No products in the cart.

தினம் ஓர் ஊர் – கீழ்க்குளம் (Kilkulam) – 23/09/23
தினம் ஓர் ஊர் – கீழ்க்குளம் (Kilkulam)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
மக்கள் தொகை – 19033
மொத்த பரப்பளவு – 4.8 சகிமீ
கல்வியறிவு – 79%
மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதி – கிள்ளியூர்
மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)
துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)
District Revenue Officer – Bro. J.Balasubramaniam
District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)
Joint Director / Project Director – Bro. P.Babu
மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. S.Rajeshkumar (MLA)
மாநகராட்சி ஆணையாளர் – Bro. Anand Mohan
தாசில்தார் (Vilavancode) – Bro. ஆபிரகாம் டென்னி
Principal District Court – Bro. S.Arulmurugan
Principal District Court – Bro. P.Ramachandran (Kanyakumari)
ஜெபிப்போம்
கீழ்க்குளம் (Kilkulam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சிச்யில் இனயம் துறைமுகத் திட்டம் செயல்பட இந்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இப்பேரூராட்சிக்கு கிழக்கே கருங்கல் 3 கிமீ; மேற்கில் தேங்காப்பட்டினம் 1 கிமீ; வடக்கே மார்த்தாண்டம் 9 கிமீ; இனயம் புத்தந்துறை 2 கிமீ தொலைவில் உள்ளது. கீழ்க்குளம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
கீழ்குளம் பேரூராட்சியானது இயற்கை அழகோடு காட்சியளிக்கும் ஒரு அழகிய ஊர் ஆகும். இப்பேரூராட்சியில் அடங்கிய ஹோலி ஏஞ்சல் மெட்ரிக்குலேசன் பள்ளி ஆனது சிறந்த டாக்டர்களையும் இன்ஜினியர்களையும் உருவாக்கி வருகின்றது. இப்பேரூராட்சியிலிருந்து Bro. Dennis (Former Member of the Lok Sabha) என்பவர் சிறந்த எம்பியாக 6 முறை பார்லிமெண்டுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பேரூராட்சி கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. S.Rajeshkumar அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியானது 18 வார்டுகளையும், 54 தெருக்களையும், 5278 வீடுகளையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களுக்காகவும், அவர்களுடைய பணிகளுக்காகவும் ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள தெருக்களுக்காகவும், வீடுகளுக்காகவும் ஜெபிப்போம். இந்த பகுதிகளில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளுக்காக ஜெபிப்போம்.
கீழ்க்குளம் பேரூராட்சியில் மொத்த மக்கள்தொகை 19033 ஆகும். இதில் 51% ஆண்களும் 49% பெண்களும் உள்ளனர். கீழ்குளம் சராசரி கல்வியறிவு விகிதம் 79% ஆகும். இந்த நகரத்தில் மொத்தம் 5278 குடும்பங்கள் இருக்கிறார்கள். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். குடும்பத்தில் உள்ள சிறுபிள்ளைகளுக்காகவும், வாலிப பிள்ளைகளுக்காகவும் ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத பிள்ளைகளின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம்.
கீழ்க்குளம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் ஆண்டவருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம். அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவும், கர்த்தருக்காக எழும்பி பிரகாசித்திடவும் ஜெபிப்போம். சபைகள் இல்லாத பகுதிகளில் புதிதாக சபைகள் கட்டப்பட ஜெபிப்போம்.