No products in the cart.
தினம் ஓர் ஊர் – மடத்துக்குளம் (Madathukulam) – 23/09/24
தினம் ஓர் ஊர் – மடத்துக்குளம் (Madathukulam)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருப்பூர்
மக்கள் தொகை – 181,386
கல்வியறிவு – 72.21%
District Collector – Bro. T Christuraj , I.A.S
District Revenue Officer – Bro. K Karthikeyan
Commissioner of Police – Sis. Lakshmi IPS
Superintendent of Police – Bro. Abhishek Gupta IPS
Municipal Commissioner – Bro. P.Balamurugan
Municipal Chairman – Bro. M.Matheen
Revenue Inspector – Bro. Kathirvel (Udumalpet)
Revenue Inspector – Bro. Mohan.M (Udumalpet)
மக்களவைத் தொகுதி – பொள்ளாச்சி
சட்டமன்றத் தொகுதி – மடத்துக்குளம்
மக்களவை உறுப்பினர் – Bro. Eswaraswami (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. C. Mahendran (MLA)
Principal District and Sessions Judge – Bro. N.Gunasekaran (Tiruppur)
District Munsif cum Judicial Magistrate – Bro. K.Vijayakumar (Madathukulam)
ஜெபிப்போம்
மடத்துக்குளம் (Madathukulam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்திலுள்ள, மடத்துக்குளம் வட்டம் மற்றும் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். மடத்துக்குளம் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
மடத்துக்குளம் வட்டம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக மடத்துக்குளம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 2 உள்வட்டங்களும், 18 வருவாய் கிராமங்களும் உள்ளது. இவ்வட்டத்தில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
மடத்துக்குளம் வட்டம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். இந்த நகராட்சி 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. Municipal Commissioner Bro. P.Balamurugan அவர்களுக்காகவும், Municipal Chairman Bro. M.Matheen அவர்களுக்காகவும், Revenue Inspectors Bro. Kathirvel மற்றும் Bro. Mohan.M அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இந்த நகராட்சி மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கும், பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது. மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் Bro. C. Mahendran அவர்களுக்காகவும், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் Bro. Eswaraswami அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
இவ்வட்டம் 181,386 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 90,338 ஆண்களும், 91,048 பெண்களும் உள்ளனர். 52,703 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் 72% வாழ்கின்றனர். இவ்வட்டத்தில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 14650 ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 94.3%, இசுலாமியர்கள் 4.6%, கிறித்தவர்கள் 1% மற்றும் பிறர் 0.11% ஆகவுள்ளனர்.
மடத்துக்குளம் வட்டம், 01.01.2010 அன்று, உடுமலைப்பேட்டை வட்டத்தின், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளைக் கொண்டு புதிய வருவாய் வட்டமாக பிரிக்கப்பட்டது இங்கு முக்கியமான தொழிலாக விவசாயம் உள்ளது. இது அமராவதி ஆறு மூலம் பாசனம் நடைபெறும் பகுதி ஆகும். இந்த அமராவதி ஆறு அமராவதி அணைக்கட்டிலிருந்து உருவாகி மடத்துக்குளம், சோழமாதேவி, கணியூர், காரத்தொழுவு மற்றும் கடத்தூர் வழியாக தாராபுரம் செல்கிறது.
இந்த நகரத்தை சுற்றியுள்ள பகுதி முக்கியமாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்பகுதிக்கு அருகில் ஆறு காகித ஆலைகளும், ஒரு சாய ஆலை, ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலை, ஒரு பால் பண்ணை ஆகியவை உள்ளன. உடுமலைப்பேட்டைக்கும் பழனிக்கும் இடையே மடத்துக்குளம் உள்ளது.
மடத்துக்குளம் நகராட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். மடத்துக்குளம் நகரத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். மடத்துக்குளம் பகுதியில் உள்ள விவசாய குடும்பங்களுக்காக ஜெபிப்போம். மடத்துக்குளம் நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.