Daily Updates

தினம் ஓர் ஊர் – வத்தலகுண்டு (Vatthalagundu) – 09/04/25

தினம் ஓர் ஊர் – வத்தலகுண்டு (Vatthalagundu)

வட்டம் – நிலக்கோட்டை

மாவட்டம் – திண்டுக்கல்

மாநிலம் – தமிழ்நாடு

மக்கள் தொகை – 22,928

மொத்த பரப்பளவு  – 9.90 சகிமீ

கல்வியறிவு – 12.94 ச.கி.மீ.

மக்களவைத் தொகுதி – திண்டுக்கல்

சட்டமன்றத் தொகுதி – நிலக்கோட்டை

District Collector  – Bro.S. Saravanan, IAS

District Revenue Officer  – Sis. R.Jeyabharath

Superintendent of PoliceRevenue  – Dr.A.Pradeep IPS

PRINCIPAL DISTRICT AND

SESSIONS JUDGE  – Sis. A.MUTHU SARATHA

District Munsif – Bro. P.JAISANKAR (Nilakottai)

Judicial Magistrate  – Bro. R.RAGHURAMAN (Nilakottai)

ஜெபிப்போம்

வத்தலகுண்டு (Vatthalagundu) தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்புநிலை பேரூராட்சி ஆகும். இது தேனி – திண்டுக்கல் செல்லும் வழியில், தேனியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும், திண்டுக்கல்லிருந்து 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்தப் பேரூராட்சி கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ளது.

வத்தலக்குண்டு என்பது மருவுப்பெயர். இது குன்றுப்பகுதி மற்றும் இங்கு வெற்றிலை அதிகம் விளைவதால் இந்த ஊரை “வெற்றிலைக்குன்று” என அழைத்து வந்தனர். கால போக்கில் அது மருவி வெத்தலைக்குண்டு எனவும் பிறகு வத்தலக்குண்டு எனவும் பெயர் பெற்றதாக அறியப்படுகிறது.

இப்பேரூராட்சி, 12.94 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 169 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. வத்தலகுண்டு பேரூரட்சியின் மொத்த மக்கள்தொகை 22,928 ஆகும். இதில் இந்துக்கள் 81.80%, கிறித்தவர்கள் 5.35%, இசுலாமியர்கள் 12.68%, மற்றவர்கள் 0.17% ஆகவுள்ளனர்.

இங்கு வசிக்கும் பலர் பெரும்பாலும் வேளாண்மை சார்ந்த வர்த்தகம் செய்பவர்கள். வாழையிலை, வெற்றிலை, தேங்காய் தூள் ஏற்றுமதி, காரட், முட்டைக்கோஸ், ப்ளம்ஸ், தரகு வர்த்தகம், பருத்தி நெய்தல் முதலான வியாபாரம் செய்பவர்கள் அதிகம். விடுதலைப் போராட்டத் தியாகி சுப்பிரமணிய சிவா பெயரை, இங்குள்ள பேருந்து நிலையத்திற்கு வைத்து அரசு மரியாதை செய்திருக்கிறது.

வத்தலகுண்டு பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம். வத்தலகுண்டு பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். வத்தலகுண்டு பேரூராட்சியின் சட்டமன்ற உறுப்பினருக்காகவும், மக்களவை உறுப்பினருக்காகவும் ஜெபிப்போம். வத்தலகுண்டு பேரூராட்சியில் உள்ள விவசாய குடும்பங்களுக்காக ஜெபிப்போம். வத்தலகுண்டு பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.