No products in the cart.
தினம் ஓர் ஊர் – பர்கூர் (Bargur) – 16/12/24
தினம் ஓர் ஊர் – பர்கூர் (Bargur)
மாவட்டம் – கிருஷ்ணகிரி
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 16,366
கல்வியறிவு – 70.9%
District Collector – Sis. K. M. Sarayu, I.A.S.,
Superintendent of Police – Bro. P. Thangadurai I.P.S
District Revenue Officer – Bro. Sadhanaikural
Sub Collector – Sis. Priyanga
மக்களவைத் தொகுதி – கிருஷ்ணகிரி
சட்டமன்றத் தொகுதி – பர்கூர்
மக்களவை உறுப்பினர் – Bro. K. Gopinath (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. D. Mathiazhagan (MLA)
Municipality Commissioner – Bro. T.KRISHNAMURTHI
Chairman – Sis. FARIDA NAWAB. B
Vice – Chairman – Sis. SAVITHIRI KADALARASU MOORTHY
Principal District and Sessions Judge – Bro. S.Kumaraguru (Krishnagiri)
ஜெபிப்போம்
பருகூர் (Bargur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பருகூர் வட்டம் மற்றும் பருகூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும். பருகூா் பேரூராட்சி விவசாயம், துணி வியாபாரம், மாங்கனி, தேங்காய், கிரானைட்டு கற்கள் கொண்ட நகரமாகும். பருகூர் நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் உள்ளது. பர்கூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் கிருஷ்ணகிரி உள்ளது. இதன் கிழக்கில் திருப்பத்தூர் 26 கி.மீ.; மேற்கில் கிருஷ்ணகிரி 16 கி.மீ.; வடக்கில் தெலங்கானா மாநிலத்தின் குப்பம் 24 கி.மீ.; தெற்கில் தர்மபுரி]] 65 கி.மீ. தொலைவில் உள்ளது.
பர்கூர் நகரப் பஞ்சாயத்து 1 நவம்பர் 1969 இல் உருவாக்கப்பட்டது மற்றும் 14 பிப்ரவரி 1985 இல் தேர்வு தர நகரப் பஞ்சாயத்தாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த நகரம் 22.5 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 32 தெருக்களையும் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இப்பேரூராட்சி பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் Bro. D. Mathiazhagan அவர்களுக்காகவும், கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி உறுப்பினர் Bro. K. Gopinath அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
பர்கூர் டவுன் பஞ்சாயத்தில் 16,366 மக்கள்தொகையும் இதில் 8,316 ஆண்கள் மற்றும் 8,050 பெண்கள் இருக்கிறார்கள். இப்பேரூராட்சி 3,760 குடும்பங்கள் வசிக்கிறார்கள். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 1810 ஆகும், இது பர்கூர் (TP) மொத்த மக்கள் தொகையில் 11.06 % ஆகும். இந்த நகரத்தில் 70.9% மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். பர்கூரில் ஆண்களின் கல்வியறிவு 86.13% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 73.09% ஆகவும் உள்ளது.
பர்கூா் பேரூராட்சி விவசாயம், துணி வியாபாரம், மாங்கனி, தேங்காய், மற்றும் கிரைனட் கற்கள் கொண்ட நகரமாகும். விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாய குடும்பங்களுக்காக ஜெபிப்போம். கர்த்தர் அவர்களின் தொழிலை ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். அவர்களின் கையின் பிரயாசத்தை வர்த்திக்க செய்யும்படி ஜெபிப்போம்.
பர்கூர் நகரத்திற்காக ஜெபிப்போம். பர்கூர் நகரத்தில் உள்ள மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி பாரத்தோடு ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் ஆண்டவருடைய வார்த்தை அறிவிக்கப்படவும், இரட்சிக்கப்படாத மக்கள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம். பர்கூர் நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.