Daily Updates

தினம் ஓர் ஊர் – தொட்டியம் (Thottiyam) – 08/06/24

தினம் ஓர் ஊர் – தொட்டியம் (Thottiyam)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – திருச்சிராப்பள்ளி

மக்கள் தொகை – 135,120

கல்வியறிவு – 74.83%

மக்களவைத் தொகுதி – பெரம்பலூர்

சட்டமன்றத் தொகுதி – முசிறி

மாவட்ட ஆட்சியர் – Bro. Pradeep Kumar (I.A.S)

Commissioner of Police  – Sis. N. Kamini (IPS)

Superintendent of Police – Bro. V. Varunkumar (IPS)

District Revenue Officer  – Sis. R. Rajalakshmi

Project Director – Bro. S. Devanathan

மக்களவை உறுப்பினர் – Bro. T. R. Paarivendhar (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. N. Thiyagarajan (MLA)

பேரூராட்சி தலைவர் (Thottiyam) – Sis. தமிழ்செல்வி திருஞானம்

Mayor – Bro. M. Anbazhagan

Deputy Mayor – Sis. G. Dhivya

Commissioner – Bro. R. Vaithinathan

Assistant Executive – Bro. V.Jeyakumar

Engineer (Planning)

Principal District Judge – Bro. K.Babu

ஜெபிப்போம்

தொட்டியம் (Thottiyam) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும். பேரூராட்சியும் ஆகும். திருச்சிக்கு 60 கிமீ தொலைவில் தொட்டியம் பேரூராட்சி உள்ளது. இவ்வூரில் அதிகமாக தொட்டிய நாயக்கர் என்ற இனத்தை சேர்ந்தவர்கள் வாழ்வதால் இவ்வூருக்கு தொட்டியம் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

தொட்டியம் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் 30 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம்.

மாவட்ட ஆட்சியர் Bro. Pradeep Kumar அவர்களுக்காகவும், Commissioner of Police Sis. N. Kamini அவர்களுக்காகவும், Superintendent of Police Bro. V. Varunkumar அவர்களுக்காகவும், District Revenue Officer Sis. R. Rajalakshmi அவர்களுக்காகவும், Project Director Bro. S. Devanathan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியானது 15.93 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 85 தெருக்களும் கொண்டுள்ளது. தொட்டியம் பேரூராட்சியின் தலைவர் Sis. தமிழ்செல்வி திருஞானம் அவர்களுக்காகவும், இந்த பேரூராட்சியில் உள்ள கவுன்சிலர்களுக்காகவும் ஜெபிப்போம், இவர்கள் தங்கள் பணியை உண்மையாக நிறைவேற்றிட ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி முசிறி சட்டமன்றத் தொகுதிக்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. முசிறி சட்டமன்ற உறுப்பினர் Bro. N. Thiyagarajan அவர்களுக்காகவும், பெரம்பலூர் மக்களவை உறுப்பினர்Bro. T. R. Paarivendhar அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

தொட்டியம் தாலுகாவில் மொத்த மக்கள் தொகை 135,120 ஆகும். இதில் 67,266 ஆண்கள் மற்றும் 67,266 பெண்கள் உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 36,936 குடும்பங்கள் வாழ்கின்றார்கள். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 97.89%, கிறிஸ்தவர்கள் 0.96%, முஸ்லீம் 1.08% மற்றும் பிற மதங்களை சார்ந்தவர்கள் 0.05% ஆக உள்ளனர். தொட்டியம் பேரூரட்சி மக்களின் ஆசீர்வாதத்திற்காகவும், குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.

தொட்டியம் தாலுகா காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வளமான பகுதி. இந்த ஊரில் வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. எனவே இந்த ஊரைச் சுற்றிலும் வாழைமரத் தோப்புகள் அதிகமான நிலங்களில் காணப்படுகிறது. எனவே இதை வாழை நகரம் என்று குறிப்பிடுவதுமுண்டு. மொத்த தாலுகா விவசாயிகள் சதவீதம் 7.89 தொட்டியத்தில் உள்ளது, இவர்களில் 4.98 சதவீதம் ஆண் விவசாயிகள் மற்றும் 2.92 சதவீதம் பெண் விவசாயிகள்.  இந்த தாலுகாவில் உள்ள விவசாய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.