No products in the cart.

தினம் ஓர் ஊர் – மேலகரம் (Melagaram) – 09/08/23
தினம் ஓர் ஊர் – மேலகரம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தென்காசி
மக்கள் தொகை – 14,644
கல்வியறிவு – 78%
மக்களவைத் தொகுதி – தென்காசி
சட்டமன்றத் தொகுதி – தென்காசி
மாவட்ட ஆட்சியர் – Bro. Durai Ravichandran (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. E.T.Samson (I.P.S)
District Revenue Inspector – Bro. M.Nagaranjan
Special Revenue Inspector – Bro. A.Abdul Kadar @ Abu
மக்களவை உறுப்பினர் – Bro. Dhanush M.Kumar (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. S.Palani Nadar (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. S.M.Farijan (Tenkasi)
நகராட்சி தலைவர் – Bro. R.Sadhir
நகராட்சி துணை தலைவர் – Bro. K.N.L.Subbaiah
Municipal Engineer – Bro. R.Jayaseelan
Principal District Munsif – Bro. K. Baskar
Additional District Judge – Sis. G.Anuradha
ஜெபிப்போம்
மேலகரம் (Melagaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேலகரம் பேரூராட்சி தென்காசியிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் தென்காசிக்கும் குற்றாலத்துக்கும் இடையே மேலகரம் அமைந்துள்ளது. மேலகரம் பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.
இந்த பேரூராட்சி தென்காசியிலிருந்து 3 கிமீ தொலவிலும், குற்றாலத்திலிருந்து 2 கிமீ தொலைவிலும், இலஞ்சியிலிருந்து 3 கிமீ தொலைவிலும், ஆயிரப்பேரிலிருந்து 4 கிமீ தொலைவிலும் உள்ளது. மேலகரம் பேரூராட்சிக்கு அருகாமையில் உள்ள ஊர்களுக்காக ஜெபிப்போம்.
6.56 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 90 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. தென்காசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் Bro. S.Palani Nadar அவர்களுக்காகவும், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Dhanush M.Kumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பினை உண்மையாக நிறைவேற்ற ஜெபிப்போம்.
மாவட்ட கலெக்டர் Bro. Durai Ravichandran அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. E.T.Samso அவர்களுக்காகவும், மாவட்ட வருவாய் ஆணையர் Bro. M.Nagaranjan அவர்களுக்காகவும், சிறப்பு மாவட்ட வருவாய் ஆணையர் Bro. A.Abdul Kadar @ Abu அவர்களுக்காகவும், ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆசீர்வதித்து வழிநடத்திட ஜெபிப்போம்.
தென்காசி மாவட்ட ஆணையர் Sis. S.M.Farijan அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. R.Sadhir அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. K.N.L.Subbaiah அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.இவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
மேலகரம் பேரூராட்சியில் மொத்தம் 14,644 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் ஆண்கள் 49% மற்றும் பெண்கள் 51% ஆக உள்ளனர். மேலகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 78% ஆகும். இந்த பேரூராட்சியில் மொத்தம் 5884 குடும்பங்கள் வாழ்கிறார்கள். இங்கு வாழும் மக்களுக்காக ஜெபிப்போம். குடும்பங்களின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
தமிழ்நாட்டின் முதல் வட்டார கிராமப்புற வங்கியான பாண்டியன் கிராம வங்கி அதன் கிளைகளில் ஒன்று மேலகரத்தில் உள்ளது. மேலும் என்ஜிஓ காலனி, ஸ்டேட் பாங்க் காலனி, இந்திரா நகர், மின் நகர், நன்னகரம், குடியிருப்புபாரதி நகர், என்ஜிஓ காலனி, ஸ்டேட் பாங்க் காலனி, இந்திரா நகர், மின் நகர் ஆகியவை கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக புதிதாக உருவாக்கப்பட்ட காலனிகள். இதற்காக ஜெபிப்போம்.
மேலகரம் பேரூராட்சியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காகவும், படிக்கும் மாணவர்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும், சுகாதார நிலையங்களுக்காக, பணிபுரியும் மருத்துவ ஊழியர்களுக்காகவும், அரசு அலுவலங்களில் வேலை செய்யும் அதிகாரிகள் மற்றம் ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் அனைவரும் தங்களுடைய பணியினை தேவ பயத்தோடு செய்ய கர்த்தர் கிருபை கொடுக்கும்படி ஜெபிப்போம்.