No products in the cart.

தினம் ஓர் ஊர் – வீரவநல்லூர் (Veeravanallur) – 24/02/24
தினம் ஓர் ஊர் – வீரவநல்லூர் (Veeravanallur)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருநெல்வேலி
மக்கள் தொகை – 19585
கல்வியறிவு – 87.05%
மக்களவைத் தொகுதி – திருநெல்வேலி
சட்டமன்றத் தொகுதி – அம்பாசமுத்திரம்
District Collector – Bro. K. P. Karthikeyan (I.A.S)
Superintendent of Police – Bro. N.Silambarasan (I.P.S)
District Revenue Officer – Sis. M.Suganya
Joint Director / Project Director – Bro. S.Suresh
மக்களவை உறுப்பினர் – Bro. S.Gnanathiraviam (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Esakki Subaya (MLA)
Deputy Mayor – Bro. K.R.Raju
Commissioner – Bro.V. Sivakrishnamurthy
Chief Judicial Magistrate – Bro. S. Manojkumar (Tirunelveli)
Principal Sub Judge – Bro. M. Amirtha Velu (Tirunelveli)
Principal District Judge – Sis. C.P.M. Chandra
District Munsif cum Judicial Magistrate Court – Bro. R.Rajalingam (Cheranmahadevi)
ஜெபிப்போம்
வீரவநல்லூர் (Veeravanallur) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டத்தில் இருக்கும் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த சிறந்த தலங்களான திருப்புடைமருதூர் – சேரன்மகாதேவி இடையில் வீரவநல்லூர் பேரூராட்சி அமைந்துள்ளது. இது திருநெல்வேலியிலிருந்து 28 கிமீ; தென்காசியிலிருந்து 40 கிமீ; ஆலங்குளத்திலிருந்து 40 கிமீ; களக்காட்டிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது. வீரவநல்லூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
வீரவநல்லூர் பேரூராட்சி திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் Bro. S.Gnanathiraviam அவர்களுக்காகவும், அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் Bro. Esakki Subaya அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுடைய பொறுப்புகளுக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியானது 9.13 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 129 தெருக்களும் கொண்டுள்ளது. இப்பேரூராட்சியில் 5317 குடும்பங்களும், 19585 மக்களும் வாழ்கிறார்கள். இதில் 9,491 ஆண்கள் மற்றும் 10,094 பெண்கள் உள்ளனர். இங்கு வாழும் மக்களுக்காக ஜெபிப்போம். அவர்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம்.
வீரவநல்லூர் ஊராட்சி மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.வீரவநல்லூர் ஊராட்சி மன்ற தொகுதிகளுக்காகவும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம். இவர்கள் தங்கள் பணியினை உண்மையாக செய்ய ஜெபிப்போம்.
வீரவநல்லூர் ஊராட்சியில் 242 குடிநீர் இணைப்புகள், 8 சிறு மின்விசைக் குழாய்கள், 21 கைக்குழாய்கள், 9 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 1 தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள், 31 உள்ளாட்சிக் கட்டடங்கள், 2 உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள், 23 ஊராட்சி ஒன்றியச் சாலைகள், 7 ஊராட்சிச் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கொண்டுள்ளது. இதற்காக ஜெபிப்போம்.
இந்த பேரூராட்சியின் நீர்வளம் ஆதாரம் தாமிரபரணி ஆறு ஆகும். 9 மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள் மூலம் 2330000 லிட்டர் குடிநீர் தினமும் விநியோகிக்கப்படுகிறது. இப்பகுதியில் விவசாயம், கைத்தறி, பாய் நெசவு மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. தனியார் நூற்பாலை மற்றும் காதி கிராமோதயம் சர்வோதயா சங்கம் தலைமயிடம் அமைந்துள்ளது. வீரவநல்லூர் பேரூராட்சி அடிப்படைய வசதிகள் அனைத்தும் நிறைந்த வளர்ந்து வரும் நகரமாகும். இந்த பேரூராட்சியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம்.
வீரவநல்லூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். வீரவநல்லூர் பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும், குடும்பங்களில் இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டு ஆண்டவரை ஏற்றுகொள்ளவும் ஜெபிப்போம்.