bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Appam, Appam - Tamil

நவம்பர் 06 – நம்பிக்கை வீண்போகாது!

“எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கைவைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப் போகாதிருந்தார்கள் (சங். 22:4,5).

தாவீது இராஜா முற்பிதாக்களின் வாழ்க்கையை எல்லாம் தியானித்துப்பார்த்தார். அவர்கள் கர்த்தர்மீது வைத்த நம்பிக்கைகளில் ஒன்றுகூட வீண்போகவில்லை. நம்பின அவர்களை அவர் விடுவித்து ஆசீர்வதித்தார்! ஆம், நம் அருமை ஆண்டவரின்மேல் நாம் வைக்கும் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது.

யோபு பக்தன், கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்தார். எத்தனை உறுதியான நம்பிக்கை அது! கர்த்தர் என்னைக் கொன்றுபோட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்றார் யோபு (யோபு 13:15).

சரீரம் வியாதிப்பட்டபோதிலும், மனைவி தூஷித்தபோதிலும், சிநேகிதர்கள் பரியாசம்பண்ணினபோதிலும் யோபுவின் நம்பிக்கையோ கர்த்தர்மேல் உறுதியாய் இருந்தது. கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான் என்ற வேத வசனத்தின்படியே யோபுவின் பிற்காலம் செழிப்பாய் இருந்தது.

ஆபிரகாமின் நம்பிக்கை வீண்போயிற்றோ? இல்லை. தனக்கு ஒரு ஆசீர்வாதமான சந்ததி வரும் என்று ஆபிரகாம் இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் காத்திருந்தார். அவருடைய சரீரம் செத்துப்போன நிலைமைக்கு வந்தபோதும் அந்த நம்பிக்கை குறையவில்லை.

அவருடைய மனைவிக்கு ஸ்திரீகளுக்குரிய வழிபாடு நின்றுபோய்விட்டபோதிலும் இயற்கை விதியின்படி அவர்களுக்கு குழந்தைபெற எந்த சாத்தியக்கூறும் இல்லாத வேளையிலும் ஆபிரகாமோ கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தார்.

வேதம் சொல்லுகிறது, “தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்” (ரோம. 4:20,21). அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை. புன்னகை என்று அர்த்தங்கொள்ளும் ஈசாக்கைப் பெற்றார். ஈசாக்கின் மூலமாகத்தான் இஸ்ரவேல் ஜாதியே உருவானது அல்லவா?

யோசேப்பின் வாழ்க்கையை வாசித்துப்பாருங்கள். யோசேப்புக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. கர்த்தர் ஒரு நாள் இஸ்ரவேல் சந்ததியை எகிப்திலிருந்து கானானுக்குள் கொண்டுபோவார் என்கிற நம்பிக்கை அது. அந்த நம்பிக்கையோடே தன் எலும்புகளை கானானுக்குள் கொண்டுபோகவேண்டுமென்று கேட்டுக்கொண்டார் (ஆதி. 50:24,25).

அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. ஏறக்குறைய நானூற்று முப்பது ஆண்டுகள் கழித்து யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு நாற்பது வருடங்கள் சுமந்து கானானுக்குள் கொண்டுசென்று அங்கு அடக்கம் செய்தார்கள். யோசேப்பின் நம்பிக்கை வீண்போகவில்லை.

அக்கினி சூளைக்கு எதிர் நின்றபோது சாத்ராக், மேஷாக் ஆபேத்நேகோவின் நம்பிக்கை வீண்போனதா? இல்லை. கர்த்தரை நோக்கித் திரும்பத்திரும்ப கூப்பிட்ட பிறவிக் குருடனாகிய பர்திமேயுவின் நம்பிக்கை வீண்போனதா? இல்லை. கர்த்தர் பார்வை அளித்தாரல்லவா? தேவபிள்ளைகளே, உங்கள் நம்பிக்கையும் வீண்போவதில்லை!

நினைவிற்கு:- “நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை” (சங். 26:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.