No products in the cart.

தினம் ஓர் ஊர் – திங்கள்நகர் (Thingalnagar) – 06/09/23
தினம் ஓர் ஊர் – திங்கள்நகர் (Thingalnagar)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
மக்கள் தொகை – 13,567
கல்வியறிவு – 78%
மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதி – குளச்சல்
மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)
துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)
District Revenue Officer – Bro. J.Balasubramaniam
District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)
Joint Director / Project Director – Bro. P.Babu
மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. J.G.Prince (MLA)
நகராட்சி ஆணையாளர் – Bro. S.Lenin
நகராட்சி தலைவர் – Bro. G.Arulshoban
நகராட்சி துணை தலைவர் – Bro. R.Unnikrishnan
Principal District Court – Bro. P.Ramachandran (Kanyakumari)
ஜெபிப்போம்
திங்கள்நகர் (Thingalnagar) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த பேரூராட்சி கன்னியாகுமரியிலிருந்து 43 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. திங்கள்நகர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
“திங்கள்நகர்” (ஆங்கிலத்தில் “திங்கள் மார்க்கெட்”) என்ற பெயரின் தோற்றம் என்னவென்றால், ஒவ்வொரு திங்கட்கிழமையும், அருகிலுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் சந்தையில் கூடுவார்கள். அதனாலேயே இந்த பேரூராட்சிக்கு இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
இப்பேரூராட்சி 8.15 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 28 தெருக்களும் கொண்டுள்ளது. இநத் பேரூராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களுக்காக அவர்களுடைய பணிகளுக்காக ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டு மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட ஜெபிப்போம்.
திங்கள்நகர் பேரூராட்சி குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. குளச்சல் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. J.G.Prince அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய ஆளுகையின் கரத்திற்குள்ளாக இவர்களை ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி 13,567 மக்கள்தொகையும் கொண்டது. இவர்களில் ஆண்கள் 49%, பெண்கள் 51% இருக்கிறார்கள். திங்கள்நகர் சராசரி கல்வியறிவு விகிதம் 78% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 76% ஆக உள்ளது. இந்த பேரூராட்சியில் மொத்தம் 3,538 குடும்பங்கள் உள்ளன. இங்கு வாழும் மக்களுக்காக ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தருடைய பாதுகாப்பு கரத்திற்குள் ஒப்புகொடுத்து ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்படவும், குடும்பத்தின் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.
திங்கள்நகர் பேரூராட்சியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் தொழில்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் கர்த்தருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம்.