situs toto musimtogel toto slot musimtogel link musimtogel daftar musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

பிப்ரவரி 11 – தியானியுங்கள்!

“என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான்தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என்நாவினால் விண்ணப்பம் செய்தேன் (சங். 39:3).

தியான வாழ்வே நம் ஆத்துமாவுக்கு சத்துணவாய்விளங்குகிறது. நம்முடைய சரீரத்தை நலமுடன்காத்துக்கொள்ள நல்ல உணவு அருந்தி பலத்துடன்விளங்குகிறோம். ஆனால், ஆத்துமாவிலே பெலன்வேண்டுமானால் வேதவசனங்களே சத்துணவாகவிளங்குகின்றன.

வேத வசனத்தை தியானித்த அநேக பக்தர்களைக்குறித்துநாம் வேதத்தில் வாசிக்கலாம். ஈசாக்கு ஒரு தியான புருஷன். மாலை நேரமாகும்போது தனிமையாக நடந்து சென்றுகர்த்தரைக்குறித்தும், அவருடையவாக்குத்தத்தங்களைக்குறித்தும் தியானிக்கிற வழக்கத்தைக்கொண்டிருந்தார். அதற்கு அடுத்தப்படியாக மிகப்பெரியதியான புருஷன் என்றால் அது தாவீதுதான். “கர்த்தருடையவேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடையவேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்”என்று அவர் எழுதுகிறார் (சங். 1:2).

எல்லாத் தியானத்திலும் மிக மேன்மையான தியானம்சிலுவையைக்குறித்த தியானம்.  சிலுவையிலே தொங்கியகிறிஸ்துவைக்குறித்து நாம் தியானம்பண்ணும்போது, நம்முடைய மனம் அவர் மேல் ஒருமுகப்படுகிறது. தேவனுடைய அன்பு பெருவெள்ளம்போல் நம்முடையஉள்ளத்தில் ஓடிவருகிறது. அவருடைய இரத்தம் சொட்டுசொட்டாய் நம் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரைவிழுந்து நம்மைக் கழுவிச் சுத்திகரிக்கிறது.

ஒரு தேவனுடைய ஊழியக்காரரை கர்த்தர் வல்லமையாய்பயன்படுத்தினார். காரணம் அவர் தம்முடைய ஜெபத்தில்மூன்று அல்லது நான்கு நாட்கள் தேவ சமுகத்தில் விழுந்துகிடப்பார். ஊக்கமாய் ஜெபிப்பார். சாதாரணமாக நாம்அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் கருத்தூன்றிஜெபிக்கமுடியும். பிறகு நம்முடைய உள்ளத்தின்சிந்தனைகள் சிதற ஆரம்பிக்கின்றன. பல்வேறு எண்ணங்கள்வந்து ஜெப நேரத்தை பாழாக்குகின்றன.

ஆனால், அந்த பக்தன் சொன்னார், ‘நான்முழங்காற்படியிடும்போதெல்லாம் சிலுவையில் தொங்குகிறஆண்டவரை நோக்கிப்பார்ப்பேன். முள்முடி சூட்டப்பட்டஅவருடைய தலையைக் காண்பேன். எல்லாக்காயங்களையும் ஒன்றொன்றாக எண்ணியெண்ணி, ‘எனக்காக அல்லவா?’ என்று சொல்லி கண்ணீர் சிந்துவேன். தேவனுடைய அன்பு என் உள்ளத்திலே வருகிறது மட்டுமல்ல, ஒரு விண்ணப்பத்தின் ஆவியும் கிருபையின் ஆவியும்என்மேல் ஊற்றப்படும். அப்பொழுது எத்தனையோ மணிநேரங்கள் தொடர்ந்து ஜெபிக்க எனக்கு பெலன் தருவார்’என்றார். இது எத்தனை உண்மை!

கல்வாரிச் சிலுவையை நோக்கிப்பாருங்கள். பாவஎண்ணங்களை அழிக்க இயேசுவின் இரத்தத்தைதியானித்துப்பாருங்கள். அப்பொழுது உங்கள் இருதயம்உங்களுக்குள்ளே அனல்கொள்ளும். கர்த்தருடைய பல்வேறுபெயர்களை, அவருடைய குணாதிசயங்களை, தெய்வீகசுபாவங்களை, அவர் செய்த அற்புதங்களைத்தியானியுங்கள்.

கர்த்தரைத் துதிக்க எந்த நேரமாயிருந்தாலும் அது ஏற்றநேரம்தான். அதிகாலைவேளை என்பது அவரைதியானிப்பதற்கு உகந்த வேளை. மத்தியான, மாலை, இரவுநேரங்கள்கூட அவருடைய வார்த்தையை தியானிப்பதற்குஅருமையான வேளைகள்தான். தேவபிள்ளைகளே, எல்லாநேரங்களிலும் அவரைத் தியானிக்க முற்பாடுங்கள்.

நினைவிற்கு:- “என் படுக்கையின்மேல் நான் உம்மைநினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத்தியானிக்கிறேன்” (சங். 63:6).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.