதாரண ஜெபத்தைவிட மிக ஆழமும், மேன்மையுமானது. மன்றாட்டு என்ற தமிழ் வார்த்தையானதுIntercession என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதற்கு நடுவிலே நிற்பது என்பது அர்த்தமாகும். எரேமியாதீர்க்கதரிசி அந்த மன்றாட்டு ஊழியத்தை செய்தபோதுகர்த்தருக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் நடுவிலே நின்றார்.

இன்றைக்கு நாமும்கூட பிரச்சனை உள்ள மக்களுக்காக, போராட்டமான சூழ்நிலைக்காக தேவ சமுகத்திலே நின்றுமன்றாட கற்றுக்கொள்ளவேண்டும். கர்த்தர் சொல்லுகிறார், “நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும்சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்” (எசே. 22:30).

மன்றாட்டின் ஜெபத்திற்கு நிச்சயமாகவே பதிலுண்டு. உங்களுடைய பிள்ளைகளுக்காக, குடும்ப ஐக்கியத்திற்காக, சபைக்காக, தேசத்துக்காக உபவாசமிருந்து மன்றாடுங்கள். உங்களுடைய கண்ணீரின் மன்றாட்டை கர்த்தர்புறக்கணித்தவராய் ஒருநாளும் கடந்துபோகமாட்டார்.

உலகப்பிரகாரமான ஒரு இராஜா எஸ்தரைப் பார்த்து, ‘உன்மன்றாட்டு என்ன? அதன்படி செய்யப்படும்’ (எஸ். 5:3, 7:2) என்று வாக்குக்கொடுத்து அதை நிறைவேற்றுவாரானால்இராஜாதி இராஜாவும், கர்த்தாதி கர்த்தருமாகியஇயேசுகிறிஸ்து உங்களுடைய மன்றாட்டை எவ்வளவுகருத்தாய் விசாரித்து உங்களுக்கு பதிலளிப்பார்!

ஜனங்களுக்காகவும், சபைக்காகவும், தேசத்திற்காகவும்மன்றாட்டு ஜெபங்களை ஏறெடுப்பதற்கு உங்களுடையஉள்ளத்திலே மனதுருக்கம் மிகவும் அவசியம். இயேசுகிறிஸ்துமனதுருகி அற்புதங்களைச் செய்தார். மனதுருகி பரிந்துபேசினார். மன்றாட்டு ஜெபம் ஏறெடுத்தார் (யோவான் 17ஆம்அதிகாரம்) கிறிஸ்துவின் மனதுருக்கம் உங்களுடையஉள்ளத்தை நிரப்பும்போது நீங்கள் மன்றாட்டு ஜெபவீரர்களாய்மாறுவீர்கள்.

நீங்கள் மன்றாடி ஜெபிக்கும்போது இயேசுவும் உங்களுடையஅருகிலே நின்று உங்கள் ஜெபங்களை பிதாவுக்குத்தெரிவிக்கிறார். வேதம் சொல்லுகிறது, “நம்முடையபெலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதானஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல்சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதானஆசாரியரே நமக்கிருக்கிறார்” (எபி. 4:15).

மன்றாட்டு ஊழியத்தைச் செய்கிறவர்கள் ஒருபோதும்சோர்ந்துபோகக்கூடாது. விடாமுயற்சியோடு இடைவிடாமல்ஜெபம்பண்ணவேண்டும் (1 தெச. 5:17). ஜெபங்களுக்குப்பதில்பெறுவதில் தாமதம் ஏற்பட்டாலும் ஜெபத்தைவிட்டுவிடாதிருங்கள். ஏற்ற நேரத்தில் ஆண்டவர்நிச்சயமாகவே பதிலளிப்பார்.

தேவபிள்ளைகளே, உங்கள்மேல் மனதுருகிபரிதாபம்கொள்ளும் ஆண்டவர் ஜீவனோடிருக்கிறார். அவரும்மன்றாட்டு வீரர் அல்லவா? உங்களுக்குத் துணை செய்யாமல்இருப்பாரோ?

நினைவிற்கு:- “பின்பு சாமுவேல்: நான் உங்களுக்காகக்கர்த்தரை மன்றாடும்படிக்கு, இஸ்ரவேலர் எல்லாரையும்மிஸ்பாவிலே கூட்டுங்கள் என்றான்” (1 சாமு. 7:5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.