Daily Updates

தினம் ஓர் ஊர்-புதுப்பட்டி (Pudupatti) – 03/11/23

தினம் ஓர் ஊர்-புதுப்பட்டி (Pudupatti)

மாநிலம்-தமிழ்நாடு

மாவட்டம்-தேனி

மக்கள் தொகை-11,511

கல்வியறிவு-78.11%

மக்களவைத் தொகுதி-தேனி

சட்டமன்றத் தொகுதி-கம்பம்

மாவட்ட ஆட்சியர்-Sis. R.V.Shajeevana (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர்-Bro. Dongare Pravin Umesh (I.P.S)

District Revenue Officer-Sis. Jeyabharathi

District Forest Officer-Bro. S.Kowtham

மக்களவை உறுப்பினர்-Bro. P. Ravindhranath (MP)

சட்டமன்ற உறுப்பினர்-Bro. Eramakrishnan (MLA)

நகராட்சி ஆணையர்-Bro. M.Ganesan

நகராட்சி தலைவர்- Sis. B.Renupriya

நகராட்சி துணை தலைவர்-Bro. M.Selvam

Principal District Judge -Sis. K. Arivoli

Judicial Magistrate -Bro. A.Ramanathan (Uthamapalayam)

Subordinate Judge -Bro. M.Shivaji Chellaih (Uthamapalayam)

District Munsif -Bro. A.Saravanasenthilkumar (Uthamapalayam)

ஜெபிப்போம்

புதுப்பட்டி (Pudupatti) என்பது தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது தேனியிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது. புதுப்பட்டி நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. புதுப்பட்டி பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சி பணிகளுக்காக ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியானது கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கம்பம் சட்டமன்ற உறுப்பினர் Bro. Eramakrishnan அவர்களுக்காகவும், தேனி மக்களவை உறுப்பினர் Bro. P. Ravindhranath அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களை தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.

புதுப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் 11,511 மக்கள்தொகை உள்ளது, இதில் 5,740 ஆண்கள் மற்றும் 5,771 பெண்கள் உள்ளனர். புதுப்பட்டியில் ஆண்களின் கல்வியறிவு 87.32% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 72.70% ஆகவும் உள்ளது. இந்த நகரத்தில் மொத்தம் 3,249 குடும்பங்கள் வாழ்கிறார்கள். இந்த பேரூராட்சியில் வாழும் மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், தேவைகளுக்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களில் தெய்வீக சமாதானம் உண்டாக ஜெபிப்போம்.

இந்த பேரூராட்சியில் திராட்சை, தென்னை, வாழை ஆகியவை முக்கிய பயிராகும். இங்குள்ள விவசாயிகளுக்காக அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம். விவசாயத்திற்கு நல்ல கால சூழ்நிலை மற்றும் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். அவர்களின் கையின் பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.

புதுப்பட்டி மொத்த மக்கள்தொகையில், 5,736 பேர் முக்கிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 3,482 ஆண்கள் மற்றும் 2,254 பெண்கள். இவர்கள் செய்கின்ற எல்லா வேலைகளிலும் கர்த்தருடைய கரம் அவர்களோடுகூட இருந்து பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம். தொழிலுக்கான பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.

புதுப்பட்டி பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். இங்கு சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் கர்த்தருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.