No products in the cart.
தினம் ஓர் ஊர் – சிவகிரி (Sivagiri) – 28/07/23
தினம் ஓர் ஊர் – சிவகிரி
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தென்காசி
மக்கள் தொகை – 194,156
கல்வியறிவு – 73.58%
மக்களவைத் தொகுதி – தென்காசி
சட்டமன்றத் தொகுதி – வாசுதேவநல்லூர்
மாவட்ட ஆட்சியர் – Bro. Durai Ravichandran (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. E.T.Samson (I.P.S)
District Revenue Inspector – Bro. M.Nagaranjan
Special Revenue Inspector – Bro. A.Abdul Kadar @ Abu
மக்களவை உறுப்பினர் – Bro. Dhanush M.Kumar (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. T.Sadhan Tirumalaikumar (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. S.M.Farijan (Tenkasi)
நகராட்சி தலைவர் – Bro. R.Sadhir
நகராட்சி துணை தலைவர் – Bro. K.N.L.Subbaiah
Municipal Engineer – Bro. R.Jayaseelan
Principal District Munsif – Bro. K. Baskar
Additional District Judge – Sis. G.Anuradha
District Munsif cum Judicial Magistrate – Sis. P. Jeyakaleeswar
ஜெபிப்போம்
சிவகிரி (Sivagiri), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்த ஒரு பசுமை நிறைந்த பகுதியாகும். சிவகிரி திருநெல்வேலியிலிருந்து 100 கிமீ தொலைவிலும், சங்கரன்கோவில் 32 கிமீ தொலைவிலும், இராஜபாளையம் 20 கிமீ தொலைவிலும், புளியங்குடி 18 கிமீ தொலவிலும் உள்ளது. சிவகிரி பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
சிவகிரி வட்டம் தென்காசி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் என வாசுதேவநல்லூர், சிவகிரி, கூடலூர் என 3 குறுவட்டங்களும், 21 வருவாய் கிராமங்களும் உள்ளன. சிவகிரி வட்டத்தில் உள்ள வருவாய் கிராமக்ளுக்காக, கிராம மக்களுக்காக ஜெபிப்போம்.
இந்த நகரம் 47 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 103 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. T.Sadhan Tirumalaikumar அவர்களுக்காகவும், மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Dhanush M.Kumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.
சிவகிரி தாலுகாவில் மொத்தம் 194,156 மக்கள் வாழ்கிறார்கள்.அவர்களில் 95,537 பேரும், பெண்கள் 98,619 பேரும் உள்ளனர். சிவகிரி தாலுகாவில் மொத்தம் 54,421 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். மொத்த மக்கள் தொகையில் 37.3% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவர்களில் இந்துக்கள் 85.35%பேரும், இசுலாமியர்கள் 8.74% பேரும், கிறித்தவர்கள் 5.77% பிறர் 0.14% பேரும் இருக்கிறார்கள். சிவகிரி பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களுக்காக ஜெபிப்போம். குடும்பத்தின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
சிவகிரி என்பது தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து நகரம் மற்றும் சுற்றுலாத் தலமாகும். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தலையணை நீர்வீழ்ச்சி மற்றும் ராசிங்கபேரி கால்வாய் ஆகியவை முக்கிய சுற்றுலா அம்சங்களாகும். இந்த பேரூராட்சியில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்காக ஜெபிப்போம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக ஜெபிப்போம்.
இவ்வூரில் உள்ள அரசு மருத்துவமனைகள், கால்நடை மருத்துவமனை, பொதுப்பணி துறை, அஞ்சல் அலுவலகம், நீதிமன்றம், காவல்நிலையம், வனத்துறை அலுவலகம், மின்வாரிய அலுவலகம், கருவூலம், சார்பதிவாளா மற்றும் நெடுஞ்சாலை துறை ஆகிய அரசு அலுவலகங்களுக்காக ஜெபிப்போம். இந்த அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்காகவும், ஊழியர்களுக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.
சிவகிரி நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் கையிட்டு செய்கின்ற வேலைகளில் கர்த்தர் ஆசீர்வாதத்தை கொடுக்கும்படி ஜெபிப்போம். தொழிலுக்கு உண்டான பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். தொழில்களில் வளர்ச்சி உண்டாக ஜெபிப்போம்.
இந்த பேரூராட்சியில் உள்ள வாலிப பிள்ளைகளுக்காக, சிறுபிள்ளைகளுக்காக ஜெபிப்போம். கர்த்தர் இவர்கள் மத்தியில் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்படவும், ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியவும் ஜெபிப்போம். பிள்ளைகளுடைய எதிர்காலத்தை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.