Daily Updates

தினம் ஓர் ஊர் – சேந்தமங்கலம் (Sendamangalam) – 15/07/24

தினம் ஓர் ஊர் – சேந்தமங்கலம் (Sendamangalam)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – நாமக்கல்Set featured image

பரப்பளவு – 8.158 சதுர கிலோமீட்டர்கள் (3.150 sq mi)

மக்கள் தொகை – 19,750

கல்வியறிவு – 75.49 %

District Collector – Sis. S. Uma, IAS

Superintendent of Police – Bro. S.Rajesh Kannan, I.P.S

District Revenue Officer – Bro. R.Suman

Project Director – Bro. S.Vadivel

District Forest Officer  – Bro. S.Kalanithi, I.F.S.,

மக்களவைத் தொகுதி – நாமக்கல்

சட்டமன்றத் தொகுதி – சேந்தமங்கலம்

மக்களவை உறுப்பினர் – Bro. Madheshwaran (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. K. Ponnusamy (MLA)

Municipal Commissioner  – Bro. K.Sennukrishnan (Namakkal)

Municipal Chairman – Bro. D.Kalanithi (Namakkal)

Municipal Engineer – Bro. A.Shanmugam (Namakkal)

Town Planning Officer – Bro. B.Rajkumar (Namakkal)

Sanitary Officer – Bro. N.Thirumoorthy (Namakkal)

Principal District Judge – Bro. R.Gurumurthy (Namakkal)

Principal District Judge – Bro. R.Gurumurthy (Namakkal)

Judicial Magistrate  – Sis. G.K. Velumayil (Sendamangalam)

ஜெபிப்போம்

சேந்தமங்கலம் (Sendamangalam) தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தின், நாமக்கல்லின் புறநகரும், சேந்தமங்கலம் வட்டம் மற்றும் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும்,முதல் நிலை நகராட்சி ஆகும்.

சேந்தமங்கலம் நகரத்துக்கு வடக்கில் நாமக்கல் 8 கிமீ தொலைவிலும்; தெற்கில் இராசிபுரம் 22 கிமீ தொலைவிலும் உள்ளது. சேந்தமங்கலம் கொல்லிமலைக்கு அருகாமையில் உள்ளது.அருகிலுள்ள முக்கிய ஆறு காவேரி ஆகும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சேந்தமங்கலம் வட்டத்தில் சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, அலங்காநத்தம், எருமப்பட்டி, மேட்டுப்பட்டி ஆகிய குறுவட்டங்கள் அடங்கியுள்ளது.

சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்து 1961 ஆம் ஆண்டு முதல் தர டவுன் பஞ்சாயத்தாக உருவாக்கப்பட்டது, மேலும் இது 1984 முதல் தேர்வு தரமாக தரம் உயர்த்தப்பட்டு இன்றுவரை செயல்பட்டு வருகிறது.  டவுன் பஞ்சாயத்தின் பரப்பளவு 8.80 ச.கி.மீ.  சேந்தமங்கலம் நகரம் வளமான வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை கொண்டுள்ளது.

சேந்தமங்கலம் நகரமானது 18 மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்டுள்ளது. Municipal Commissioner – Bro. K.Sennukrishnan அவர்களுக்காகவும், Municipal Chairman – Bro. D.Kalanithi அவர்களுக்காகவும், Municipal Engineer – Bro. A.Shanmugam அவர்களுக்காகவும், Town Planning Officer – Bro. B.Rajkumar அவர்களுக்காகவும், Sanitary Officer – Bro. N.Thirumoorthy அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.

இந்த நகரம் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் Bro. K. Ponnusamy அவர்களுக்காகவும், நாமக்கல் மக்களவை உறுப்பினர் Bro. Madheshwaran அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை உண்மையாகவும், தேவ பயத்தோடும் செய்ய ஜெபிப்போம்.

சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் 19,750 மக்கள் தொகை உள்ளது, இதில் 9,697 ஆண்கள் மற்றும் 10,053 பெண்கள் உள்ளனர். சேந்தமங்கலத்தில் ஆண்களின் கல்வியறிவு 83.90% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 67.51% ஆகவும் உள்ளது. மொத்தம் 5,484 குடும்பங்கள் வாழ்கின்றார்கள். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 95.35%, முஸ்லீம்கள் 3.92%, கிறிஸ்தவர்கள் 0.70%, சீக்கியர் 0.01%, பௌத்த 0.01%, ஜெயின் 0.01% பேர் உள்ளனர்.

மொத்த மக்கள் தொகையில், 9,197 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 5,871 ஆண்கள் மற்றும் 3,326 பெண்கள். பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கின்ற வேலைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் ஜெபிப்போம்.

சேந்தமங்கலம் நகரத்திற்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், இரட்சிக்கப்படாத குடும்பங்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். தொழில்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.