No products in the cart.
தினம் ஓர் ஊர் – பழுகல் (Pazhugal) – 21/09/23

தினம் ஓர் ஊர் – பழுகல் (Pazhugal)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
மக்கள் தொகை – 18,276
கல்வியறிவு – 77%
மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதி – விளவங்கோடு
மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)
துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)
District Revenue Officer – Bro. J.Balasubramaniam
District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)
Joint Director / Project Director – Bro. P.Babu
மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Sis. S.Vijayadharani (MLA)
மாநகராட்சி ஆணையாளர் – Bro. Anand Mohan
தாசில்தார் (Vilavancode) – Bro. ஆபிரகாம் டென்னி
Principal District Court – Bro. S.Arulmurugan
ஜெபிப்போம்
பழுகல் (Pazhugal) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த பேரூராட்சி கன்னியாகுமரியிலிருந்து 65 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் மார்த்தாண்டம் 15 கிமீ தொலைவில் உள்ளது. பழுகல் பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சி பணிகளுக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. விளவன்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Sis. S.Vijayadharani அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய ஆளுகையின் கரத்திற்குள்ளாக இவர்களை ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.
இந்தப் பேரூராட்சியானது 8.8 சதுர கிலோ மீட்டர் பரப்பில், 21 தெருக்களும், 4,429 வீடுகளும் கொண்டது. பழுகல் நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த நகரத்தின் பேரூராட்சி தலைவருக்காகவும், துணை தலைவருக்காகவும் ஜெபிப்போம். இந்த பேரூராட்சியின் தாசில்தார் Bro. ஆபிரகாம் டென்னி அவர்களுக்காக ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியில் உண்மையாக இருக்க ஜெபிப்போம்.
பழுகல் நகரம் 18,276 மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. மக்கள் தொகையில் ஆண்கள் 49% பேரும் மற்றும் பெண்கள் 51% பேரும் உள்ளனர். பழுகல் பேரூராட்சியின் சராசரி கல்வியறிவு விகிதம் 77% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். பழுகல் நகரத்தில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள 4429 குடும்பங்களுக்காக ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம்.
பழுகல் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து நகரமாகும். கண்ணுமாமூடு பழுகல் நகரின் ஒரு முக்கிய வர்த்தக மையம் ஆகும். இந்த நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் செய்கின்ற வேலைகளை எல்லாம் கர்த்தர் கரம் அவர்களோடுகூட இருந்து பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம். தொழில்களுக்கு தேவையான பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
பழுகல் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுடைய அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, மின்சாரம் உட்பட அனைத்து தேவைகளும் கிடைத்திட ஜெபிப்போம். பழுகல் பேரூராட்சியில் சத்தியத்தை அறியாத மக்கள் மத்தியில் ஆண்டவருடைய வார்த்தை அறிவிக்கப்பட ஜெபிப்போம். அநேக மக்கள் தொடப்பட்டு கர்த்தருக்காய் எழும்பி பிரகாசிக்க ஜெபிப்போம். இந்த நகரத்தில் படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், வாலிப பிள்ளைகளுக்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும் ஜெபிப்போம்.
