No products in the cart.
தினம் ஓர் ஊர் – கொடுமுடி (Kodumudi) – 03/08/24
தினம் ஓர் ஊர் – கொடுமுடி (Kodumudi)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – ஈரோடு
பரப்பளவு – 11.65 சதுர கிலோமீட்டர்கள் (4.50 sq mi)
மக்கள் தொகை – 13,225
கல்வியறிவு – 79.62 %
District Collector – Bro. Raja Gopal Sunkara I.A.S.
Superintendent of Police – Bro. G. Jawahar, I.P.S.
District Revenue Officer – Bro. S. Santhakumar
Municipality Commissioner – Bro. Dr.Manish.N. I.A.S.
Revenue Divisional Officer – Bro. M. Sathish Kumar (Erode)
District Forest Officer – Bro. Kumili Venkata Appala Naidu, I.F.S.
மக்களவைத் தொகுதி – ஈரோடு
சட்டமன்றத் தொகுதி – மொடக்குறிச்சி
மக்களவை உறுப்பினர் – Bro. Prakash (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Sis. C. Saraswathi (MLA)
Principal District and
Sessions Judge – Bro. B.Murugesan (Erode)
ஜெபிப்போம்
கொடுமுடி (Kodumudi) தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில், கொடுமுடி வட்டத்தில் உள்ளதொரு பேரூராட்சி ஆகும். கொடுமுடி நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
கொடுமுடி வட்டம் ஈரோடு மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இவ்வட்டம் ஈரோடு வட்டத்தின் சில வருவாய் கிராமங்களைக் கொண்டு 8 மார்ச் 2016 அன்று புதிதாக நிறுவப்பட்டது. கொடுமுடி வருவாய் வட்டம் கொடுமுடி, கிளாம்பாடி, சிவகிரி என மூன்று குறுவட்டங்களுடன், 36 வருவாய் கிராமங்களுடன் கூடியது. இப்பேரூராட்சியில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் ஜெபிப்போம்.
கொடுமுடி கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 144 மீட்டர் (472 அடி) உயரத்தில் உள்ளது. மேலும் கொடுமுடி ஒரு சுற்றுலா தலமாகும். கொடுமுடியில் உள்ள புனித காவேரி நதி மற்றும் மகுடேஸ்வரர் கோவில் தென்னிந்தியா முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களை ஈர்க்கிறது. இந்த பேரூராட்சிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக ஜெபிப்போம்.
இந்த நகரமானது 11.65 ச.கி.மீ. பரப்பும், இப்பேரூராட்சிக்கு வடக்கில் 40 கி.மீ. தொலைவில், ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் நாமக்கல் 42 கி.மீ.; மேற்கில் காங்கேயம் 40 கி.மீ.; தெற்கில் கரூர் 28 கி.மீ. தொலைவில் உள்ளன. அருகில் உள்ள நகரங்களுக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Sis. C. Saraswathi அவர்களுக்காகவும், ஈரோடு மக்களவை உறுப்பினர் Bro. Prakash அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
கொடுமுடி நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இப்பேரூராட்சி 92 தெருக்களை கொண்டுள்ளது. இந்த பேரூராட்சியின் வார்டு கவுன்சில்களுக்காகவும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளுக்காகவும் ஜெபிப்போம்.
கொடுமுடி டவுன் பஞ்சாயத்தில் 13,225 மக்கள் தொகை உள்ளது, இதில் 6,527 ஆண்கள் மற்றும் 6,698 பெண்கள். இப்பேரூராட்சியில் மொத்தம் 3,946 குடும்பங்கள் வசிக்கின்றனர். கொடுமுடி பேரூராட்சியில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 62%. கொடுமுடி மக்கள் தொகையில் 8% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள். மொத்த மக்கள்தொகையில் இந்து 90.69%, முஸ்லிம் 8.22% மற்றும் கிறிஸ்தவர் 0.97% உள்ளனர்.
கொடுமுடி நகரத்தின் பொருளாதாரம் முக்கியமாக விவசாயம் மற்றும் சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்டது. மஞ்சள் மற்றும் கரும்பு விவசாயம் முக்கிய பயிர்கள். கொடுமுடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான அரிசி ஆலைகள் உள்ளன மற்றும் கொடுமுடி அருகே TNPL காகித ஆலைகள் உள்ளன. விவசாயிகளுக்காகவும், விவசாய குடும்பங்களுங்காகவும் ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள அரிசி ஆலைகளுக்காகவும், காதிக ஆலைக்காகவும் ஜெபிப்போம். ஆலைகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.